Header Ads



மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுபல சேனாக்கு ராஜபக்ஸ கம்பனி உத்தரவு..?

(Tw)

பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டிற்காக நேபாளம் புறப்பட்டுச் செல்ல முன்னர் இது தொடர்பில் ஞானசார தேரரிடம் நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஞானசார தேரர், சுற்றிலும் கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஆடம்பர வாகனத்தில் அதிரடிப்படை பாதுகாப்புடன் அலரிமாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதுள்ள சூழ்நிலையில் பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தை நிறுவ வேண்டுமானால் பொதுபல சேனா அமைப்பு தந்திரோபாய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக தனது கொள்கைகளில் சிறிது தளர்வுப் போக்கினை வெளிக்காட்ட வேண்டும்.

மேலும் பொதுபல சேனாவிற்கு சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது பொது பல சேனா தனது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசாங்கம் தொடர்பிலும் சிறிது விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் மைத்திரிபால சிரிசேன தரப்பிற்கு கிடைப்பதை தடுக்கலாம். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பௌத்த சிங்கள வாக்குகள் தொடர்பில் தந்திரோபாய நகர்வின் ஊடாக அவற்றை அரசாங்கத் தரப்பிற்கு பெற்றுக் கொள்ள இன்னொரு நகர்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை ஞானசார தேரர் மற்றும் அவருடன் வருகை தந்திருந்த திலந்த விதானகே ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து வரும் வியாழக்கிழமை பொதுபல சேனா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது ஆதரவை மைத்திரிபால சிரிசேனவிற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.

9 comments:

  1. நீங்க என்னதான் தலைகீழாக புதிய புதிய திட்டங்கள் வகுத்தாலும் முஸ்லிம்களின் வாக்குகள் என்ன பெளத்தர்களின் அதிகப்படியானவாக்குகளும் தமிழர்களின் வாக்குகளும் கொம்பனி ஆட்சிக்கு மட்டும் கிடைக்காது. அது மட்டும் உண்மை. பொது பலசேன மன்னாங்கட்டி அதை உருவாக்கியது அரசாங்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. என்னதான் முரட்டுத்தனமாகப்பேசினாலும் திருடர்களுக்கு பயம் எப்போது அகப்படுவோம் என்பதுதானே, அதுதான் நடக்கின்றது.

    ReplyDelete
  2. Terrorist agent bodu bala sena and most wanted criminal gnanasara thero.

    ReplyDelete
  3. criminal mahinda mama well planing..

    ReplyDelete
  4. Votes for Maithri Pala Srisena is not based upon anyone's request or for any flattery Mr. Mahinda.

    If you think so, then you are proving you are an idiot. Because, all the minority people are going to act on their own and not following any bastard leaders in this election, whether it is Raw Hakeem/Adhawullah/Hisbullah/Baseer Seku Dhawood/Aswar/Carder or any other rest of sons of bitches.

    மைதிரிபால சிறிசேனாவுக்கான வாக்குகள் எவருடைய வேண்டுதளின் பிரகாரமோ அல்லது எவரின் முகஸ்துதிக்காகவோ இம்முறை இடம்பெறாது என்பதை திரு.மகிந்த அவர்கள் புறிந்து கொள்ளவேண்டும்.

    அப்படி நீர் புறிவீராயின், நீர் முட்டாள் என்பதை நீரே நிருபித்துவிடுவீர். ஏனெனில், இம்முறை சிறுபாண்மை மக்கள் அனைவரும் அவர்களாகவே சுயமாக சிந்தித்து செயட்படவுள்ளார்கள், வேறெந்த வேசிமகனையும் பின்பற்றமாட்டார்கள், அது ரவூப் ஹகீமோ/அதாவுல்லாவோ/ஹிஸ்புல்லாவோ/பசீர் சேகுதாவுதோ/அஸ்வரோ/காதரோ அல்லது வேறெந்த பிற மீதியான வேசிமகனாக இருந்தாலும் சரியே!.

    ReplyDelete
  5. How there planing? rubbish peoples, UNP must consider about BBS, maximum their planing to win BBS always with government mahinda croup,

    ReplyDelete
  6. முஸ்லிம்களைத் தின்னவே திட்டமிடும் கேடுகெட்ட நாய்கள். திட்டம் தீட்டி முஸ்லிம்களின் வாக்கைப் பெற்று முஸ்லிம்களுக்கே குளிபறிக்கும் விஷமிகள். முஸ்லிம்களே! எந்த அரசியல் கட்சிகளையோ, தன் குடும்பங்களின் எதிர்காலத்துக்காக அரசாங்கத்தைச் சுரண்டி சுரண்டி வாழப் பழகியுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஏமாற்று வார்த்தைகளையோ நம்பி உங்கள் பொன்னான வாக்குகளை இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் கண்டபடி அநீதிகளை அறங்கேற்ற இடமளித்த, காடையர்களை, மத வெறியர்களை உலாவ விட்டு, அவர்களை வழி நடாத்திய அநியாய ஆட்சியாளனுக்கு அளித்து முஸ்லிம்களுக்கு மேலும் அநீதியை ஏற்படுத்த இடமளிக்காதீர்கள். எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் பேசும் போது சும்மா தலை அசைத்துக்கொண்டு இருங்கள். வாக்களிக்கும்போது நிதானமாக சிந்தித்து வாக்களியுங்கள்.

    ReplyDelete
  7. எல்லோரையும் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக்குண்டுதான் இருக்கிறான் உங்களின் அட்டகாசத்தின் முடிவு நெருங்கிவிட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப அல்லா முடிவு எடுத்துவிட்டான் இனி யாராலும் தடுக்க முடுயாது பள்ளியை உடைத்தவன் எங்கும் வாழ்ந்த வரலாறு கிடையாது அபுஜஹிளின் முடியு எப்படியோ அப்படித்தான் இந்த rajapaksa companikkum இவர்களுக்கு வக்கலத்துவான்கும் முஸ்லிம் பாராளுமன்ற எலும்புத்துண்டு நடயர்களுக்கும் அல்லா கூடிய விரைவில் கஷ்டத்தையும் கேவலத்தையும் நிட்ச்சயமாக கொடுப்பான் பொறுத்து இருந்து பாருங்கள்

    ReplyDelete
  8. நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
    8:30 وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

    ReplyDelete
  9. Yes Insah Allh We Will Win

    ReplyDelete

Powered by Blogger.