Header Ads



2005 இல் மஹிந்தவுடன் முரண்பட்ட மைத்திரி, மகாவலி அமைச்சை கைவசம் வைத்திருப்பதன் மர்மம் இதுதான்

-Vi-

என்னை ஜனாதிபதி கதிரைக்கு அமர வைத்தது முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ என்று நகைச்சுவையாக பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பாரிய அபிவிருத்தி செயற்திட்ட பணிகளுக்கு காலம் கடத்துவது மக்களுக்கு துரோகமிழைக்கும் செயலாகும். மொறகஹகந்த செயற்திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ ஐந்து வருட காலமாக உரிய நிதியினை ஒதுக்கவில்லை. இதன் மூலம் அவர் என்னை பழிவாங்கவில்லை மாறாக ரஜரட்டை  மக்களையே பழிவாங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ரஜரட்டை மக்களின் நலனுக்காக மொறகஹகந்த செயற்திட்டத்தினை முழுமையாக செய்து முடிப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

மொறகஹகந்த செயற்திட்டப் பணிகளை   நேற்று பார்வையிட செல்வதற்கு  முன்பு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டிய பின் மகாவலி அமைச்சராக என்னை நியமித்தார். இதன் போது ரஜரட்டை மக்களின் நலனுக்காக மொறகஹகந்த செயற்திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எனினும் இந்த அடிக்கல் நாட்டு விழா நிறைவு பெற்று 48 மணி நேரத்தில் அமைச்சரவை திருத்தத்தினூடாக மகாவலி அமைச்சு பதவியிலிருந்து தன்னை நீக்கி விட மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்.

மகாவலி அமைச்சு பதவிக்கு பதிலாக விவசாய துறையை என் மீது சுமத்த நடவடிக்கை எடுத்தமையை அப்போதே நான் அறிந்திருந்தேன். இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று மொறகஹா கந்த  செயற்திட்டம் எனது நீண்ட நாள் கனவாக ஆகவே மகாவலி அமைச்சை என்னால் விட்டு கொடுக்க முடியாது. மகாவலி அமைச்சை எனக்கு வழங்காவிட்டால் வேறு எந்த அமைச்சு பதவியும் எனக்கு தேவையில்லை நான்  பொலனறுவைக்கே சென்று வருவேன். இதன்  பிற்பாடு அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் என்னுடன் பெரும் வாக்குவாதமும் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் சகோதரர்களான சமல் ராஜபக்ஷவும் தன்னை இந்த ஜனாதிபதி கதிரைக்கு அமர வைத்த பஷில் ராஜபக்ஷவும் அமர்ந்திருந்தனர்.

மகாவலி அமைச்சை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கவே ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். என்னுடைய அழுத்தத்துக்கு மத்தியில் குறித்த அமைச்சை தன்னிடம் ஒப்படைத்த போதும் 2010 ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராகும் வரை ஒரு சதம் கூட, இத்திட்டத்திற்கு ஒதுக்கவில்லை. இதன் காரணமாக பொலனறுவை மக்கள் மத்தியில் என்னால் முகங்கொடுக்க முடியவில்லை.

2010 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வாவிற்கு குறித்த அமைச்சை ஒப்படைத்த போதும், எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை  என்றே அவரும் கூறினார். 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன தனது ஆட்சியில் மகாவலி திட்டத்திற்கே முக்கியத்துவமளித்தார். நாட்டு மக்களின் நலனுக்காக அபிவிருத்தி அவசியமாகும். எனவே பாரிய அபிவிருத்தி பணிகளுக்கு காலம் கடத்துவது நாட்டு மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். எனவே எனது ஆட்சியின் கீழ் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் என்னை பழிவாங்குவதாக நினைத்து பொலனறுவை மக்களையே அவர் பழிவாங்கியுள்ளார். எனவே மொறகஹகந்த செயற்திட்டத்தை எனது ஆட்சியில் செய்து முடிப் என்றார்.

No comments

Powered by Blogger.