Header Ads



தர்மபால மீது இனவாதி முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனை நாங்கள் மாற்றியுள்ளோம் - மகிந்த


-Gtn-

இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர். நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னை கடிந்துகொண்டனர், யாரும் துட்டகெமுனுவை நினைவுகூற விரும்பவில்லை,

தர்மபால மீதும் இனவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனை நாங்கள் மாற்றியுள்ளோம். நாங்கள் சிங்களபௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை மாற்றியுள்ளோம்,

நாட்டிற்க்கு முதுகெலும்பை நாங்கள் வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும் திரைப்படங்கள்எடுக்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்க கூடிய பெருமித உணர்வை நாங்கள் தேசத்தி;ற்க்கு வழங்கியுள்ளோம். 

3 comments:

  1. சொல்லாமல் சொல்லுங்கள் நான் இன்வாதி என்று இதைத்தானே, பொது பலசேன கேட்டது. தோற்றுப்போய்விடுவோம் என்ற பயம் மனதில் உள்ளது என்பது தெட்டத்தெழிவாக உணரக்கூடியதாக உள்ளது.

    ReplyDelete
  2. துவேஷம் எல்லோருக்கும் தெரிந்ததே, அனால் சனாதிபதிக்கு உள்ள துவேஷம் இப்போது தானே தேய்கிறது. " இது ஸ்ரீ லங்கா, ஒரே நாடு. இங்கு ஜாதி பேதமோ, மத பேதமோ, இனபேதமோ இல்லை, நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ வேண்டும்" என்று வாய்கிழிய கத்தும் ஜனாதிபதி கருத்து!!!!!!

    ReplyDelete
  3. வகுப்பார் அது போல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை (2) தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை................................   ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா - .....

    ReplyDelete

Powered by Blogger.