Header Ads



''தேர்தல் விஞ்ஞாபனங்கள் பார்த்து தீர்மானம்'' மு.கா.செயலாளர் ஹசன் அலியின் கவனத்திற்கு

(நஜீப் பின் கபூர்)

ரவூப் ஹக்கீம் சொல்கின்ற படி எல்லாம் நடந்து கொள்வதற்கு நாம் என்ன ஆடு மாடுகளா என்று நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். நடை முறையில் அப்படியான துணிச்சல் உங்களுக்கு இருந்தால் அது மதிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். பாராட்டுக்கள்!

முஸ்லிம்கள் பற்றியும் கிழக்கு முஸ்லிம் குடிகளின் அரசியல் இருப்புத் தொடர்பாகவும் ரவூப் ஹக்கீமை விட ஓரளவு நீங்கள் சிந்திக்கின்றீர்கள் என்பது எமது அபிப்பிராயம். இப்போது கட்சியில் இருக்கின்ற சிரேஸ்ட உறுப்பினர். 

என்றாலும் உங்களுக்கு தேர்தல்களில் வெற்றி பெற்று பாராளுமன்றம் புகக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. இது அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டி பிரச்சினை. எனவே தேசியப் பட்டியலை நம்பித்தான் உங்கள் அரசியலும் பாராளுமன்றப் பிரவேசமும் இருக்கின்றது.

தற்போதுள்ள மு.கா. அசியல் சிந்தனையின் படி பாராளுமன்றத்திற்கு வெளியே நீங்கள் நின்றிருந்தால் என்னதான் சிரேஸ்ட உறுப்பினராக இருந்தாலும் மு.காவிருந்து நீங்கள் காணாமல்போய் விடுவீர்கள். எனவே தலைமையையும் சமாளித்து சமூகத்தைப் பற்றி பேச வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கின்றது.

எனவே ஹசன் அலி, காரியப்பர் போன்றவர்கள்  தலைமையின் விருப்பு வெறுப்புக்களுக்கும் சமூக உணர்வுக்குமிடையே வயிற்றுக்காக மனிதன் இங்கே கயிற்றிலாடுகின்றான் பாரு.... என்று நல்ல நேரத்தில் எம்.ஜீ.ஆர். பாடியது போன்று சமநிலை பேணியே பயணம் போக வேண்டி இருக்கின்றது என்பது இவன் கருத்து! 

நீங்கள் அப்படி இப்படி என்று கொஞ்சம் ஓவரானால் ஓரம் கட்டப்பட்டுவிடுவீர்கள் அப்போது கையாட்களை செயலாளர்களாக வைத்து இன்னும் சுதந்திரமாக காரியம் பார்க்க அவர்களுக்கு வழி திறந்து விடும்.!

தேர்தல்களில் மு.கா.சொல்லி மக்கள் வாக்குப் போட்ட வரலாறுகள் நிறையவே இருக்கின்றது. ஆனால் இப்போது மு.கா. சொல்லித்தான் முஸ்லிம்கள் வாக்குப் போடுகின்ற நிலை  இல்லை. எனவே இந்தத் தேர்தலில் மு.கா. வாக்கு வங்கியை வைத்து மஹிந்த ,மைத்திரி வெற்றிக் கணக்குப் பார்ப்பார்களாக இருந்தல், அது அவர்களது அறிவு சார்ந்து விவகாரம்.!

தேர்தல் விஞ்ஞாபனங்கள் பார்த்து தீர்மானம்!

என்ற உங்கள் அறிவிப்பைப் பார்த்து எழுந்திருக்கினற சந்தேகங்கள் தொடர்பாக சில கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று தோன்றுகின்றது.

01.நமது நாட்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது? விண்ணில் விதைத்த வேளாண்மையால் குடிகளுக்கு அரசி போட்ட நாடல்லவா இது.!

02.சந்திரிக்க, ரணில், மஹிந்த வாக்குறுதிகளை மீறினார்கள் என்று சொல்கின்ற நீங்களே தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து மு.கா. தீர்மானம் என்று கூறுகின்றீர்களே இது வேடிக்கையாகத் தெரிய வில்லையா?

03.மேலும் ஆளும் தரப்பில் (தி.மு) எதிர் தரப்பில் (தாச) கரையோர அலகு வாய்திறக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களே!

04.சரி நீங்கள் கேட்பது எல்லாம் தருகின்றார்கள் என்று எடுத்துக் கொள்வோம்! நீங்கள் கேட்கப்போது என்ன என்று இந்த சமூகத்திற்கும் தெரியத்தானே வேண்டும் அது பற்றியும் கொஞ்சம் ஊடகங்களுக்கு சொல்லுங்களே பார்ப்போம்.

05.பொது வேட்பாளர் களத்திற்கு வந்திருப்பது ஒரு அரசியல் மாற்றத்திற்கு என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் 100 நாள் வேலைத் திட்டம் என்று மூன்று பிரதான பொது திட்டத்திற்காக அணி சேர்ந்திருக்கின்றார்கள். அவர்களிடத்தில் போய் நீங்கள் எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள். அப்படி எதிர்பார்ப்பது எந்தளவு நாகரிகமானது

06.பிரேமதாசவை வைத்து அஸ்ரஃப் ஓரே இரவில் காரியம் பார்த்தது போல் இப்போது நீங்கள் காரியம் பார்க்க முடியும்தானே? அதற்கு நல்ல நேரம். அதுடன் நீங்கள் ஆளும் தரப்பு ஆட்கள் அல்லவா!. 

4 comments:

  1. They already achieved what wanted and took it home in briefcases, you don't know;

    ReplyDelete
  2. SLMC become curry leaves and doesn't have any principals. Take a lesson learnt from TNA, JVP, JHU......Overall these baggers are political prostitutes.

    ReplyDelete
  3. You have reached numerous agreement with this present government how long you've achieved. I think you could not. So why you all waiting for their manifesto and how can now only achieve with their election manifesto?

    ReplyDelete
  4. தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தற்போதைய நிலையில் பொதுமக்களிடம் யாருக்கு வாக்கல்க்க வேண்டும் என்ற முடிவை விடவேண்டும் ஏன் என்றால் தற்போது யார் வெல்லுவார் யார் தோற்றுப்போவார் என்பது முடிவெடுக்க முடியாத ஒரு பிரச்சினை ஆகவே பொதுமக்கள் அதாவது முஸ்லிம் தமிழ் மக்கள் தன விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கட்டும் அதேவேளை பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் தமிழ் கட்ச்சிகள் வெற்றிபெற்ற ஜனாதிபதியுடன் பேரம் பேசமுடியும் ஏன் என்றால் யாரு ஜனாதிபதியாக வந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இப்போது அரேவே இல்லை அதனால் வெற்றிபெறும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்ற ஆசியுடனே இருப்பார் என்பது சந்தேகத்துக்கு இடம் இல்லை அச்சந்தற்பத்தில் அழகான முறையில் தமிழ் முஸ்லிம் கட்ச்சிகள் பேரம் பேசமுடியும் ஆகவே இரு சமுதாயத்தின் தலைவர்களும் பொதுமக்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு நிம்மதியாக தூங்கவேண்டியதுதான்

    ReplyDelete

Powered by Blogger.