Header Ads



அல்லாஹ் வழங்கிய ஒரு சந்தர்ப்பமாக நினைத்து, உறுப்பினர்களை தெரிவுசெய்வோம்..!

(அஷ்ரப் ஏ.  சமத்)

நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது.  அமைச்சர் றிசாத்பதியுத்தீன், வை.எல்.எஸ் ஹமீட், பாரளுமன்ற உறுப்பிணர் ஹசன் அலி அஸ்லம் ஹாஜி, நிசாம் காரியப்பர், மாகாணசபை உறுப்பினர் சுபைர், நவாஸ் முஸ்தபா, மற்றும் முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்களர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன்,

பதுளை மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இரண்டு கட்சியும் இணைந்து இரட்டை இலையில் ஆகக் குறைந்தது ஒர் ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.  இந்த இரண்டு கட்சியின் ஜக்கியத்தை இந்த நாட்டின் சகல அரசியல் மற்றும் அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த கட்சிகளின்  தலைவிதியை இந்த பதுளை மக்கள் முற்றாக மாற்றுதல் வேண்டும்.  எங்களது காலத்தையும் நேரத்தையும் இரண்டு கட்சிகளின் அரசியல் உறுப்பிணர்கள் இங்கு கடந்த ஒரு மாத காலமாக தங்கியிருந்து எடுக்கும் முயற்சிக்கு நீங்கள் நன்றியுடையவர்களக இருக்க வேண்டும்   உலமாக்களும், புத்திஜீவிகள், மற்றும் சூறா கவுன்சில் ஆகியோர்கள் இணைந்து ஊவாவில் இணைந்து செல்லுங்கள் என்று கொள்ளுப்பிட்டி பள்ளியிலும் அதன் பின் சகோதரர் ஹக்கீமீன் வீட்டிலும் 3 முறை சந்தித்து எடுத்த முயற்சியை நீங்கள் காப்பாற்ற வேண்டும். 

பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் பல  தசாப்தங்களாக அரசியல் தலைமைத்துவம் அற்ற ஆனாதைகளாகவும்; மிகவும் கஸ்டத்தியிலும் வறுமைக் கோட்டிலும் வாழ்ந்து வருகின்றீர்கள். இங்கு வாழ்கின்ற முஸ்லீம்களது பிரதேசங்களிலும் எந்த அடிப்படை வசதியிமின்றி மிகவும் கஸ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது. இ ங்கு ஒரு பாடசாலையில் கடந்த 60 வருடமாக ஒரு முஸ்லீம் மாணவன் மட்டுமே க.பொ.சா.தரம் சித்தியடைந்துள்ளான். புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை வரலாற்றிலேயே 5 பேர் சிந்தியடைந்துள்ளார்கள் கல்வித்தரம் மிகவும் பின்னடைந்துள்ளது.  கடந்த 3 தசாப்தங்களாக தமது வீடுகளுக்கான மல சல கூடத்தைக் கூட கட்டிக் கொள்ளத முடியாமல் உள்ளோம். ஏனைய சமுகங்களுக்கு அரசாங்கமே வீட்டுத்தகரம் குடி நீர் பாடசாலைகள் மல சல கூட  கட்டுமாணங்கள வழங்கப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லீம் சமுகத்திற்கு எதுவேமே கிடைக்கவில்லை. குடிநீர் இல்லாது மலைகளிழும,; மடுக்களில் பெண்கள்  பல மைல்கள் தூரம் ஏறிச் சென்று தண்னீர் குடத்தை  சுமந்து வந்து நீரைப் பாவிக்கின்றார்கள். 4 ஏக்கரில் 90 குடும்பங்கள் மிகவும் நெருக்கமாகவும் சிறிய குடிசைகள் அமைத்த வாழ்கின்றீர்கள். அரசாங்கம் ஏனைய சமுத்திற்கு கிடைத்த அபிவிருத்திகள் நமது சமுகத்திற்கு கிடைக்க வில்லை. ஆகக் குறைந்தது நமக்கென ஒரு பிரச்சினையும் வரம்போது பொலிசில் சென்று ஒரு முறைப்பாட்டைக்கூட பதி அச்சமுள்ளவராக நீங்கள் வாழ்ந்து வருகின்றீர்கள். 

இதற்கெல்லாம் முதன்மைக்காரணம் கடந்த காலத்தில் நாம் யானைக்கும் வெற்றிலைக்கும் வாக்களித்து மற்றைய சமுகத்தினரது உருப்பிணருக்கு ஜயவே கூறி வந்துள்ளோம். நமது அண்றாட அழுவல்களை முடிப்பதற்கு முடியாமலும் ஒரு விஞ்ஞான ஆசிரியரை நமது பாடசாலைக்கு பெறமுடியாமல் உள்ளோம். மற்றைய சமுகத்திற்கு தமிழ் கல்வியமைச்சரையே இந்த அரசு வழங்கியிருக்கின்றது. அவர்கள் ஒன்றுசேர்ந்து தமது வாக்குபலத்தை காட்டியிருக்கின்றார்கள். நாம் யானைக்கும் வெற்றிலைக்கும்  வாக்களித்து வந்துள்ளோம். இதற்கு முதல் காரணம் நாம் தமக்கென்று ஒரு முஸ்லீம் உறுப்பிணரை பெற்றுக்கொள்ளாமையே க்காரணமாகும்.

ஆகவேதான்  இச் சர்ந்தர்ப்பத்தை மிகவும் அல்லாஹ் வழங்கிய ஒரு சர்ந்தப்பமாக நினைத்து இதில் இருந்து விலகி இருக்கும் ஏனைய சகோதரர்களையும் அனுகி  அவர்களையும் உள்வாங்கினால் நிச்சயமாக 2 உறுப்பிணர்களை பெற்றுக் கொள்ள முடியும்.  

30 ஆயிரம் வாக்குகளில் ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினரையாவாது பெருவதற்கு 15ஆயிரம் வாக்குகளையாவது நீங்கள் இந்த இரட்டை இலைக்கு வாக்களிக்க   வேண்டும். 

நாங்கள் ஒருபோதும் அரசிற்கு சோரம்போகுவதற்காக இந்தக் உறுப்பிணரை தெரிபுசெய்யவில்லை. பதுளையில் உள்ள உலமாக்கள் மத்தியில் இந்த  உறுப்பி;ணர்கள் சத்தியம் செய்துள்ளனர்.  இன்சா அல்லாஹ் 1 உறுப்பிணராவது தெரிபுசெய்யப்பட்டால் ;அந்த உறுப்பிணரை நடவடிக்கை அவரது சகல செயற்பாடுகளளையும் பதுளை மாவட்ட உலமாக்களே முடிபு எடுப்பார்கள். இதில்  முஸ்லீம் காங்கிரசோ அகில இலங்கை மக்கள் காங்கிரசோ தீர்மாணம் எடுப்பதில்லை. உங்களுக்கென ஒரு முஸ்லீம் அரசியல் அதிகாரத்தை பெற்று அவர் ஊடாக உங்கள்பகுதிக்கு எங்கலாள் என்ன உதபிகளை ஆலோசனைகளைச் செய்யமுடியுமோ அத்தனையும் நாம் செய்வோம். என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

பாரளுமன்ற உறுப்பிணர் ஹசன் அலி –

பதுளை மாவட்ட இரட்டை இலையில் முஸ்லீம் உறுப்பிணர்களை தெரிபுசெய்து பதுளை கச்சேரியில் தாக்க செய்ய தயராக இருந்தபோது வை.எல்.எஸ் ஹமீட்டுக்கு ஓரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்கள.;  ஹமீட் அந்த போனுக்கு பதில் அளியுங்கள் என்று என்ணிடம் அந்த தொலைபேசி அழைப்பைத் தந்தார். அதில் அரசாங்கத்தின்  சார்பில் பிரபல நகர சபை வாக்கு எடுத்த 3 பேர் உள்ளனர். அவர்களை உங்கள் கட்சியில் போட்டுக்கொள்ளுங்கள் என்று சுசில்  சொன்னார். நான் சொன்னேன் அப்படி செய்யமுடியாது. இந்த கட்சி வேற்பாளர்களை  தயாரித்தது இந்த பிரதேச உலமாக்கள், மௌலவிமார்களும். அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என சொல்லி தடுத்தோம். என கூறினார்கள். 

நீங்கள் ஒற்றுமையாக வாருங்கள் என்று சொன்னீர்கள், ஒருமேடையில் 2 தலைவரும் வரவேண்டும் சொன்னீர்கள், அதன் பிறகு உலமாக்கள் முன் சகல வேற்பாளர்களும் சத்தியம் செய்து கையொப்பமிட வேண்டும் சொன்னீர்கள் அத்தனையும் நாங்கள் செய்துள்ளோம். இதன்பிறகு இந்தப்பிரதேச மக்களின் கைகளிலேயே முடிபு உள்ளது. எனக் கூறினார்.

4 comments:

  1. Summary for SLMC development....................

    SLMC: the point of slmc in kalmunai so where is the development, can go to see the road/village/ ect.. no development without uthumalabbai.
    At Ninthavur where is the development after 25 years only one building provide by housing ministry (but SLMC hassan ali says lol)
    Kathankuddy: without Hissbullah so think about slmc what when where they done development history
    Akkaraipattu: so what are the development thoug.. slmc
    Pottuvil: nothing.....
    Now at UVA
    so what there will do to UVA ........
    So= that supporting government ^ but people is = 0.

    ReplyDelete
  2. என்னதான் இருப்பினும் கண்டிப்பாக முஸ்லிம்கள் இரட்டை இலையை ஆதரித்து நமது வாக்குகள் சிதறடிக்கப்படாமல் தமது ஒற்றுமை சீர்குலைவதை தடுக்கவேண்டும்.

    ReplyDelete
  3. can any one give some valid reasons as to why Muslims in Uva and other parts of the country should vote for SLMC / Leaf ? In the past Muslims voted for SLMC / All Ceylon Muslim Congress, what happened? those votes were sold for Ministerial portfolios, were those corrupted portfolios helpful to solve the problems of Muslims or did they secure the lives of Muslims in the South or did they protect the masajiths in the country from BBS and MR brothers? may be helpful to enjoy the ministerial perks by the politburo members ! who did speak in parliament during these burning days ? is it not Ranil ? TULF ? JVP ? surely not the Muslim Ministers elected by the Muslim votes! what happened to the Eastern provincial councils elections ? you spoke against MR government and collected all Muslim votes and surrendered through back doors? how much did you receive for these votes from MR government ! shameful politicians ! what guarantee you can give to the Muslims that the elected members will not be sold again to the government like in EP. Please do not sell the name of Allah and Quran like ISIS in middle east. do not spoil the name of Muslims in Sri Lanka, they lived in honest and high degree of dignity. do politics but do not spoil the name of the community by trading Muslim votes.

    ReplyDelete
  4. @ Sri Lankan

    முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து சின்னாபின்னப்பட்டுள்ள இந்த நிலைமையில் இரு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன: அதாவது பிரிந்துள்ள இரு தரப்பினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் இதை விட வேறென்ன காரணம் தேவை வெல்வதும் தோற்பதும் சகஜமே அதுவும் தேர்தல் கேட்கப்படும் இடம் மக்கள் தொகை கட்சியின் சென்றகால மற்றும் சமகால கொள்கைகள் என்பவற்றினூடாக மக்கள் வாக்களிக்கின்றார்கள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் தற்போது ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம் முஸ்லிம்களின் வாக்குகளை கட்சிகளை பிரித்து பிரித்து சிதறடிப்பதில் மிகவும் உன்னிப்பாக செயல் படுகின்றார்கள் பலர். இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இரு கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து கழத்தில் இறங்கியுள்ளார்கள் அதற்கான முகிய காரணம் முஸ்லிம்களின் பிரதி நிதியொன்றின் ஒரே குறிக்கோள் அவ்வளவுதான் அப்பிரதி நிதியின் செயற்பாடு பிற்பாடு, ஆனால் முஸ்லிம்களின் சக்தி இன்னும் சீர்குலையவில்லை என்பதுவும் அதன்மூலம் தெட்டத்தெழிவாகும்.

    இதை விட வேறென்ன வேண்டும் நமக்கு எந்த முஸ்லிம்தலைவர்களும் முஸ்லிம்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். என்பது எனது கருந்து. ஆனால் பேச்சை விட செயலை எதிர்பார்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பு.

    ReplyDelete

Powered by Blogger.