Header Ads



அரசாங்கத்தைப் பலப்படுத்துவதோ, ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல - ஹக்கீம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (12) பசறை, கலஉட, குருத்தலாவ ஆகிய பகுதிகளில்  ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரைநிகழ்த்தினார்.

அன்றைய தினம் நடைபெற்ற கூட்டங்களில் ஸ்ரீ.மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி, (செயலாளர் நாயகம்) பைஷல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தெளபீக், முத்தலிப் பாவா பாறுக், எம்.எஸ்.எம்.அஸ்லம், மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஆர்.எம்.அன்வர், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வரும் கட்சியின் மூத்த துணைத்தலவருமான ஏ.எல்.முழக்கம் மஜீத்,  பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிதிப்பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ராவுத்தர் நெயினாமுஹம்மட்,  ஏ.முபீன், ஆகியோர் உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குருத்தலாவயில் இடம்பெற்ற அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றிய கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அக்கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரை நிகழ்த்துகையில்:

அரசாங்கத்தைப் பலப்படுத்துவதோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல, முஸ்லிம்களைப் பலப்படுத்துவதே நாம் ஒற்றுமைப்பட்டு இத்தேர்தலில் போட்டியிடுவதன் ஒரே நோக்கமாகும்.

கிழக்குமாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் கபளிகரம் செய்யப்படுவதும், படையினரின் மேலாதிக்கப்போக்கும் தொடருமானால், அந்த மாகாணசபயின் தீர்மாணிக்கும் சக்தியாக உள்ள எமது கட்சி உரிய தருணத்தில் மிகவும் காட்டமானதும், தீர்க்கமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றார்.

1 comment:

  1. இந்த மேடையில் இருந்துகொண்டிருக்கும் கட்சியின் தலைவர், செயலாளர் நாயகம் ஆகிய இருவரினதும் கருத்துக்களை (இலக்குகளை) தருகின்றேன் பாருங்கள் :-

    கேள்வி: கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அரசுடன் செய்த ஒப்பந்தப்படி முஸ்லிம் காங்கிரஸ் உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளுமா என்பது பற்றி விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனவே? – metromirror on August 27, 2014

    பதில்: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும், அரசுடன் நாம் அப்படியொரு ஒப்பந்தம் செய்துகொண்டமை உண்மையே. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் விடயம் மட்டுமல்ல, பல விடயங்களுள்ளன. அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையுள்ளது.
    ஆனால் என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் பதவியென்பதை விடவும், கரையோர மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்படவேண்டும்.
    தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது. – ஹசன் அலி

    "கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் கபளிகரம் செய்யப்படுவதும், படையினரின் மேலாதிக்கப் போக்கும் தொடருமானால், அந்த மாகாண சபையின் தீர்மாணிக்கும் சக்தியாக உள்ள எமது கட்சி உரிய தருணத்தில் மிகவும் காட்டமானதும், தீர்க்கமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் "– அமைச்சர் ஹக்கீம்

    ReplyDelete

Powered by Blogger.