Header Ads



சிறையில் இருந்து வெளியேறுமா முஸ்லிம் கட்சிகள்..?

-இனியவன் லாகிர் நப்ரிஸ்-

நடைபெறப்போகும் ஜனாதிபதி  தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு வரலாற்று நிகழ்வு ,அரசியல் முதிர்ச்சி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மோதிக்கொள்ளும் அரசியல் போர்  களம்    இந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் உச்சகட்ட தேர்தல் வன்முறைகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் முகம்கொடுத்துள்ளது, 

இரு பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களும் பயணிக்கும் ஓடு பாதை  சிங்கள பேரினவாத  வாக்குகள் இருந்தும் அவர்களின் துரும்பு சீட்டு சிறுபாண்மை கட்சிகள் , இந்த சிறுபாண்மை கட்சிகளின் வாக்குகள்தான்  இவர்களின் எதிர்காலம், அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன இலங்கை சிறுபாண்மை மக்களின் வாக்குவங்கிகளை பிரதிநிதித்துவம் படுத்தும் பிரதான கட்சிகள்  இதில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பிரதிநிதித்துவம் படுத்தும் கட்சிகள் ஸ்ரீ.மு.கா , அ.இ.மு.கா,தே.கா  அந்தவகையில் அ.இ.மு.கா  இன்  கள அரசியல் நகர்வு  ஆளும்கட்சி பக்கமே சாய்வதுக்கான காற்று வீசுகிறது, இருந்தும் தலைவர் ரிசாத் அவர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்  வடக்கிலும் ,கிழக்கிலும் நடைபெற்ற ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஜனாதிபதி தலைமை இல் நடைபெற்ற இரு பிரதான கூட்டங்களுக்கும் அழைக்கப்பட்ட போதிலும் அவர் சமூகம் அளிக்கவில்லை , இருந்தும் இவரின் கட்சிக்கு அண்மையில் ஸ்ரீ.சு.க முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து அ.இ.மு.கா  கட்சியை சேர்ந்த அமீர் அலி அவர்களுக்கு கொடுத்ததை மறந்துவிட்டாரோ என்னவோ ,அல்லது  ரிசாத் அவர்களினால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நூறு ஏகர்  காணியை அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட போது மக்களின் எதிர்ப்பினால் மீண்டும் அரசாங்கத்தினால் வாங்கப்பட்டது ,அதை மீண்டும் அரசாங்கம் தேர்தல் நன்கொடையாக வழங்கியதை மறந்துவிட்டாரோ என்னவோ  அ.இ.மு.கா  அமைதி சில சந்தேக கண்னோடு அரசாங்கத்தினால் பார்க்கபடுகிறது. இருந்தும் கடந்த இரு ஜனாதிபதி தேர்தலின் போதும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்தார் இதேபோல் இம்முறையும் நடைபெற போவது திண்ணம். 


இலங்கை பெரும்பாண்மை முஸ்லிம்களின் வாக்குவங்கியை கொண்ட கட்சி ஸ்ரீ.மு.கா , இலங்கை முஸ்லிம் மக்களை  அபிலாசைகளை ,உரிமைகளை பிரதிநிதித்துவம் படுத்தும் பிரதானமான ஒரு முஸ்லிம் கட்சி , சுமார் மூன்று இலட்சம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட ஒரு கட்சி இருப்பினும் இவர்களின் இந்த வாக்குவங்கிகளை பெற்றுகொள்ள இரு பிரதான கட்சிகளும் அவா கொண்டு காணப்படுகிறார்கள் , இருந்தும் தலைவர் ஹகீம் அவர்களின் அமைதி  விடுகதை புதிராகவே  காணபடுகிறது, இவரின் புதிர்தான் என்ன????? இதுதான் இலங்கை அரசியல் மட்டத்திலும் , தொலைக்காட்சிகளும் , மக்கள் மன்றத்திலும் சூடாக பேசப்படும்  செய்தி, ஆனால் மக்கள் ஒரு செய்தியை புரிந்துகொள்ள வேண்டும் ஒரு கட்சின் தலைமைத்துவ பொறுப்பு என்பது ஒரு முக்கியமான ஒரு பணி , இதை சிறப்பாக நடத்தி வரும் ஒரு முஸ்லிம் கட்சிக்குள் பிரச்சனைகள் வருவது உண்மைதான் இருந்தும் அதில் இருந்து அந்த கட்சிக்குள்ளேயே காணப்படும் சில முனாபிக்குகள் தலைமைக்கு எதிராக செயற்படும்போது போது அந்த கட்சியை ஒரு நேர் வழி நோக்கி கொண்டு செல்வது  என்பது மிக கடினமான உழைப்பு, அல்லாஹ் கூறுகிறான பொறுமையை கொண்டும், தொழுகையை கொண்டும் என்னிடம் உதவி தேடுங்கள் , ஒரு மனிதனின் பொறுமை என்பது மிக முக்கியமான ஒன்று அதுவும் ஒரு முஸ்லிம் கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு பொறுமை அற்று செயற்படுவது அதை பின்பற்றும் முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமாகவும் அமையும் .

கடந்த இரு ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீ.மு.கா வகுத்த தேர்தல்  தூரநோக்கு சிந்தனைகள்  பிழைத்து போனது, 2005 ம் தேர்தலில் ஐ.தே.க இன் வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் மேட்கொண்ட ஒப்பந்தத்தில் முக்கியமான கோரிக்கை பாராளுமன்றத்தில்  முஸ்லிம்களிக்கு தனி தரப்பு  ஒதுக்கப்படவேண்டும் இந்த கோரிக்கையை முன்நிலை படுத்தியே தேர்தல் பிரச்சாரங்கள் ஓங்கி நின்றன அதேநேரம் மஹிந்த ராஜபக்க்ஷ ஹக்கீம்  அவர்களை தொடர்பு கொண்டு ஜனாதிபதி தேர்தல் விடயமாக சந்திப்புக்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரியும் அதை செவிடன் காதில் சொன்னது போல கண்டும் கானது போல நடந்து கொண்டார் .  துரதிஷ்டவசமாக மகிந்தராஜபக்ச முதலாவது முறையாக தெரிவானார். இருந்தும் 2008 ம் ஆண்டு ஸ்ரீ.மு.கா   ஆளும் ஸ்ரீ .சு.க இணைந்தார்கள் . 2010ம் ஆண்டு ஜானதிபதி  தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தலின் போது  எதிர்கட்சி இன் சரத்பொன்சேகாவின் ஆதரவை பெற்று  முஸ்லிமக்குளை தன்னால்  சரத்பொன்சேகாவுக்கு பெற்றுதரமுடியும் என்று வாக்குறுதி அளித்தார், அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பீரங்கி அரசியல் பிரச்சாரம் செய்தது இருந்தும்  மூன்று தசாப்தம் நடந்து வந்த போரை 2009  ம் அண்டு மகிந்த ராஜபக்ஷ  முடிவுக்கு  கொண்டுவந்தார் இதனால் பெரும்பாண்மை மக்களின் வாக்குகள் அவருக்கு குவிந்தது , சிறுபாண்மை மக்களின்  பெரிதும் உதவியும் இல்லாமல் 18 இலட்சம் வாகுக்கலாள் வெற்றி பெற்றார். சிறிது காலத்தின்பின்  மீண்டும் 2010ம் ஆண்டு ஐ.ம.சு.க உடன் இணைந்தார்கள்,

இதனால் பெரும்பாண்மை கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் ஏளனத்துடன் பார்த்தனர், ஆளும்கட்சி கட்சியில் அமைச்சு பதவிகளை வகித்தும் அரசியல் அனாதைகள் போலவும், மாற்றான் பிள்ளை போலவும்  ஆளும்கட்சி பெரும்பாண்மை  தலைவர்களால் நோக்கப்பட்டனர், வேடிக்கை ஒன்று என்னவன்ரால் ஒன்று,இரண்டு பாராளுமன்ற உறுபினர்களை கொண்ட சிறிய முஸ்லிம் கட்ச்களுக்கு ஆளும்கட்சி உறுப்பினர்களிடம் இருகின்ற  அணியோனியம் இவர்களுக்கு இல்லை, இந்த சிறிய  முஸ்லிம் கட்சிகள்  , சிறிய வாக்குவங்கியை கொண்டதும் , ஓரிரு பாராளுமன்ற உறுபினர்களை கொண்ட  அ.இ.மு.கா மற்றும் தேசிய காங்கிரஸ் அரசாங்கத்திடம் அவர்களின் தேவையை , அபிவிருத்திகளை  இலகுவாக நடைமுறை படுத்தினர், ஆனால் அரசாங்கம் ஸ்ரீ.மு.கா கட்சியை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
 பெரும்பாண்மை  அடைவதுக்கும், 18 ம் திருத்தசட்டத்தை நிறைவேற்றுவதுகும் பயன்படுத்தியது, தம்புள்ளை பள்ளி உடைப்பு தொடக்கம் அலுத்கம கறுப்பு ஜூலை இனம் கலவரம் வரைக்கும் காரணமான கடும் போக்கு பேரினவாத  பொது பல சேனா  அமைப்புடன் அரசாங்கம் பின் நிண்டு இயங்கியது, அதை கண்டும் கொள்ளவில்லை,,முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  அதை பார்த்தும் ஊமைகளாக இருந்தார்கள் , தனது இன உரிமைகளை கதைக்ககூட  மறுக்கப்பட்டு அரசியல் பிணம் ஆனார்கள், 

ஸ்ரீ.மு.கா இன் தலைவரின் அமைதி சில எதிர்கால மாற்றங்களை கூறுகிறது, மக்களின் அபிலாசைகள் எதிர் அணி பக்கம் சாய்ந்திருக்கும் தருணத்தில் , தானும் அதே  போல் ஆதரிக்கும் இடத்து துரதிஷ்டவசமாக மகிந்தவின் ஆட்சி மீண்டும் ஏற்படின்  ஸ்ரீ.மு.கா இன் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் அடுத்து வரும் எட்டு வருடங்களுக்கு  அனாதைகள் போல ஆகிவிடும் மீண்டும் இனவாதம் தலை தூக்கும், அல்லது மக்களின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் ஆளும்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் இடத்து ஸ்ரீ.மு,கா இரண்டாக பிளவுபடும் , முஸ்லிம் மக்களிடம் அரசியல் நிர்வாணம் ஆக்கப்படுவார்கள், இது திண்ணம். 
அரசை பகைகாமலும் சமூகத்தை ஏமாற்றமலும் ஒரு முடிவு எட்டப்படவேண்டும். 

தேசிய காங்கிரஸ் நிலைப்பாடு நாம் யாவரும் அறிந்த ஒன்றுதான் ,தே.கா தலைவர் சொல்வது பொல '' மக்காள் நானும் நீங்களும்  மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் இறுதி வாரிசு வாழும் வரைக்கும் நாம் அவர்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள் மக்காள் ''  இப்படியான தலைவர்கள் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிரார்கள். முஸ்லிம் சமூகத்துக்கு உரிமை எனும் குரல் எழுப்பிய அரசியல் வாதிகள் எத்தனை பேர்?? 

முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஆளும்கட்சி சிறையில் இருந்து வெளியாகும் நாள் விரைவில் வரும் இல்லை என்றால் இவர்கள் அரசியலில் மக்களால் நிர்வாணம் ஆக்கப்படுவது திண்ணம், இவர்களின் பிழையான முடிவுகளால் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் அரசியல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாக  மாற்றப்படகூடாது. நடை பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவை  தெரிவிக்காமல்  நடுநிலை  வகிப்பது நன்று என்று எனது எண்ணம் .இதனால் எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பில் இருந்தும் அரசியல் பழிவாங்கலில் இருந்தும் காக்கலாம், அனால் ஜனநாயகம் மறுக்கப்பட்ட ,ஊழல் , இனத்துவேசம் நிறைந்த சிறையில் இருந்து  வெளியேறுவது    நன்று இருந்தும்  முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்தித்து செயற்படுவது சிறந்தது

1 comment:

  1. என்ன சொல்லியும் உறைக்காத தலவர்களுக்கு
    ஏது சொல்லி என்ன பிரயோசனம்?
    இவர்கள் ஆழும் தர்ப்போடு குடும்பம் நடத்தினாலும்
    இப்போதும் முஸ்லிம்கள் அநாதைகளாகத்தான்
    இருக்கிறார்கள். தமது இருப்புக்களுக்காகவும்
    இலாபங்களுக்காகவும் முஸ்லிம்களின் நலன்
    பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் அரசுடன் இருப்பது
    அரசுக்குத்தான் இலாபம். அப்போதுதான் முஸ்லிம் சமூகம்
    தாக்கப்படும் போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் " இது எதிர்க்கட்சிகளின்
    சதி என்று" ஸ்டேட்மெண்ட் கொடுக்க ஆளும் கட்சிக்கு ஆட்கள் தேவைப்படும்
    போது இவர்களைப் பயன்படுத்த முடியும். உங்களை இந்த சமூகம் தூக்கி எறியும்
    காலம் மிக தூரமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.