Header Ads



''இது பௌத்த நாடு, என்ற அந்தஸத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' ஜாதிக ஹெல உறுமய

-GTN-

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில்; 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி நவீன கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

களியாட்டங்களுக்கும் வெளிநாட்டவரின் கலை காலாச்சாரத்துக்கும் ஏற்ற முறையில் நவீன கொழும்புத் துறை முகம் அமையும் என்றும் இது பௌத்த நாடு என்ற அந்தஸத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியதாக தெரியவருகின்றது.

1337 அமெரிக்க மில்லியன் டொலரில் அமைக்கப்படவுள்ள நவீன கொழும்பு துறைமுக நகர் மேலைத்தேச ஆதிக்கத்துக்கு உட்பட்டு இலங்கை பௌத்த மக்களின் ஒட்டுமொத்த கலாச்சரங்களையும் மாற்றியமைக்கும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு சீனா உதவி வழங்குவதால் சீனா நாட்டின் கலாச்சாரங்களும் வியாபார நோக்கில் மேற்கத்தைய சூதாட்டங்களுக்கும் கொழும்பு துறைமுக நகரம் இடமளிக்கலாம் என்றும் சுதந்திர முன்னணி கூறியதாக தெரியவருகின்றது.

ஆனால் தமது எதிர்ப்பு தொடர்பாக கட்சி உறுப்பினர்களோடு மாத்திரமே பேசியதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கோ அல்லது அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களிடமோ தமது எதிhப்பை பங்காளிக் கட்சிகள் இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் எமது கொழும்புச் செய்தியாளர் கூறினார்.

இந்த நகரத்தில் ஐந்து நட்சத்திர ஹேட்டேல்கள், வர்த்தக நிலையங்கள், தொடர்மாடி வீடுகள், மைதானங்கள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.