Header Ads



'வடக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும், தெற்கில் சீனாவின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுப்பு' - சம்பிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்தால் அதற்கான பொறுப்பினை இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாடு முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் மீள ஒருங்கிணைந்தால் அந்தப் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தை விக்னேஸ்வரன், ஆனந்தி போன்ற நாசிகளிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து வருவதாகவும் இது தெளிவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலும், தெற்கில் சீனாவின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல மாணவ மாணவியர் 22 மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இது சிறந்த ஓர் விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சிங்கள மாணவ மாணவியர் நான்கு மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனவும் இதனை ஆரோக்கியமான நிiமையாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நாடு முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றே அர்த்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
6000 சிங்கள குடும்பங்களுக்கு சொந்தமான 21000 ஏக்கர் காணிகள், தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் சிங்களவர்களுக்கு காணி உரிமைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரபாகரன் கொல்லப்பட்ட போதிலும் நாடு விடுவிக்கப்படவில்லை என தாம் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு காரணிகளுக்காக காணிகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இலங்கையில் பிறந்தவன் இலங்கை குடி உரிமை பெற்றவன் அனவரும் இலங்கை பிரஜைதான் அவன் பெளத்தனோ தமிழனோ முஸ்லிமோ. இதுதான் சமாதானமானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நிலை.

    இரண்டாவது, சம்பிக்கபோன்ற பொறாமை நோயால் பாதிக்கப்பட்டு மாறுமதத்தை நாட்டைவிட்டு விரட்டுமளவிற்கு மனதில் பதியப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காக உன்னைப்போன்ற தரங்கேட்டவர்களின் பங்களிப்பு எதுவுமில்லை. பகரமாக அப்பாவி சிங்கள பாமரர்களை வீணாக சிறுபான்மையினருக்கெதிராக ஏவி விட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில சம்பிக்க அள்ளக்கைகள் இருக்கும் வரை புலி என்ன இன்னும் என்னென்னவெல்லாம் ஒருங்கிணையும்.

    முதலில் நீ படித்தவர்களை எப்படி மரியதையாக மதிக்கவேண்டுமென்பதை கற்றுக்கொள்.

    இவன் மன நோயாளி இவனது செய்திகளை ஜப்னா முஸ்லிம் வெளியிட்டு மனிதர்களை வீணாக க்டுப்பேத்த வேண்டாம் என்று தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.