Header Ads



முஸ்லிம்கள் திரிசங்கு நிலையிலா..?

(சத்தார் எம் ஜாவித்)   

தேர்தல் என்றாலே வாக்காளராக இருக்கட்டும் அல்லது வேட்பாளராக இருக்கட்டும் அவர்கள் மனங்களில் ஒரு கலக்கத்தையே ஏற்படுத்துகின்றது. வாக்காளரைப் பொருத்வரையில் யார் யாருக்கு வாக்களிப்பது, யார் யாரை ஆதரிப்பது என்ற குழப்பங்களிலும் வேட்பாளர்களைப் பொருத்தவரையில் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட வேண்டும் என்ற சிந்தனையிலுமே காணப்படுகின்றனர்.

குறிப்பாக சிறுபான்மைச் சமுகங்கள் குழப்பத்திலும், கலக்கத்திலும் எதிர் கொள்ளும் ஒன்றாக தேர்தல்கள் காணப்படுகின்றது என்பதே யதார்த்தமாகும். காரணம் எப்படித்தான் தலைகீழாக நின்றாலும் சிறுபான்மை வாக்குப் பெரும்பான்மையை ஏற்படுத்திவிட முடியாது.

ஒரு அரசாங்கத்தின் ஆட்சியின் உறுதிப்பாட்டை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றனர் என்றால் அது மிகையாகாது. இலங்கையைப் பொருத்வரையில் சிறுபான்மையினர் தேர்தல்களில் பெரும்பான்மைக்கு பேரம் பேசும் சக்திகளாகவும், ஆட்சியினை நிர்ணயிக்கும் சக்திகாளாக கடந்த காலங்களில் விளங்கியிருந்துள்ளனர்.

எனினும் எந்தத்த தேர்தல்கள் வந்தாலும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதிலும், ஆட்சியாளர்களையும் தெரிவதில் திரிசங்கு நிலைமைகளை எதிர் கொள்வதும் முக்கியமான விடயங்களாகும்.

சிறுபான்மை மக்கள் எப்படித்தான் ஒன்று சேர்ந்தாலும் ஆட்சியில் முன்னிலை வகிக்கும் அல்லது ஆட்சியமைக்கும் விடயத்தில் பெரும்பான்மையை முந்திவிட முடியாது. ஆனால் ஆட்சியாளர்களும், அரசியல் வாதிகளும் தத்தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறி வைத்தே தமது காய் நகர்த்தல்களை முன்னெடுக்கின்றனர்.
மேற்படி நிலைமைகளுக்கு அப்பாவி வாக்காளர்களை திசை திருப்பும் கைங்கரியங்களை அரசியல் பலம் உள்ள அரசியல் வாதிகள் சாதுர்யாமாக மேற்கொண்டு தமது இலக்குகளை அடைந்து கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசாங்கங்களை தீர்மாணிக்கும் பெரும் சக்திகளாக முஸ்லிம்களின் வாக்குகளே காணப்பட்டன. அந்த நிலைமைகளும் இன்று வரை இலங்கையின் அரசியல் களத்தில் காணப்பட்டே வருகின்றன.

தற்போதைய நிலையில் இலங்கையின் அரசியல் கொள்கைகள் சற்று வித்தியாசமான அதாவது ஜனநாயக விதிமுறைகளுக்கும், அதன் சட்ட ஒழுங்குகளுக்கும் மாற்றமான முறையில் செல்வதாக எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் காரசாரமான கருத்துக்களை பாராளு மன்றத்திற்குள்ளும், வெளியிலும் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையின் ஜனநாயக உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு முரணான போக்கில் செல்வதால் சமுகங்களுக்கிடையில் உள்ள அடிப்படை உரிமைகளும் அவற்றின் தத்துவங்களும் புறக்கணிக்கப்பட்டு சமுகங்களுக்கிடையில் பிளவுகளும், பிரச்சினைகளும் மேலோங்கிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அரசியல் வாதிகள் தத்தமது சுய நலன்களுக்காக அப்பாவி வாக்காளர்களை விலைபேசி தமது அரசியல் சதுரங்கத்தில் வெற்றியைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த விடயங்களுக்கு பெருமளவான பொதுமக்களின் பணம் வீண் விரயமாகின்றமையும் அரங்கேறியே வருகின்றன.

தற்போது இலங்கையின் தலை விதியை நிர்ணயிக்கும் ஒரு விடயமாக ஜனாதிபதித் தேர்தல் பேசப்பட்டு வருகின்றன. அந்த விடயத்தை சற்று எடுத்து நோக்கும் போது இது அனைவர் மத்தியிலும் சாதக, பாதகத் தன்மைகளுடன் பேசப்பட்டு வருவதுடன் ஒரு சாரார் மாற்றம் ஒன்று தேவை என்ற கொள்கைகளிலும், மற்றொரு சாரார் நாட்டிற்கு மாற்றம் தேவiயில்லை தற்போதைய தலைவரே தேவை என்ற வாதங்களிலும் இறுக்கமாகக் காணப்படுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தை மக்கள் மத்தியில் இருந்து அவதாணிக்கும் போது மாற்றம் தேவை என்ற கருத்துக்கள் பலமாகக் காணப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் முதன்மைப்படுத்த தேவையான அனைத்து விடயங்களும் அரசியல் உயர் மட்டத்திலிருந்து தாராளமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என எதிர்க் கட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எனினும் வாக்காளர் மத்தியில் குழப்ப நிலைகைள் அதிகமாகக் காணப்படுவதுடன் அவர்கள் தற்போது தர்ம சங்கடமான நிலையில் காணப்படுவதுடன் தீர்க்கமான முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாத நிலைமைகளும் காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இலங்கையின் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மாற்றங்களை நாடியவர்களாகவே காணப்படுவதை அவதாணிக்கக் கூடியதாகவுள்ளது. காரணம் கடந்த காலங்களில் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதியின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறுபட்ட இனவாத  இன்னல்களுக்கு முகங்கொடுத்வர்களாக காணப்படுவதால் அவர்கள் தமது நிலைப்பாட்டில் சளரவில்லை என்பதும் காணப்படுகின்றது.

குறிப்பாக சிறுபான்மைச் சமுகங்கள் இருண்டும் சமய ரீதியாக தாராளமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காததும், இனவாதிகளை கட்டுப்படுத்தாததும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. என்னதான் மழுப்பு விடயங்கள் மேற் கொண்டாலும் மக்கள் தமது சமயக் கொள்கைகளில் இருந்தும் அவற்றைப் பாதுகாக்கும் விடயத்தில் இருந்தும் ஆளும் அரசாங்கங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்ற சைகையையே காட்டி நிற்கின்றன.

ஆனால் மக்களின் மேற்படி நிலைப்பாட்டிற்கு அப்பால் அம்மக்களை ஏதோ ஒரு வகையில் தம்வசப்படுத்தி அரசாங்கத்தை ஆதரிக்க வைப்பதற்கு பிரதேச வாரியான அரசியல் காய் நகர்த்தல்கள் தற்போது மிக வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

சிறுகான்மை மக்களைப் பொருத்தவரையில் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல மாறாக அவர்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், தமது உரிமைகளை அனுபவிக்கவுமே விரும்புகின்றனர்.

குறிப்பாக தமது சமய விழுமியங்கள், அதன் கலை கலாச்சாரக் கொள்கைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கும் அவற்றிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இல்லாதொழிக்கச் செய்வதற்கும் வரும் அரசாங்கங்கள் உரியவாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுக்கின்றனர்.

இன்று அதிகமானவர்களால் பேசப்பட்டு வரும் விடயம்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றும் அல்லது ஒழிக்கும் நடவடிக்கையாகும். குறிப்பாக ஆளுங்கட்சிகளுக்கு சவாலாக பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு நடவடிக்கைளில் களமிறங்கியிருக்கின்றன.

இந்த விடயத்தில் தற்போது அரசுடன் இணைந்துள்ள பல அரசியல் கட்சிகளின் அமைச்சர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் விலகிக் கொண்டு நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலைமைகளுக்குள் சிறுபான்மை முஸ்லிம்களையும் சிக்க வைத்து முஸ்லிம் சமுகத்தின் வாக்குகளை சின்னா பின்மாக்கி அவர்களை இரண்டுங் கெட்டான் நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதற்கான கைங்கரியங்களும் கூட வேகமாக இடம் பெற்று வருகின்றன.
உண்மையில் சிறுபான்மையினர் என்ற வகையிலும், கடந்த காலங்களில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள் என்ற வகையிலும் தேர்தல் என்ற விடயத்தில் பலமாகச் சிந்திக்க வேண்டிய நிலைமைகளிலுமே காணப்படுகின்றனர்.

முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களில் அரசாங்கத்தை பலமாக ஆதரித்தவர்களாகவும், ஜனாதிபதிக்கு அதிக ஆதரவு வழங்கியவர்களாகவுமே காணப்படுகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் சமய ரீதியாக அனுபவித்த துன்பங்களுக்கு சரியான நீதியோ அல்லது நியாங்களோ கிடைக்கவில்லை என்ற விஷணத்தில் காணப்பட்டு வந்தாலும் பல முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்தை உரிய நேரத்தில் பாதுகாக்க குரல் கொடுக்கா விட்டாலும் ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தம்மை மடயர்களாக ஆக்குவதில் வல்லவர்களாக காணப்படுவதாகவும் முஸ்லிம் புத்தி ஜீவிகளும், சமயப் போதகர்களும் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.

நடை பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமுகம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. காரணம் கனிசமான அளவு மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத்தயாராக இருந்து வருகின்ற போதிலும் அந்த ஆதரவு குறைந்து செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன.

அதாவது கடந்த சில வருடங்காளா முஸ்லிம் சமுகத்திற்கு முற்றிலும் விரோதமாகச் செயற்பட்ட முஸ்லிம் விரோத சக்தியான பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்மை முஸ்லிம் சமுகத்தின் சந்தேகங்கள் மட்டுமல்ல ஜனாதிபதிக்கான தமது ஆதரவை வழங்குவதில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தம்மீது மேற்கொள்ளப்பட்ட வடுக்கள் அகலாத வேளையில் எந்தவொரு முஸ்லிமும் தமது எதிரிகளுடன் இணைந்து வாக்களிப்பார்களா? அல்லது சேருவார்களா? என்பது  முக்கியமான விடயமாகும். இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரமகர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என முஸ்லிம் சமுகங்கள் கோரிக்கைகள் விடுக்கின்றனர்.

குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமுகத்தை தொடர்ந்தும் அதால பதாளத்திற்கு இட்டுச் செல்லும் கைங்கரியங்களில் ஈடுபடாது சமய ரீதியாகவும், சமுக ரீதியாகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் முஸ்லிம் சமகத்தின் மன நிலைமைகளை மாற்றுங் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்தை தேர்தல் என்ற பொறிக்குள் சிக்க வைத்து அவர்களை திரிசங்கு நிலைக்குள் இட்டுச் செல்ல வழி வகுக்க வேண்டாம் எனவும் தமது கவலையை தெரிவிக்கின்றனர்.

2 comments:

  1. our leader also afraiding for his file...!

    ReplyDelete
  2. போதும்... அல்ஹம்துலில்லாஹ் இந்த தேர்தலில் யாருக்கு வாகளிக்கனு என்று எந்த விதமனா குழப்பமும் முஸ்லிம்களுக்கு இலலை, மகிந்த&கோ BBS கூட்டணி எங்களுக்கு நல்லவே பாடம் நடத்தி காட்டிட்டாங்க....PLS ஆலோசனை போதும்

    ReplyDelete

Powered by Blogger.