Header Ads



நான் விரக்­தி­யுடன் இல்லை, ஏன் அரசாங்கத்திற்குப் பயப்படவேண்டும்..? மஹிந்த தேசப்­பி­ரிய

எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலில் கண்­கா­ணிப்பு பணியில் ஈடு­பட ஐரோப்­பிய ஒன்­றியம், பொது­ந­ல­வாயம், ஆசிய தேர்தல் அதி­கா­ரிகள் சங்கம், தெற்கா­சிய தேர்தல் முகா­மைத்­துவ ஒன்றியம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வெளி­நாட்­டுக்­கண்­கா­ணிப்­பா­ளர்­களை வர­வ­ழைப்ப­தற்கு எதிர்­பார்க்­கின்றோம் என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித் தார்.

நான் அர­சாங்­கத்­துக்கு பயப்­ப­ட­வில்லை. நான் ஏன் அர­சாங்­கத்­திற்குப் பயப்­ப­ட­வேண்டும் நான் அரச அதி­காரி, மாறாக அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­யல்ல. இதனை புரிந்­து­கொள்­ளுங்கள். மேலும் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்கள் தொடர்பில் நான் விசா­ரிக்க முடி­யாது. பொலி­ஸாரின் செயற்­பாட்டை நான் மேற்­கொள்ள முடி­யாது என்றும் தேர்­தல்கள் ஆணை­யாளர் கூறினார்.

வடக்குத் தேர்தல் சுயா­தீ­ன­மாக நடை­பெ­ற­வில்லை என்று பொது­ந­ல­வாய பிர­தி­நி­திகள் கூறி­யி­ருந்தால் நான் நாளையே எனது தேர்தல் ஆணை­யாளர் பத­வியை இரா­ஜி­னாமா செய்வேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் படி நடை­பெறும். இதன் படி தேர்­தலில் 1 கோடியே , 55 இலட்­சத்து 4ஆயி­ரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகு­தி­பெற்­றுள்­ளனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தேர்தல் செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்று விசேட செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்;

ஜனா­தி­பதி மீண்டும் மக்கள் ஆணையைக் கோரும் நோக்கில் தேர்­தலை நடத்­து­மாறு வர்த்­த­மாணி அறி­வித்­தலை 20 ஆம் திக­தி­வி­டுத்தார். 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனா­தி­பதி சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் இம்­மாதம் 21 ஆம் திகதி நான் வேட்­பு­மனு மற்றும் தேர்தல் திக­தி­களை அறி­வித்தேன்.

வேட்­பு­ம­னுத்­தி­கதி டிசம்பர் 8 ஆம் திக­தியும் தேர்தல் தினம் ஜன­வரி 8 ஆம் திக­தி­யு­மாக அமைந்­துள்­ளதால் நான் ஒரு வேட்­பா­ள­ருக்கு பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டுள்­ள­தாக விமர்­ச­னங்கள் வந்­துள்­ளன. எனவே அந்த விமர்­ச­னத்­திற்கு முதலில் பதி­ல­ளிக்­கின்றேன். வர்த்­த­மாணி அறி­வித்தல் வெளி­வந்த திக­தி­யி­லி­ருந்து 16 தினங்­க­ளுக்கு பின்­னரும் 21 நாட்­க­ளுக்­குள்ளும் வேட்­பு­ம­னு­வைக்­கோ­ர­வேண்டும்.

பாப்­ப­ர­சரின் வருகை

அந்த வகையில் டிசம்பர் மாதம் 8, 9.10,11 திக­தி­களில் வேட்பு மனுக்­கோ­ரல்­க­ளுக்­கான தினங்­க­ளாக எமக்கு காணப்­பட்­டன. எனினும் பாப்­ப­ர­சரின் வரு­கைக்கு முன்னர் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்­ப­தாலும், 28 நாட்­க­ளுக்கு குறை­யாத பிர­சா­ரக்­கா­லத்தை வழங்­க­வேண்டும் என்­ப­தாலும், வேட்பு மனுவை 11 ஆம் திக­தியோ அல்­லது 10 ஆம் திக­தியோ கோர முடி­யாத நிலை காணப்­பட்­டது. அத்­துடன் 9 ஆம் திகதி சாதா­ரண தரப்­ப­ரீட்­சைகள் ஆரம்­ப­மா­கின்­றன. எமது தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அரு­கி­லுள்ள பாட­சா­லை­யிலும் பரீட்­சைகள் நடை­பெறும். எனவே டிசம்பர் மாதம் 8 ஆம் திக­தியே வேட்பு மனு­வுக்கு பொருத்­த­மாக இருந்­தது. இத­னையே நான் தீர்­மா­னித்தேன் இதில் எவ்­வி­த­மான தலை­யீ­டு­களும் இல்லை.

எட்டாம் திக­தியை நானே தீர்­மா­னித்தேன்

தேர்தல் திக­தியை தீர்­மா­னிக்கும் உரிமை எனக்­குள்­ளது. அதில் அர­சி­யல்­வா­தி­களின் அழுத்தம் இல்லை. ஜனா­தி­பதி தேர்­தலை வெ ள்ளிக்­கி­ழ­மை­க­ளிலோ, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளிலோ, போயா தினங்­க­ளிலோ நடத்­த­மாட்டோம். மேலும் பாப்­ப­ரசர் ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரு­கிறார். அது­மட்­டு­மல்ல 28 தினங்கள் குறை­யாமல் பிர­சா­ரத்­திற்கு காலம் வழங்­கப்­ப­ட­வேண்டும். இவை அனைத்­தையும் கருத்தில் கொண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திக­தியை தேர்தல் நடை­பெறும் திக­தி­யாக அறி­வித்தோம். இதில் யாருக்கும் எந்த சிக்­கலும் இல்லை எனக் கரு­து­கிறோம். தேர்தல் திக­தி­யல்ல முக்­கியம் மாறாக மக்­களின் புள்­ள­டி­யி­டுதே முக்­கியம் என்­பதை இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­கின்றோம்.

கட்­டுப்­பணம்

இந்­நி­லையில் கட்­டுப்­பணம் செலுத்­து­வது தொடர்­பான பிரச்­சினை வந்­தது. பொது­வாக தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்­னரே கட்­டுப்­பணம் செலுத்­து­வ­து­தொ­டர்­பான முடி­வுகள் எடுக்­கப்­படும். அந்த வகையில் டிசம்பர் மாதம் 5 திகதி கட்­டுப்­பணம் செலுத்­து­வது முடி­வுக்கு வந்­தாலும், 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8.30 மணி­முதல் நண்­பகல் 12 மணி­வரை கட்­டுப்­ப­ணத்தை ஏற்­றுக்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்ளோம்.

8 ஆம் திகதி காலை 9 மணி­முதல் 11 மணி­வரை

அர­சியல் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட விரும்­புவோர் 50 ஆயி­ரத்தை செலுத்த வேண்டும். சுயா­தீன வேட்­பாளர் 75 ஆயி­ரத்தை செலுத்த வேண்டும். வேட்­பு­ம­னுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி காலை 9 மணி­முதல் 11 மணி­வரை இரண்டு மணித்­தி­யா­லங்கள் இடம் பெறும். ஆட்­சே­ப­னை­களை 9.30 முதல் 11.30 மணி­வரை செய்­யலாம்.

வடக்கு கிழக்கில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள்

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இடம் பெயர்ந்­த­வர்கள் வேறு இடங்­களில் வாக்­க­ளிப்­ப­தற்­காக இம்­மாதம் 30 ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்­கலாம். குறை­நி­ரப்பு இடாப்பில் பெயர் இருக்­கின்­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே இந்த சந்­தர்ப்பம் வழங்­கப்­படும்.

வாக்­காளர் அட்டை விநி­யோகம்

வாக்­கா­ளர்­க­ளுக்­கான வாக்­காளர் அட்­டைகள் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தபால் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­படும். அவர்கள் அவற்றை வாக்­கா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பார்கள். டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி விசே­ட­தி­ன­மாக பிர­க­ட­னப்­பட்டு வாக்­காளர் அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­படும்.

அடை­யாள அட்டை கட்­டாயம்

இம்­முறை ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு வழ­மை­போன்று அடை­யாள அட்டை கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. செல்­லு­ப­டி­யான அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அடை­யாள அட்டை இன்றி யாரும் வாக்­க­ளிக்க முடி­யாது. தேசிய அடை­யாள அட்டை செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு, செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம், வயது வந்­தோ­ருக்கா அடை­யாள அட்டை, அரச ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, மத­கு­ரு­மா­ருக்­கான அடை­யாள அட்டை, என்­பன ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 10 இலட்சம் பேருக்கு தேசிய அடை­யாள அட்டை இல்லை என்ற ஒரு தகவல் உள்­ளது. ஆனால் இந்த 10இலட்சம் பேரில் நாம் மேற்­கூ­றிய ஏனைய அடை­யாள அட்டை உள்­ள­வர்கள் இருப்­பார்கள். எனவே இதில் நான்கு இலட்சம் பேருக்கு அடை­யாள அட்டை இல்­லாமல் இரு­க­கலாம் என கரு­து­கிறோம்.

தற்­கா­லிக அடை­யாள அட்டை

இவர்­களில் கடந்த 2012,2013 2014 ஆம் ஆண்டில் நடை­பெற்ற மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் தேர்தல் திணைக்­க­ளத்தின் தற்­கா­லிக அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொண்­ட­வர்கள் அந்த அடை­யாள அட்­டையை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக பயன்­ப­டுத்­தலாம். மேலும் அடை­யாள அட்டை இல்­லா­த­வர்­க­ளுக்கு விரை­வாக அவற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக ஆட்­ப­திவு திணைக்­க­ளத்­துடன் இணைந்து நட­மாடி சேவை­களை நடத்­த­வுள்ளோம். இதன் மூலம் 2 இலட்சம் பேருக்கு அடை­யாள அட்­டை­களை வழங்க முடியும் என நம்­பு­கின்றோம். இவை ஒன்­றுமே இல்­லா­த­வர்கள் தேர்தல் திணைக்­க­ளத்தில் தற்­கா­லிக அடை­யாள அட்­டையை பெறலாம். இதற்கு டிசம்பர் 31 க்கு முன்னர் விண்­ணப்­பிக்க வேண்டும். கிராம சேவ­கரின் அத்­தாட்­சியைக் கொண்டு வாக்­க­ளிக்க முடி­யாது. தற்­கா­லிக அடை­யாள அட்­டையை பெற கிராம சேவகர் ஊடாக விண்­ணப்­பிக்­கவும்.

பொலிஸ் அதி­கா­ரிகள்

பொலிஸ் அதி­கா­ரிகள், தேர்தல் காலத்தில் எனக்குக் கீழ் வரப்­போ­வ­தாக செய்­திகள் வந்­துள்­ளன. அவ்­வாறு ஒன்றும் இல்லை. ஆனால் முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்­கான பொலிஸ் அதி­கா­ரி­களை நாங்கள் கேட்­டுள்ளோம். அது­மட்­டு­மல்ல தேர்தல் செய­ல­கத்தில் முறைப்­பா­டு­களை விசா­ரிக்கும் பிரி­வொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் சேவை­யாற்­று­வ­தற்­காக பிரதி பொலிஸ் மா தலை­மை­யில்­பொலிஸ் அதி­கா­ரி­களை கோரி­யுள்ளோம். மாவட்ட மட்­டத்­திலும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள்

தேர்­த­லுக்­கான உள்­நாட்டு வெ ளிநாட்டு கண்­கா­ணிப்பு தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ளர்­களை ஈடு­ப­டுத்த வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­களும் கோரி­யுள்­ளன. நாட்டில் 1988 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முதல் தேசிய மட்டத் தேர்­தல்­களில் வெளி­நா­டடு கண்­கா­ணிப்­பா­ளர்கள் கலந்து கொண்­டனர். இந்­நி­லையில் இம்­முறை கட்­சி­களின் கோரிக்கை மற்றும் கட்­சி­க­ளுடன் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு அமை­வாக ஐரோப்­பிய ஒன்­றியம், பொது­ந­ல­வாயம், ஆசிய தேர்தல் அதி­கா­ரிகள் சங்கம், தெற்­கா­சிய தேர்தல் முகா­மைத்­துவ ஒன்­றியம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வெளி­நாட்­டுக்­கண்­கா­ணிப்­பா­ளர்­களை வர­வ­ழைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின்றோம்.

உள்­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள்

அத்­துடன் உள்­நாட்­டிலும் பல அமைப்­புக்­க­ளுக்கு தேர்­தலை கண்­கா­ணிக்க அனு­மதி வழங்­கி­யுள்ளோம். எக்­கா­ரணம் கொண்டும் தேர்­தலை கண்­கா­ணிக்க ஐக்­கிய நாடுகள் சபை உறுப்­பி­னர்­களை வர­வ­ழைக்கும் எண்ணம் இல்லை. ஆசிய தேர்தல் அதி­கா­ரிகள் சங்கம், தெற்­கா­சிய தேர்தல் முகா­மைத்­துவ ஒன்­றியம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து அதி­க­மான கண்­கா­ணிப்­பா­ளர்­களை பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்க்­கிறோம்.

கேள்வி:- பிர­சா­ரத்­திற்கு ஏன் குறை­வான காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பதில்:- அவ்­வாறு இல்லை தேர்தல் சட்­டத்­திற்கு அமை­வாக போது­மான காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் ஒரு தேர்­தலில் 33 நாட்கள் வழங்­கப்­பட்­டன. இம்­முறை 31 நாட்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- தேர்தல் திக­தியை தீர்­மா­னிப்­பதில் அழுத்தம் இருந்­ததா?

பதில்:- எந்த அழுத்­தமும் இல்லை. அவற்றை நானே தீர்­மா­னித்தேன்.

கேள்வி:- அர­சாங்கம் ஏற்­க­னவே பிர­சா­ரத்தை ஆரம்­பித்து விட்­டது. எனவே தற்­போது குறை­வான பிர­சார காலத்தை வழங்­கினால் அது பொது­வேட்­பா­ள­ருக்கு அநீதி இல்­லையா

பதில்:- அவ்­வாறு பொது வேட்­பாளர் குறித்து நாம் சிந்­திக்க முடி­யாது. எனது சட்­டத்தின் பிர­காரம் செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன்

கேள்வி:- தற்­போது பல இடங்­க­ளிலும் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் சுவ­ரொட்­டிகள் காணப்­ப­டு­கின்­ற­னவே?

பதில்:- வேட்­பு­மனு கோரப்­படும் வரை சுவ­ரொட்­டிகள் குறித்து நான் எதுவும் செய்ய முடி­யாது. அது அதி­கா­ரி­களின் பணி­யாகும்.
2014 இடாப்பின் படி தேர்தல்

கேள்வி:- எந்த ஆண்டின் வாக்­காளர் இடாப்பின் படி தேர்தல் நடத்­தப்­படும். வாக்­காளர் எண்­ணிக்கை என்ன?

பதில் : 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் .படி தேர்­தல்கள் நடை­பெறும். இதன் படி தேர்­தலில் 1 கோடியே , 55 இலட்­சத்து 4ஆயி­ரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகு­தி­பெற்­றுள்­ளனர். குறை­நி­ரப்புப் பட்­டி­யலில் 316 பேரின் பெயர்­களே உள்­ளன. கம்­பஹா மாவட்­டத்­தி­லேயே அதி­க­மான வாக்­கா­ளர்கள் உள்­ளனர். அங்கு 1637537 வாக்­கா­ளர்கள் உள்­ளனர். குறைந்த வாக்­கா­ளர்­களை கொண்ட மாவட்­ட­மாக வன்னி காணப்­ப­டு­கின்­றது. இங்கு 253058 பேர் உள்­ளனர். வன்னி தேர்தல் மாவட்­ட­மா­னது முல்­லைத்­தீவு மன்னார் மற்றும் வவு­னியா ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கி­யது.

வடக்குத் தேர்தல் சுயா­தீ­ன­மா­னது

கேள்வி:- வடக்கு தேர்தல் சுயா­தீ­ன­மாக நடை­பெ­ற­மாக இல்லை என பொது­ந­ல­வாய அமைப்பு கூறி­யுள்­ளதே?

பதில்:- அந்தக் கூற்றை நான் மறுக்­கிறேன். அவர்கள் அவ்­வாறு கூற­வில்லை. வடக்குத் தேர்தல் சுயா­தீ­ன­மாக நடை­பெ­ற­வில்லை என்று பொது­ந­ல­வாய பிர­தி­நி­திகள் கூறி­யி­ருந்தால் நான் நாளையே எனது தேர்தல் ஆணை­யாளர் பத­வியை இரா­ஜி­னாமா செய்வேன். உங்­க­ளினால் காட்ட முடி­யு­மானால் அதனை நான் செய்வேன். அவர்கள் எங்­க­ளுக்கு நன்றி தெரி­வி­த­து­விட்டு சென்­றனர்.

கேள்வி:- இலங்­கையில் தேர்தல் திணைக்­களம் சுயா­தீ­ன­மாக இல்லை என்று பொது­ந­ல­வாய செய­லாளர் நாயகம் கம­லேஸ்­சர்மா கூறி­யுள்­ளாரே,
பதில்:- அவர் என்­னிடம் அவ்­வாறு கூற­வில்லை. தேர்தல் ஆணைக்­குழு இருந்தால் நல்­லது தானே என்று என்­னிடம் கேட்டார் நான் ஆம் என்றேன். அவ்­வ­ள­வுதான்.
சுய ஒழுக்கம் தேவை

கேள்வி:- சாதா­ரண தரப் பரீட்சை நடை­பெறும் காலத்தில் தேர்தல் பிர­சாரம் இடம் பெறு­வது பரீட்­சைக்கு இடை­யூ­றாக அமை­யாதா?

பதில் : வாக்­கா­ளர்­களின் பிள்­ளை­களே பரீட்சை எழு­து­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு தடை ஏற்­ப­டாமல் செயற்­ப­டு­வது அனை­வ­ரதும் கட­மை­யாகும். சுய ஒழுக்­கத்தை அனை­வரும் கடை­பி­டிக்­க­வேண்டும். பரீட்சை நடை­பெறும் மண்­ட­பத்­திற்கு அருகில் ஊர்­வலம் செல்­வது முறை­யல்ல என்­பதை அவர்கள் உணர்ந்து கொள்­ள­வேண்டும். இதற்கு எதி­ராக தேர்தல் திணைக்­க­ளமும் பொலிஸ் திணைக்­களும் தனித்து ஒன்றும் செய்ய முடி­யாது.

விரக்தி இல்லை

கேள்வி:- நீங்கள் விரக்­தி­யுடன் உள்­ளீர்­களா?

பதில்:- நான் விரக்­தி­யுடன் இல்லை. எனது அதி­கா­ரித்­திற்கு உட்­பட்டு செயற்­பட்டு வரு­கின்றேன். வேட்பு மனு கூறு­வ­தற்கு முன்னர் என்னால் பதா­கை­களை அகற்ற முடி­யாது. அது அதி­கா­ரி­களின் கட­மை­யாகும்.

கேள்வி:- வடக்குத் தேர்­த­லின்­போது பெண் வேட்­பாளர் ஒரு­வரின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. நீங்கள் என்ன செய்­தீர்கள்.

பதில்:- அது பொலி­ஸா­ருக்­கான கடமை, துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்கள் தொடர்பில் நான் விசா­ரிக்க முடி­யாது. பொலி­ஸாரின் செயற்­பாட்டை நான் மேற்­கொள்ள முடி­யாது. சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முறைப்­பாடு செய்­ய­வேண்டும்.

அர­சா­ங்கம் கூறி­யதா?

கேள்வி:- பாப்­ப­ர­சரின் விஜ­யத்­திற்­காக தேர்தல் திக­தியை இவ்­வாறு நிர்­ண­யிக்­கு­மாறு அர­சாங்கம் கூறி­யதா?

பதில்:- இல்லை பாப்­ப­ர­சரின் வரு­கைக்­காக நாங்கள் இந்த முடிவு எடுத்தோம். அவர்­களின் வரு­கையை தேர்தல் தடுத்­து­விடக் கூடாது.

கேள்வி:- எமது தேசிய முன்­னணி, (அபே ஜாதிக பெர­முன) கட்­சியின் சின்­னத்தை மாற்­று­மாறு கோரப்­பட்­டதா?

பதில்:- இது­வரை கோரப்­ப­ட­வில்லை.

நான் ஏன் பயப்­ப­ட­வேண்டும்

கேள்வி:- நீங்கள் அரசாங்கத்திற்கு பயமா?

பதில்:- நான் ஏன் அரசாங்கத்திற்குப் பயப்படவேண்டும். நான் அரச அதிகாரி, மாறாக அரசாங்கத்தின் அதிகாரியல்ல. இதனை புரிந்துகொள்ளுங்கள்,

மக்கள் வாக்களித்தால் முடிவுகளை அறிவிப்பேன்

கேள்வி:-ஆனால் உங்களை ஜனாதிபதிதானே நியமித்தார்.

பதில்:- தேர்தல் ஆணையாளர்களை ஜனாதிபதிதான் நியமிக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் வேறு அரசு வேறு. நான் அரச அதிகாரி, வடக்குத் தேர்தல் சுயாதீனமாக நடைபெற்றிருக்காவிட்டால் எவ்வாறு எதிர்க்கட்சி 80 வீத வாக்குக்களைப் பெற்றது. ஆணையாளர் என்ற ரீதியில் நான் செயற்படுகின்றேன். மக்கள் வாக்களித்தால் முடிவுகளை அறிவிக்க நான் தயார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன். ஆனால் அவை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும். 8 ஆம் திகதி தேர்தல் என்பதை நானே தீர்மானித்தேன்.

மாற்ற முடியாது

கேள்வி:- தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளை மாற்ற முடியுமா?

பதில்:- எனது அனுமதியின்றி மாற்றமுடியாது. பொலிஸாரின் இடமாற்றத்தையும் நிறுத்தியுள்ளேன். ஆனால் அத்தியாவசியத் தேவை இருப்பின் எனது அனுமதியைப் பெற்று மாற்றம் செய்யலாம்.

வெளிநாட்டு இலங்கையர்கள்

கேள்வி- . வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்க வழியே இல்லையா?

பதில்:- அவர்களுக்கு வாக்களிக்க வழிசெய்யவேண்டுமென்பதை கொள்கை ரீதியில் நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கான திட்டத்தை பாராளுமன்றமே முன்வைக்கவேண்டும்.

1 comment:

  1. நல்லது.

    இப்பொழுது இல்லாவிட்டாலும் ஓய்வுபெற்ற பின்பு ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ தாங்கள் குடும்பத்தோடு குடியேறும் காலம் ஒன்று வரும். அப்பொழுது மனச்சாட்சியின் உறுத்தலை சமாளிப்பதற்காக நிச்சயம் சுயசரிதை போன்ற நூல்ஒன்றை வெளியிடுவீர்களல்லவா..?

    அப்பொழுதாவது ஆளுங்கட்சியினரின் தகிடுதத்தங்கள் பற்றிய உண்மையை ஒத்துக்கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.