Header Ads



இன்று சலுகைகளை கொட்டுவார் ஜனாதிபதி மஹிந்த...

நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய மிகச் சிறந்த வரவு செலவுத் திட்டம் இன்று (24-10-2014) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10 ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.

வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விவசாய அமைப்புகள், வாணிப சபைகள், உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக்களை பெற்றிருந்தார். இது தவிர நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆகியோரை தனித்தனியாக சந்தித்து வரவு செலவுத்திட்டத்திற்காக கருத்துக்கள் பெற்றிருந்தார்.

சகல தரப்பினரதும் யோசனைகள், கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அபிவிருத்தி சார்ந்த மக்கள் நல வரவு செலவுத் திட்டமாக இது அமையும் என நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறின.

வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான ஊக்கு விப்புகள், ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தல் என்பன குறித்தும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

அரச மற்றும் தனியார் துறை ஊழி யர்களின் வருமானம் அதிகரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாராகியுள் ளதாகவும் அறிய வருகிறது.

வரவு செலவுத்திட்டத்தில் மீன்பிடி, போக்குவரத்து, பெருந்தோட்ட கைத்தொழில், விவசாயம், சுற்றுலா, சிறு, மத்திய உற்பத்தித்துறைகள் தனியார் துறை, சேவை துறை, நிர்மாணத்துறை, வங்கி, நிதி, தொடர்பாடல், கப்பற்துறை சமூக சேவை உட்பட அநேக துறைகளின் மேம்பாட்டிற்கு யோசனைகள் முன்வைக்கப்பட இருப்பதாகவும் அறிய வருகிறது.

வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையையும் பணவீக்கத்தையும் குறைக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் கூறின.

இதேவேளை நாளை (சனிக்கிழமை) முதல் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பமாகிறது.

நவம்பர் ஒன்றுவரை முதலாம் வாசிப்பு மீதான விவாதமும் நவம்பர் 1 முதல் 22 வரை குழுநிலை விவாதமும் இடம்பெறும்.

இதேவேளை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் புத்தாக்கங்கள் அடிப்படையிலான யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக தொழில்நுட்ப ஆராய்ச்சி அணுசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு புத்தாக்கங்களினூடாக பங்களிக்க இது வாய்ப்பாகும் எனவும் அவர் குறிப் பிட்டார்.

இது தவிர இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் அளிக்கப்பட இருப்பதாக அமைச்சர்கள் பலரும் குறிப் பிட்டனர்.

No comments

Powered by Blogger.