Header Ads



ஈரானில் பெண்கள் மீது அசிட் தாக்குதல் நடத்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு

ஈரானில் பெண்கள் மீது அசிட் தாக் குதல் நடத்திய நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஈரானின் மூன்றாவது மிகப்பெரிய நக ரான இஸ்பஹானில் இவ்வாறான நான்கு அசிட் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதோடு ஒரு வாரத்திற்குள் நாடெங்கும் குறைந்தது 11 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதல்கள் குறித்து உத்தி யோகபு+ர்வமாக எந்த அறிவிப்பும் வெளி யாகாதபோதும், ஈரானின் கடுமையான ஆடை கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத பெண்களே இலக்காவதாக சமூகதள பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டோர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஈரான் பெண்கள் ஒழுக்கமான உடையை அணியவும் தமது தலை முடியை மறைக்கவும் சட்டம் விதிக் கப்பட்டுள்ளது.

இந்த அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சொஹைலாவின் தந்தை குறிப்பிடும்போது, "தாக்குதலால் அவளது முகம், தலை, இரு கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவளது வலது கண் முழுமையாக பார்வையை இழந்துவிட்டது. இடது கண்ணின் பார்வையை பாதுகாக்க 25 முதல் 30 வீதமான வாய்ப்புகளே இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்" என்றார்.

No comments

Powered by Blogger.