Header Ads



சந்தனக் கிண்ணத்துள் நுழைந்த சாக்கடைகள்...!

(கொட்டியாரப்பற்றான்)

வரலாறு எல்லாவற்றையும் பதிவுசெய்வதில்லை .அதே போல எல்லாநபர்களையும் பதிவு செய்வதுமில்லை. வரலாற்றை உருவாக்குபவர்களையே வரலாறு பதிவு செய்கிறது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் அரசியலை எடுத்துக்கொண்டால் பிரித்தானிய ஆட்சியாளர்களால்  அரசியல் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு வந்த காலம் முதல் இலங்கை முஸ்லிம்கள் பல வரலாற்று மனிதர்களைக் கண்டுவந்திருக்கின்றனர். வரலாறு நெடுகிலும்  அத்தலைவர்கள் தம் தனித்துவத்தை விட்டுக்கொடாது பேணிவந்திருப்பதைக் காணலாம். 'சட்டசபையில் முஸ்லிம்களுக்கு என்று தனியான  பிரதிநிதிகள் தேவையில்லை'.என ராமநாதன்கள் முழங்கியகாலத்தில். தனித்துவமான முஸ்லிம் சமூகத்துக்கு தனியான பிதிநிதித்துவம் தேவை என அறிஞர் சித்திலெப்பை முஸ்லிம் நேசன் பத்திரிகை  மூலம் போராடியதில். அன்று முதல் தமிழ் அரசியலோடு கலந்து கரைந்போகவிருந்த பேராபத்து தலைப்பாகையோடு போனது.

வரலாறு அவ்வப்போது இப்படியான சம்பவங்களையும்  தவைர்களையும் தந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களும் அவர்கள ;மூலம் பயனடைந்து கொண்டே வந்திருக்கின்றார்கள். அந்தவரிசையில் வைத்துப்பார்க்கப்பட வேண்டியவரே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள். சேர் ராசிக் பரீட், டிபிஜாயா,  பதியுதீன்மஹ்மூத் போன்ற தலைவர்கள் போல தமது காலத்தில் மக்களுக்கு ஆற்றக்கூடிய பணிகளை உணர்ந்து ஆற்றியவர் எம்.எச. எம்.அஸ்ரப் அவர்கள்.

குறிப்பாக மக்களுக்கு கிடைக்கவேண்டிய அபிவிருத்pயும் ஒரு முக்கியமான உரிமையாகும்.என்பதைத் தெளிவாக விளங்கியிருந்த அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்கள்இ அரசியலில் பகடைக்காயாகவோ அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அடுத்த தேர்தல் வரைக்கும் வீரவசனங்களைக் கேட்டுப் புல்லரிப்பலர்களாகவோ மாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விளிப்புணர்ச்சியை உண்டு பண்ணியதில்; அஸ்ரப் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. மர்ஹூம் அஹமட் லெப்பை அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கோங்கிரஸை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஒரு பெரும் மக்கள் சக்தியாக மாற்றிக்காட்டினார். மக்கள் மீதான அன்பு தூரநோக்கு விசுவாசம் மக்கள் நலன் சார்ந்த திட்டமிடல் மக்களது வாழ்வியல் பற்றிய தெளிவான அறிவுஇ மக்களோடு மக்களாக வாழ்ந்ததனால் மக்களது தேவை பிரச்சினை பற்றிய தெளிவான பார்வை அனுபவம் என்பன அவருக்கு போதியளவு இருந்தது. அதனால் தான் பிளவுபடாத கட்சியின் ஏக தலைவராக வெற்றிகரமாக மக்களது நன்னம்பிக்கை முனையாக அவரால் திகழமுடிந்தது.

சொல்வதைதெளிவாக உறுதியாகசொல்லும்பாங்கு;இ பிசிறில்லாத உச்சரிப்பு வசீகரக்காந்தக்குரல்  தோற்றம்; ஆழ்ந்த அரிசியல் புலமை சட்டஅறிவு என்பனவற்றுக்கு அப்பால் நம்பியமக்களுக்கு துகோகம் இழைத்து விற்றுப்பிழைத்து விடக்கூடாது என்பதில் இருந்த கவனமும் தான் அவரை தனித்துவமான தலைவராகக் காட்டியது. வெற்றுக்கோசங்கள்இ உணர்ச்சிவசப்படுத்தல் போன்ற உத்திகளில் மொத்த நம்பிக்கையையும் வைக்காது அர்த்தமுள்ளவிடயங்களைப்பற்றிப் பேசினார். இலங்கை இந்திய ஒப்பந்தம் பதின்மூன்றாவது சீர்திருத்தம் போன்றனவற்றை தேர்தல்பிரசாரத்தினூடு தெளிவாக மக்களுக்கு விளக்கியதை இப்போது நினைத்துப்பார்க்க முடிகிறது. 

அதே நேரம் அஸ்ரப் அவர்களுக்குப் பின்  அரசாங்கங்களுடன் செய்யப்பட்ட செய்கின்ற ஒப்பந்தங்கள் கட்சிகளுடனான உடன்பாடுகள், மோதல்தவிர்ப்பு ஒப்பந்தம புலிகளுடனான ஒப்பந்தங்கள் போன்றனவற்றில் மக்களுக்காகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்டவை; இவை இவை தான் என எத்தனை தடவைகள் விசுவாசமாக விளக்கப்பட்டன? என்ற நியாயமான கேள்விகள் நம்முன் விடைகேட்டு எழுவதை தவிர்க்கமுடியாது.

நடைமுறை அரசியல் பிரச்சினைகளுடன் மக்களது கவனத்தை ஈர்க்கும்' முகமாக அஸ்ரப் அவர்கள் முன்னெடுத்த  கரிநாள் அனுஸ்டிப்பு அரசுக்கான ஆதரவை நிபந்தனையுடன் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளல் ராஜினாமா போன்ற செயற்பாடுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. மேலும் மக்களை உணர்ச்சியூட்டி அமைச்சு ஒன்றைப் பெற்றோமா அத்தோடு அடுத்த தேர்தல்வரை வார்த்தைகளால் மக்கள் வயிற்றை நிறைத்தோமா என்றிருக்காமல் தனது அமைச்சுக்கூடாக ஆட்சிக்காலத்துக்குள்ளாக உச்ச அளவில் எந்த அளவில் பணியாற்றமுடியுமோ அந்தளவு அஸ்ரப் பணியாற்றினார்.  

அரசாங்கங்களுடனான ஒப்பந்தங்களின்போது இரந்து கேட்டலோ கெஞ்சிக் கேட்டலோ  கிடைப்பதைப்பெற்றுக் கொள்வதோ அன்றி . மாறாக இன்னின்ன வை தரப்படவேண்டும் என ஆட்சியாளர்களிடம் கேட்டுப்பெற்றுக் கொண்டதோடல்லாமல் இவைதான் பேசப்பட்டவை கேட்கப்பட்டவை என்பதையும் ஓட்டுப்போட்ட மக்களுக்கு வெளிப்படுத்தினார். அதாவது பேரம் பேசும் சக்தியை விலைபேசாமல் பேரம்பேசும் சக்தியை எப்போதும் ஒரு ஆயதமாகப்பாவிப்பதில் அஸ்ரப் கவனமாக இருந்தார். வெறும் மாமூலான அரசியல்வாதியாக அல்லாமல் ஜனாதிபதிசட்டத்தரணி வரைப் பயின்ற அவர் பொதுவான தேசியப் பிரச்சினைகளைத்தீர்ப்பதிலும் பங்கெடுத்தார். சோமதேரருடனான வாதங்களில் ஈடுபட்டு தெளிவுகளை வழங்கிய அதேநேரத்தில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுத்திட்டப்பொதியினை முன்வைத்து பாராளுமன்றில் விளக்கமளித்தார். தனது சொகுசுக்காக ஒருஅமைச்சசுப்பதவி கிடைத்தால் போதும் என்று இலகு;வைத்து மூன்றாந்தர அரசியல் செய்யாமல் தனது அமைச்சுப்பதவியினால் மக்களை அலங்கரித்துப்பார்த்தார். அதனால்தான் துறைமுக அதிகாரசபை வேலைவாய்ப்புக்கள் என்றும் ஒலுவில் துறைமுகம் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்றும் கொழும்பில் தலைமைச் செயலகம் என்றும்; என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க முடிகிறது. நாங்கள் அஸ்ரப்பின் வாரிசுகள்... அஸ்ரப்பின்பாசறையில் பயின்றோம.;... என்போரில் எத்தனை பேரிடம் இன்று இந்த வாரிசுத்தனத்தைப் பார்க்கமுடிகிறது?

 அன்னார் இருந்த தலைமைப்பீடத்தில் இன்று யாவாரிகள் உட்கார்ந்து கொண்டு ஏழு தலைமுறைக்கு சொத்துச் சேர்த்துத்தரத்தக்க அமைச்சை பெற்றுத்தரும் ஒரு கருவியாக கட்சி பயன்படுத்தப்படுகிறது. அவருக்குப்பின் தலைமைப்பதவியை கைப்பற்றிய தலைமைத்துவத்தால் ஓட்டுப்போடும் கிழக்கு மக்களுக்காக இற்றை வரை ஒரு செங்கல்லைக்கூட கொண்டு வந்து போடாத கையாலாகாத்தனத்தைத்தான் பார்க்க முடிகிறது. போதாக்குறைக்கு 'பள்ளி உடைகிறது எனக்கு வெட்கம் வந்துவிட்டது. நான் இதோ அல்லது அதோ விலகப்போகிறேன்' என வெட்கமின்றி அறிக்கைகளை அதுவும் பாராளுமன்றத்துக்கு வெளியில் வெளியிட முடிகிறது.

ஆக அஸ்ரப் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது அரசியலின் மூலம் பெற்ற உரிமைகள் அபிவிருத்திகள் குறித்த போதும் போதாமைகள் பற்றி அன்னார் வாழுங்காலத்திலேயே பல விமர்சனங்கள் இருந்தன. ஆனால் இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் அஸ்ரப் அவர்கள் சாதித்தவை இமாலயச் சாதனைகளாகும்.

மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் தமது இறுதிக் காலத்தில் முஸ்லிம் கோங்கிரஸ் மூலம் பெறக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் தொகையை தாண்டி தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்கும் முகமாக தே.ஜ.மு உருக்கி ஒரு பன்முக அரசியலை  முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் ;தான்  அன்னார் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார். அவரைத்தொடர்ந்து பெருந்தலைவர் அஸ்ரப்பின் வாரிசுகள் இன்று அன்னார் விட்ட இடத்தில் இருந்து தொட்டுச்செல்கிறார்களா? அல்லது விட்ட இடத்தில் இருந்து பின்னோக்கி இழுத்துச் செல்கின்றார்களா? அல்லது  தொடர்ந்தும் வெறும் வெற்றுக்கோசங்களால் வயிறு நிறைத்து காலம் தள்ளலாம் என்ற சிந்தனைக்கு மக்கள் மென்னேலும் உயிர் கொடுக்கப்போகின்றார்களா? அல்லது பயன்பாட்டு அரசியலை; நோக்கி நகரப்போகின்றார்களா? போன்ற வினாக்களுக்கு இன்று விடைதேடுவதே மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு மக்கள் செய்யும் நன்றியறிதலும் மரியாதையும் ஆகும்.
                              

1 comment:

  1. Need to publish a book about life of marhoom Ashraff and his life in politics.This will helpful for our future generation to understand leadership of Muslims.

    ReplyDelete

Powered by Blogger.