Header Ads



ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டால்...? மைத்திரிபால சிறிசேன நல்லவருமல்ல..!

-Gtn-

ஜனாதிபதி தேர்தலில் முதலாவது தடையை எதிர்கட்சிகள் மிக அற்புதமாக கடந்துள்ளன. இந்த வெற்றிகரமான செயற்பாட்டிகான பாராட்டும், பெருமையும், மைத்திரிபாலசிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ரணில் மற்றும் மங்களவிற்கு செல்லவேண்டும்.

ராஜபக்ச தோல்வியடைவார் என்பது எந்த வகையிலும் இன்னமும் நிச்சயமான விடயமல்ல, எனினும் முதல் தடவையாக அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன, அதற்கான வாய்ப்புகள் தோன்றியுள்ளன. இது பெரும் பாய்ச்சலாகும்.

இலங்கையின் ஏனைய அரசியல் வாதிகளை விட மைத்திரிபால சிறிசேன நல்லவருமல்ல, மோசமானவருமல்ல, அவர் பொது வேட்பாளராக போட்டியிடுவதில் மிகவும் நம்பிக்கை அளிக்கின்ற விடயம் இதுதான்-

இலங்கை அரசியல் கடந்த சில வருடங்களில் வீரபுருஷர்களையும், கதாநாயகர்களையும், மீட்பர்களையும் அளவுக்கதிகமான எண்ணிக்கையில் சந்தித்துள்ளது. நாட்டிற்கு மீண்டும் அவ்வாறான ஒரு தலைவர் அவசியமில்லை.நாட்டை மீட்க வந்தவராகவும், வீழ்ச்சியற்றவராகவும், தவிர்க்க முடியாதவராகவும் தன்னை கருதிக்கொள்ளும் ஒரு தலைவர் அவசியமில்லை.

நாடு மீண்டும் கரடுமுரடான ஜனநாயகத்திற்கு திரும்பவேண்டும். அரசியல்வாதிகளுக்கே உரிய சிறிய தீமைகளுக்கு பழக்கப்பட்ட,  வாரிசு அரசியலையும், முடியாட்சியையும் உருவாக்க விரும்பாத சாதராண அரசியல்வாதியின் காலத்திற்கு நாடு திரும்பவேண்டும்.

ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டால் இலங்கை எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடாது. ராஜபக்சாக்களின் தோல்விக்கு பின்னரும் பல பிரச்சினைகள் தொடரும், ஆனால் நாடு எதிர்கொண்டுள்ள பாரிய அபாயங்களுக்கு ராஜபக்சாக்களின் தோல்விக்கு பின்னர் முடிவுகாணலாம்.அவர்களின் தோல்வியுடன் அவை காணமாற்போய்விடும்.

ஜனநாய விரோத குடும்ப ஆட்சியும், வாரிசு அரசியல் திட்டமும் முடிவுக்கு வரும்,சிங்களபேரினவாதம் ஒரளவுக்காவது கட்டுப்படுத்தப்படும் சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

இராணுவ மயப்படுத்தப்படுதலை தடுத்து நிறுத்தலாம் அல்லது அகற்றலாம், வடக்கு ஆக்கிரமிப்பு நிலையிலிருந்து ஜனநாயக சூழலிற்கு திரும்பலாம். நாட்டின் பொருளாதாரத்தை பலனற்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களிலிருந்து காப்பாற்றலாம்.

நீதிதுறை மத்தியில் நீதியை மீண்டும் ஏற்படுத்தலாம், அதேபோன்று அதிகாரிகள் மத்தியில் தொழிற்சார் தன்மையை உருவாக்கலாம், நாம் இழந்த ஜனநாயக சுதந்திரம் மற்றும் உரிமைகளை மீண்டும் எற்படுத்தலாம்.

வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரை சீனா நோக்கி தலைதெறிக்க ஓடுவதை நிறுத்தி மீண்டும் அணிசேரா கொள்கைக்கு திரும்பலாம்.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாகிய அவர்களின் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த பிரச்சினைகளுக்கு அவர்களை வெளியேற்றுவதன் மூலமாக தீர்வை காணலாம். இது யதார்த்தப+ர்வமான எதிர்பார்ப்பு –போராடுவதற்கு தகுதியான விடயம்.

மிகவும் வலிமை வாயந்த ஜனாதிபதி முறையை நீக்குவதும்,சமநிலையான அரசியல் முறையொன்றை ஏற்படுத்துவதும் தற்போதைய அரசியல் அவசியமாகவுள்ளது. எனினும் ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்திகொண்டுள்ள சிங்கள மக்களை கவர்வதற்கு இந்த விடயம்மாத்திரம்போதுமானதல்ல.

சில மாதத்திற்கு முன்னர் மாற்றுக்கொள்கை நிலையம் மேற்கோண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்த விடயங்கள் வாக்காளர்கள் எங்கு நிற்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவியாக அமையலாம். இந்த ஆய்வுகளின் படி 73 வீதமான இலங்கையர்களும், 81 வீதமான சிங்களவர்களும் சிங்களம் மாத்திரமே இலங்கையின் தேசிய மொழி என கருதுவதும்,64 வீத இலங்கையர்களும், 61 வீத சிங்களவர்களும் நல்லிணக்க ஆணைக்குழு வென்றால் என்னவென்று தெரியாத நிலையிலிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான ஒரு புள்ளிவிபரத்தை அடிப்படையாக வைத்து சிந்திக்கும்போது இலங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கும், சிங்களவர்களில் பெரும்பான்மை யானவர்களுக்கும், நிறைவேற்று  அதிகார ஜனாதிபதியின் உண்மையான ஆபத்து குறித்து தெரிந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

பெரும்பான்மையான மக்கள் ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதற்கு காரணம் அவர்களின் வாழ்க்தை தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலேயே என்பது முக்கியமான விடயம்.

ஏகாதிபத்திய, சர்வாதிகார ஜனாதிபதி முறை என்பது நீக்கப்படவேண்டியதே,எனினும்இது தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரக்கூடிய சூத்திரமல்ல.

எதிர்கட்சிகளின் பொதுவேலை திட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான உறுதிமொழிகள் உள்ளடக்கப்படுவது எவ்வளவு அவசியமானதோ,அதே போன்று சாதாரண பொதுமக்களுக்கான நிவாரணங்களும் அவசியம். இவ்வாறான ஒரு பொருளாதார கோணத்தை புகுத்தாவிட்டால், பல வாக்குகளை இழக்கநேரிடும். ஆகக்குறைந்த அரசியல்வேலை திட்டம் போன்று, ஆகக்குறைந்த பொருளாதார திட்டமும் அவசியம். இது இல்லாவிட்டால் மக்கள் மத்தியில்தமது பொருளாதார நிலை குறித்து காணப்படும் அதிருப்தியை எதிர்கட்சிகளால் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்- மகிந்த வெற்றிபெறுவார்.

அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள்

அரசாங்கம் தன்னை கடுமையாக விமர்சிக்கும் சுவரொட்டிகளை பல இலட்சம் ரூபாய் செலவில் தயாரித்துள்ளதாக ரணில் வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் தெரிவித்தார். தானே பொதுவேட்பாளர் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறான சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர் அரசாங்கத்தை அவற்றை அழித்துவிடுமாறு சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

ராஜபக்சாக்கள் அற்புதமான விதத்தில் குருடர்களாக்கப் பட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளனர்.

முதலாவது தடையை தாண்டியுள்ளதன் அர்த்தம் போட்டியில் வெற்றிகிட்டிவிட்டது என்பதல்ல, ராஜபக்சாக்களிடம் இன்னமும் அரசாங்கத்தின் வலிமையுள்ளது. அவர்கள் ஆட்சியை காப்பாற்றுவதற்கு மாத்திரம் போராடவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்hக போராடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மிககடுமையாக, மூர்க்கத்தனமாக, தீவிர வன்முறையுடன் போராடுவார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காடையர்களின் தாக்குதலில் ஏற்கனவே இரண்டு ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் என்ன நடைபெறப்போகின்றது என்பதற்கான அறிகுறியிது.

இலங்கையை பொறுத்தவரை தற்போது ராஜபக்ச அரசாங்கம் என்பது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயம் என்ற மனோநிலை காணப்படுகின்றது, அவர்களின் ஆட்சியை எதிர்ப்பது தேசத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும்,இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தை ஜனநாய ரீதியில் தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும்,நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்,

இந்த மனப்பான்மை மைத்திரி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், வெளிப்பட்டுள்ளது, எதிர்கட்சிகள் துரோக மிழைப்பதாகவும், சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது நாட்டை பிரித்து, ஸ்திரத்தன்மை இழக்கச்செய்து, குழப்பத்திற்குள் தள்ளும்வெளிநாடுகள்- மற்றும் புலம்பெயர்ந்த தழிழர்களின் சதியெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனோநிலையில் உள்ள ஆபத்து என்னவென்றால் இது ஜனநாய ரீதியிலான எதிர்ப்பிற்கு எதிராக பாரிய அளவிலான ஜனநாயவிரோத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்துவது தான்.

ராஜபக்சாக்கள், சட்டப+ர்வமான மற்றும் சட்டவிரோத வன்முறைகளை எதிர்கட்சிகள் மீது கட்டவிழ்த்து விடுவார்கள், அவர்கள் வேறு என்ன செய்வார்கள்? முற்றுகைக்குள் சிக்கியுள்ள தேசம் அல்லது அரசு குறித்து கற்பனை கதைகளை உருவாக்குவார்கள். புதிய புலிகள் அல்லது ஜிகாத்போராளிகள் குறித்த அச்சத்தை உருவாக்க சில நடவடிக்கைகள் இடம்பெறலாம், அவர்களாவே மிகவும் ஆபத்தான தேசிய பாதுகாப்பு நெருக்கடியொன்றை உருவாக்கி தேர்தலை பிற்போடலாம், அல்லது எதிரணியினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமாக தேர்தலை களவாடலாம்.

பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தடுப்பது, தகவல் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, பதட்டம் மற்றும்,அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக பல சர்வாதிகாரிகள்  பாரிய தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ளனர்- வன்முறையை பயன்படுத்தாமாலே அவர்கள் அதனை சாதித்துள்ளனர் என நோபல் பரிசுபெற்ற அமர்த்தியாசென் ஒரு முறை தெரிவித்தார்.

ராஜபக்சாக்கள் இதனையே எதிர்வரும் தேர்தலில் செய்ய முயன்றனர், ஆனால் அச்சத்தை ஏற்படுத்தும் அவர்களது முயற்சிகளுக்கு மைத்திரிபால பெரும் பின்னடவை அளித்துள்ளார்.அடுத்து வரும் வாரங்களில் சாத்தியமான சகல முறையையும் அமுல்படுத்த மகிந்த முயல்வார், மக்களை அச்சத்தின்  பிடியில் சிக்க வைப்பதற்கும், எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து மெனமாக்கி அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகiயும் அவர்கள் செய்யலாம்.

எதிர்கட்சிகள் இதுவரை மிக அற்புதமாக செயற்பட்டுள்ளன. ஆனால் எதிர்வரும் நாட்களிலேயே கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

1 comment:

  1. இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கம்கள்... இவர்கள் சிறு பன்மைனருக்கு ஒன்றும் பெரிசா செய்து கிளிக்கபோவதில்லை.. எதோ ஆட்ச்சி மாற்றத்தை எதிர்பாக்கிறோம்

    ReplyDelete

Powered by Blogger.