Header Ads



இடதுசாரி கட்சிகளுடனும் முஸ்லிம்கள் புரிந்துணர்வுக்கு வருதல் காலத்தின் கட்டாயமாகும்..!

-மஸிஹுத்தீன் இனமுல்லாஹ்-

இலங்கையில் இருக்கின்ற முற்போக்கு இடதுசாரி தேசிய அரசியல் கட்சிகளுடன் மிகத் தெளிவான உடன்பாடுகளுடனும், நன்கு ஆராயப்பட்ட மூலோபாயத் திட்டமிடலுடனும் கூடிய புரிந்துணர்வுடன் முஸ்லிம் தேசிய அரசியலை முன்னகர்த்த முயற்சிப்பது சாணக்கியமான நகர்வாக இருக்கும் என கருதுகின்றேன்.

சிறுபான்மை இனங்களின் அரசியல் பலம் மாத்திரமன்றி, இடதுசாரி சிறு கட்சிகளினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் மாத்திரமே மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிய இரு பெரும் அரசியல் கட்சிகளினதும் பிடியில் இருந்து இந்த தேசத்தை விடுவித்து நல்லாட்சி விழுமியங்களை மதிக்கின்ற புதியதோர் அரசியல் கலாசாரத்தை விரும்பும் இளம் தலை முறையினரிடம் ஒப்படைக்க முடியும்.

2015 ஜனவரி மாதம் இடம் பெறலாமென கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல், ஏப்ரல் மாதமளவில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல் இரண்டிலும் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒருங்கிணைந்த பலமாக மேற்படி புதிய முன்னணி ஒன்றை தோற்றுவிப்பது தீய உள்நோக்கங்களுடன் உருவாக்கப்படும் "கிங் மேகர்ஸ்" களிடமிருந்து தேசத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அர்த்தமுள்ள நகர்வாக இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனநாயக அரசியல் அரங்கில் நாம் மேலைத்தேய சியோனிஸ முதலாளித்துவ ஜனநாயக நவ யுக காலனித்துவ கட்டமைப்பபுகளுக்குள்ளேயே கட்டுண்டு கிடக்கின்றோம்.

முதலாளித்துவம் நவ யுக காலனித்துவம் ஆகும், ஜனநாயகம் அதனை பூகோள மயப்படுத்தும் பிரதான வாகனமாகும், ஐ நா உற்பட அனைத்து சர்வதேச அமைப்புக்களும் இந்த முதலாளித்துவ ஜனநாயக காலனித்துவத்தை கட்டிக் காக்கும் கட்டமைப்புக்களாகும்.

மேலே சொன்ன நவ யுக தஜ்ஜாலிஸத்தின் மூல கர்த்தாக்களும், இயக்குனர்களும், நகர்த்துனர்களும் யூதர்களாகும்.

இந்த யூத சியோனிஸ சர்வதேச சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டிலேயே உலகின் 95% மான போர்த் தளபாட உற்பத்தி நிறுவனங்களும், ஊடகங்களும் இருக்கின்றன. மனித குல விமோசனத்திற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வாகும்.! என்றாலும் முஸ்லிம் உம்மத்து இஸ்லாத்தை மனித குலத்திற்கு முன்வைப்பதில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே நவயுக முதலாளித்துவ ஜனநாயக யூத சியோனிஸ சாம்ராஜ்யம் உலகெங்கும் இஸ்லாத்தை குறி வைத்துள்ளது,யுக முடிவுக்கு முன்னர் இவையெல்லாம் நடந்தேறி சத்தியம் வெல்வது பிரபஞ்ச நியதியாக உள்ளது, அசத்தியம் அழிந்தே தீரும்.

முதலாளித்துவமோ, கம்யூனிசமோ ,சமதர்மமோ ஜனநாயகமோ முஸ்லிம்களது பிரதான இலக்குகளாக இருக்க முடியாது..அவை இலக்குகளை நோக்கிய மார்க்கங்களில் இன்று அத்தியாவசிய தீமைகளாக மாறியுள்ளன.

சராசரி அரசியல் அபிலாஷைகளுக்கு அப்பால் இந்த தேசத்தினதும் முஸ்லிம்களினதும் விடிவுக்கான தனித்துவமான கரைந்துவிடாது கலந்து வாழும் அரசியல் பாதை ஒன்றை சுதேச இடது சாரி சக்திகளுடன் இணைந்து வடிவமைத்துக் கொள்ள முடியுமாயின் அதுவே சிறந்ததொரு தெரிவாக இருக்கும்.

எனினும் ஜனாதிபதித் தேர்தல் என வரும் பொழுது ஆட்சி மாற்றத்திற்கான அத்திவாரமாகவே அது தேசிய அளவில் அணுகப்படுவதனால் முற்போக்கு சுதேச இடது சாரிசக்திகளுடன் முன்கூட்டியே புரிந்துணர்வுகளுக்கு வருவது காலோசிதமானது.

No comments

Powered by Blogger.