Header Ads



மன்னார் மாவட்டத்தில் 55 தையல் பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளது


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

மஹிந்த சிந்தனை திட்டத்தின்கீழ் ஆடைகளை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் வன்னி மாவட்டத்தில் தையல் பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் ஐம்பத்தைந்து தையல் பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளதுடன் எட்டு தையல் பயிற்சி நிலையங்கள் நாளை செவ்வாய்க்கிழமை(21) கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி நிலையங்களை கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின்கீழுள்ள புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் தரமான தொழில்நுட்ப பயிற்சியைப்பெற்ற ஆசிரியர்கள் வழிநடாத்தவுள்ளனர்.

முதலாவது தையல் பயிற்சி நிலையம் கரிசலில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் அன்றையதினம் பனங்கட்டுகொட்டில், அடம்பன், றசூல்புதுவெளி, குஞ்சுக்குளம், வேப்பங்குளம், பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி ஆகிய பிரதேசங்களிலும் பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கபடவுள்ளன.
மாதர்களின் வளர்ச்சி தேசத்தின் எழுச்சிக்கேற்ப மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சிகளை  வழங்கி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க அமைச்சர் றிஷாத் பதியுதீன் முன்வந்துள்ளார்.

குறிப்பாக ஓவ்வொரு தையல் பயிற்சி நிலையத்திலும் 21 அதிவேக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் யுவதிகளுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் மன்னார் மாவட்டத்தையடுத்து விரைவில் வவுனியா முல்லைத்தீவு ஆகிவற்றில் தையல் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதன்தொடர்ச்சியாக புத்தளம், மாத்தளை, திருகோணமலையிலும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.