Header Ads



உலகளவில் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக பாகிஸ்தான்

உலக அளவில் பாகிஸ்தான் அணுஆயுத பொருட்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானிடம் 200-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருக்கும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டது.தற்போது உலக அளவில் ஈரான் மட்டுமே அதிகளவில் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த நாட்டுடன் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அணு ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றன. எனினும், அணு ஆயுத பரவல் தடை சட்டத்தினால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், ஈரானுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. அணு ஆயுதங்களுக்கு தேவையான அணு பிளவு பொருட்களை பாகிஸ்தான் அதிகளவில் சேகரித்து வருகிறது. இதன்மூலம் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. பாகிஸ்தானில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 200-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு கையிருப்பில் வைத்திருக்கும். இதன்மூலம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக பாகிஸ்தான் திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்த அணு ஆயுதங்களை போர் விமானம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்த 11 இடங்களில் பரிசோதனை நிலையங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது. இதன்மூலம் ஆசிய பிராந்திய நாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய தீவிரவாதம், கடற்பகுதியில் தீர்க்கப்படாத எல்லை பிரச்னைகள் எழும்போது, இந்த அணு ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்த முடியும். இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளை அச்சுறுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.