Header Ads



துண்டு துண்டாக சிதறுகிறது லிபியா

லிபிய தலைநகர் திரிபோலியில் இயங்கும் கடைசி விமான நிலையமான மைடிகா விமானத் தளத்தின் மீது அந்நாட்டு யுத்த விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வான் தாக்குதலால் விமானத்தளத்தின் ஓடுபாதைக்கு அருகிலுள்ள பகுதியே சேதமடைந்துள்ளது. இதில் அருகில் இருக்கும் சிவில் வீடுகளும் சேதமாகியுள்ளன.

திரிபோலியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூட்டு ஆயுதக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்த வான் தாக்குதல் வெளிநாட்டு ஆதரவு கொண்ட படைகளின் ஆத்திரமூட்டும் செயல் என குறிப்பிட்டுள்ளது.

இந்த யுத்த விமானங்கள் மிஸ்ரட்டா நகரில் இருந்து பறந்து வந்ததாக குறிப்பிட்ட உள்@ர் ஊடகங்கள் அவை மைடிகாவில் இருந்து வந்ததாக பின்னர் தகவல் அளித்தன. மைடிகா விமானத்தளத்தில் இருந்து கடந்த ஜ{லை மாதம் தொடக்கம் நடத்தப்பட்டு வரும் வான் தாக்குதல்களில் திரிபோலியில் இருக்கும் பிரதான விமான நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த வான்தாக்குதலுக்கு லிபிய விமானப் படையின் தள பதி nஜனரல் சக்ர் அல் ஜரூ'p பொறுப்பேற்றுள்ளார். nஜனரல் ஜரூ'p லிபியா வில் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு எதிராக தன்னிச்சையாக போர் தொடுத்திருக்கும் முன் னாள் இராணுவ nஜனரல் கலீபா ஹப்தர் ஆத ரவு கொண்டவராவார். இவருக்கு லிபியாவின் இரா ணுவமும் ஆதரவளித்துள்ளது.

மறுபுறத்தில் திரிபோலியை மையமாகக் கொண்டு இயங்கும் லிபிய தேசிய அரசாக அறிவித்துக் கொண்டிருக்கும் அரசின் பிரதமர் ஒமர் அல் ஹஸ்ஸி குறிப்பிடும்போது தமது போட்டியாளர்க ளுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந் தது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்னர் யுத்தத்தையே அவர்கள் வலியுறுத்துகின்றனர் என்றார்.

"பிராந்திய சக்திகள் மற்றும் வேறு இடங்களின் ஆதர வுடன் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கும் எதிரிக ளுக்கு நாம் முகம்கொடுத்திருக்கிறோம்" என்று ஹஸ்ஸி குறிப்பிட்டார்.

லிபியாவின் ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பு தளபதி ஒருவரான சலா அல் பர்கி, லிபிய புரட்சியாளர்கள் திரிபோலியில் தமது நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்றார்.

திரிபோலி நகர் இஸ்லாமியவாதிகள் மற்றும் ஏனைய ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் மாற்று அரசொன்றை அமைத்துள்ளனர். மறுபுறத்தில் கிழக்கு லிபியாவின் கடற்கரை நகரான டொப்ருக்கில் மேற் குலக ஆதரவுடன் பிறிதொரு அரசு இயங்கி வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஆயுதங் களை களையாத ஆயுதக் குழுக்கள் பிரிந்து நின்று மோதலில் ஈடுபட்டுள்ளன.

No comments

Powered by Blogger.