Header Ads



தம்புள்ளை பள்ளிவாசல் மீது அடாவடித்தனம் மேற்கொள்ளும் சக்திகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு பட்டாசு வீசியதாக நான் எந்தவொரு ஊடகத்துக்கும் கருத்துத்தெரிவிக்கவில்லை எனக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், நள்ளிரவில் அங்கு வந்த இருவர் அங்கு கைக்குண்டை வைத்து விட்டுச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் நிருவாகம் முறைப்பாடு செய்ததற்கிணங்க விசாரணை நடத்திய பொலிஸாரே அது பட்டாசு என அறிவித்ததாகவும் கூறினார்.

"தம்புள்ளை பள்ளிவாசலுக்கு பட்டாசு வீசியதாக நான் எந்தவொரு ஊடகத்துக்கும் தெரிக்கவில்லை"என்ற தலைப்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

 பள்ளிவாசலுக்கான பாதுகாப்பு கடமையில் நான்கு பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

     கைக்குண்டாக இருந்தாலும் சரி பட்டாசாக  இருந்தாலும் சரி சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பாதுகாப்புத் தரப்பினரின் கடமையாகும். 

இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுமிடத்து அது குறித்து பொலிஸ் தலைமயகத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு ஐனாதிபதி அறிவித்திருக்கின்றார்.

ஊவா மாகாண சபைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து ஆட்சி தலைமைக்கும், பொலிஸ் பிரிவுக்கும் பாதுகாப்பு செயலகத்துக்கும் தெரியப்படுத்தினேன். 

 தம்புள்ளை பள்ளிவாசல் மீது அடாவடித்தனம் மேற்கொள்ளும்  நாசகார சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்.

பள்ளிவாசல் விடயத்தில் எந்தவித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லை என பள்ளிவாசல் நிருவாக சபை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கு உறுதியாக தெரிவிக்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

No comments

Powered by Blogger.