Header Ads



தேர்தலில் போட்டியிடுவோம் - ஞானசார

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் ஊடாக தமது அமைப்பு செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வரவுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிருளப்பனையில் உள்ள பொதுபல சேனாவின் அலுவலகத்தில் இன்று 21-10-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமது அமைப்பு ஒரு குழுவை தேர்தலில் நிறுத்தி அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் விடயத்தில் தலையிட உள்ளதாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டில் தொழில் புரிவோரின் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முறையுடன் வெளிநாடுகளில் தொழில் புரிவது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் பிரதான முறையாக மாறியது.

ஆசிரியர்கள், பொறியிலாளர்கள், மருத்துவர்கள் என வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள், இலங்கையானது சிறந்த தொழில்சார் நிபுணர்கள் உள்ள நாடு என்பதை காட்டியுள்ளனர்.

பாரம்பரிய பெருந்தோட்ட ஏற்றுமதி பொருளாதாரத்தை தோற்கடித்து, வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் வருடாந்தம் நாட்டுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை உழைத்து கொடுக்கின்றனர் எனவும் திலாந்த விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.