Header Ads



நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, எவரது தாளங்களுக்கும் ஆடமாட்டேன் - கோத்தா

பிரிட்டனிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தினையடுத்து விரைவில் இலங்கை வரவுள்ளார்.

இதேவேளை அவரிற்க்கு வெளிவிவகார அமைச்சில் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும தெரியவருகிறது.

நோனிஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார், அதன் போது கோத்தா எந்தவித அச்சமுமின்றி நோனிசை இலங்கை வருமாறு தெரிவித்துள்ளார்.

நோனிசுடைய பாதுகாப்பிற்க்கு தான் பொறுப்பு என்றும், எவரையும் தாளங்களுக்கு ஆடுவதற்க்கு தான் அனுமதிக்க மாட்டார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, நீங்கள் வரும் திகதியை தெரிவியுங்கள் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றேன் என்றும் அவர் நோனிசிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியும் நோனிசை தன்னை வந்து சந்திக்குமாறு தனது இரு செயலாளர்கள் மூலமாக செய்தியனுப்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நோனிஸ் அடுத்த சில நாட்களில் இலங்கைவரவுள்ளார்.

எனினும் அவர் சேனுகா வெளிவிவகார அமைச்சில் இருக்கும்வரை அந்த அமைச்சில் பொறுப்புகள் எதனையும் ஏற்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். gtn

1 comment:

  1. சிலவருடங்களுக்கு முன்பு செய்த பயங்கரவாதச்செயல்களால் நாட்டைவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளிடம் இன்று நாட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் தறுகள் அனைத்தும் நாட்டு மக்களையே சாரும். இத்தவறுகள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்குமா???

    ReplyDelete

Powered by Blogger.