Header Ads



சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் குறுக்குவழியில் சமூக அங்கீகாரத்தை தேடுகிறதா..?

(எம். ஸப்ராஸ்)

முக்கிய குறிப்பு - கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கே உரியவை)

பொது பலசேனாவின் மாநாடு நடந்து முடிந்தது. வழமைப் போன்று சவால்கள் விடப்பட்டன. அதனைக் கண்ட சிலர் கொதித்தனர், வேதனைப்பட்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பல முஸ்லிம் இயக்கங்களுக்கு சவால்விட்டு குறிப்பிட்ட சில அல்-குர்ஆன் வசனங்கள் தொடர்பாக விவாதத்துக்கு வருமாறு பொது பலசேனா செயலாளர் சவால் விட்டார். அந்த சேனாக்களைக் கணக்கிலெடுக்காதவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறான சவால்கள் அவ்வப்போது விடப்படுவது, மேலிடத்து ஆசிர்வாதங்களோடு என்பதையும் அதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகளையும் சிந்திப்பவர் அறிவர். அதனைப் பொருட்படுத்தாதவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.

ஆனால் முஸ்லிம்களை எப்போதும் சவால் விட்டு விவாதத்திற்கு அழைப்பு விடும் ளுடுவுதுயினர் தமக்கான சமூக அங்கீகாரத்தை ஈட்டிக் கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் முயற்சியெடுப்பதாகத் தெளிவாகிறது. இஸ்லாம் தெளிவானது என்று நம்பும் நாம் ஏன் விவாவதத்துக்குப் போக வேன்டும். நாடியோர் இந்தக் குர்ஆனை விசுவாசிக்கட்டும் நாடியோர் அவிசுவாசியாக இருக்கட்டும் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அல்-குர்ஆன் விவாதித்து விளங்கும் ஒன்றல்ல. விளங்கும் ஆசைக்கொண்டோர் அதற்கு முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதின் மூலமே அல்-குர்ஆனை விளங்க வேண்டும். அல்-குர்ஆனுக்கும் இஸ்லாத்துக்கும் வரும் சவால்கள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது ஆரம்பகாலம் முதலிருந்;தே வெளிப்பட்டதல்லவா? இதன் பின்னால் உள்ள சமூகத்தை குழப்பும் சூழ்ச்சிகள் என்ன? இதைக்கூட விளங்காமல் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறும் இவர்களின் உள்நோக்கம் என்ன? ளுடுவுது யின் கடிதம் அது தனக்கொரு சமூக அங்கீகாரத்தை அடைய முயல்கிறது என்பதையே விளக்குகின்றது. அதுவன்றி ஏற்கனவே முஸ்லிம்களை அழித்தொலிக்கும் முன்முடிவோடு இருக்கும் இந்த சேனாக்களின் பேச்சுக்களை ஏன் நாம் பெரிதாக எடுக்க வேன்டும். அல்-குர்ஆனைப் படித்து உணர்ந்த  மக்கள் நூற்றுக் கணக்கில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் பொதுபல சேனாவின் சவால்களை பொருட்படுத்த வேன்டிய தேவையில்லை. எனினும் மாற்றுமத சகோதரர்களுக்கு இது பற்றிய தெளிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகங்கள் மூலம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.     


6 comments:

  1. You post it and you saying
    Essay is only safraz view. ...very funny. .come on grow up

    ReplyDelete
  2. இவர்களது எண்ணம் ACJU வில் உள்ளவர்கள் யாரும் இவர்களைப்போன்ற படித்தவர்கள் இல்லை அதனால் இவர்கள் போய் விவாதித்து ACJU நல்லபெயர் வாங்கிக்கொடுக்க நினைக்கின்றார்கள் போலும்?

    எலி அறுக்கும் ஆனான் அது அறுத்ததை அந்த எலியால் ஒரு போதும் தூக்கமுடியாது என்பது இவர்கள் முதிர்ச்சி வரும்போது புரிந்து கொள்வார்கள்?

    மனித மாமிசத்தை உண்ணகொடுத்த கதையை அதன் பின் விளைவை புரியாமல் உளறிவிட்டு பின்னர் நாம் மன்னிப்பு கேட்டு விட்டோம் என்று கூறி தப்பிக்க முனைந்தாலும், இவர்களின் இந்த இழி செயல் உலகம் அழியும் மட்டும் சிங்களவர்கள் மத்தியில் நமது முழு சமூகத்திற்கும் எதிராகவே பார்க்கப்படுகிறது, பார்க்கப்படும்?

    இளம் கன்று பயம் அறியாது? என்பதும் குட்டி ஆடு எவ்வளவு கொழுத்தாலும் அது வழுக்கள் தான் என்ற பல பழமொழிகள் இவர்கள் விடயத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது?

    இவர்களது செயற்பாட்டின் பின் விளைவுகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக ?

    ReplyDelete
  3. வீட்டில் இருந்துகொண்டு கட்டுரை வடித்தால் மட்டும் போதாது செயலில் இறங்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்பதற்காக மற்றவர்களை விமர்சனம் செய்கிறீர்களா? அல் குரானை ஒரு கூட்டம் இழிவு படுத்திப்பேசும் போது உங்களால் எப்படி இவ்வாறு கட்டுரைகளை எழுத முடிகிறது?

    ReplyDelete
  4. may allah guide them ,be unity in our umma,may allah guide us all

    ReplyDelete
  5. மார்க்க அறிவோ உலக அறிவோ தூர நோக்கோ இல்லத ஒருவரால் இந்த ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.சப்றாஸ் உங்களின் வயது தெறியவில்லை, இருப்பினும் நீங்கள் சிந்தனையிலும் எழுத்திழும் முன்னேறவேண்டும்.

    இலங்கை வாழ் முஸ்லிம்களை இதுவரை அழித்தொழித்தவர்கள் என்ற பெறுமையை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினரே தட்டிக்கோள்கின்றனர்.

    இறைவனின் உதவியால் ஏதோ சில வழிகளில் SLTJ வீழ்ந்து கிடந்த முஸ்லிம் சமுக சிதைவுகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர்.இறைவன் இவர்களை பொருந்திக்கொள்ளட்டும்.

    குர்-ஆன் பற்றிய தவரான கருத்துக்களை பொதுபல சேனா விடும்போது,அதனை பொய் என நிருபணம் செய்வது எமது கடமை,இல்லையேல்,குர்-ஆனை தெறியாத மக்கள் பலசேனாக்களின் கருத்தை நம்பிவிடுவர். அல்-குர்-ஆனில் முழுக்க முழுக்க என்ன உள்ளது என்று நமக்கே பூரணமான அறிவு இல்லாத வேளையில் எப்படி அண்ணியவர்கள் இதனை சரியாக புறிந்துகொள்வார்கள் என நினைத்து,பொதுபல சேனா என்ன சொன்னாலும் பரவாயில்லை,அதனை கண்டுகொள்ளாமல் விட்டால் போதும் என நினைப்பது?

    ACJUS இல் உள்ள அனைவரையும் தங்களது பதவிகளை கடவுளுக்காக இயராஜினாமா செய்து இளம் சமுகத்தினருக்கு படித்தவர்களுக்கு அப்பதவிகளையும் பொருப்புக்களையும் மாறிவழங்கி இஸ்லாத்தை தூய்மை படுத்த வேண்டும் என பல பல பல தடவைகள் நாம் பல சமுக வலைதளங்களில் வேண்டுகோளிட்டும் இதுவரை அப்படியொரு மாற்றம் நடைபெறவில்லை.

    பொதுபல சேனாவை உருவாக்கியவர்கள் யார் உங்களுக்கு தெறியுமா சப்றாஸ்? அது வேறு யாருமில்லை, இந்த ACJUS இனர்தான் என பல தடவை பொதுபலசேனாவும் மேடைகளில் மறைமுகமாக சொல்லியிருக்கின்றனர்.

    தங்களுக்கு பிடிக்காத,இதுதான் இஸ்லாம் என்று நம்பிய(பிழையான) இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை சமுகத்தில் கானும்போதே இவர்கள் பொதுபலசேனாவிடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.

    அசத்தியம் ஒழிந்தே தீறும் என்ற வகையில், இப்போதெல்லாம் ACJUS இன் செல்வாக்கும் அவர்களின் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துகொண்டே செல்கிறது.துரதிஷ்டவசமாக நம்பமுடியாத இளம் சமுகத்தில் சிலரும் மயக்கத்தில் இன்னும் இவர்களின் ACJUS பின்னால் செல்வதையிட்டு மணம் வருந்துகிறது.

    பக்க சார்பில்லாமல் ஜப்னா முஸ்லிம் இதனை பின்னூட்டலை பிரசுரிக்குமா?

    ReplyDelete
  6. ASSALAMU ALAIKUM
    கிறுக்கனுங்களுக்கு பதில் சொல்கிறோம் என்று நேரத்தை வீணடிக்காதீர்

    ReplyDelete

Powered by Blogger.