Header Ads



பள்ளிவாசலுக்கு அருகில் நாயின் உடல், 7 கடைகள் சேதம், முஸ்லிம்களை அமைதிகாக்க கோரிக்கை

பதுளை பதுலுப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் முடிவில் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக பிரதேசத்தில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் காரணம் பதுளை முஸ்லிம் பள்ளிவாசலில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே கூட்டம் நடைபெற்ற பள்ளிவாசலுக்கு எதிரில் கொலை செய்யப்பட்ட நாயின் உடலை சிலர் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை அடிப்படையாக கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் இப்படியான சம்பவம் பற்றி தமக்கு தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் - பதுளை பள்ளிவாசல் கோரிக்கை

பதுளை பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 24 மணி நேரத்திற்குள் அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்யும் வரை அமைதியாக இருக்குமாறு பதுளை முஸ்லிம் பள்ளிவாசல் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பதுளையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 7 கடைகள், பள்ளிவாசல் மற்றும் ஒரு பாடசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தில் அமைதி நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.