Header Ads



சவூதி அரேபியாவில் 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவரின் சடலம் இலங்கை வந்தது


சவூதி அரேபியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான கண்டி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேசத்தை சேர்ந்த நயனாகுமாரி ஜயசூரிய என்ற 28 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக அனுப்பப்பட்டுள்ளார்
இவர் கடந்த 2013.10.29 ஆம் திகதி, சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேற்படி பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளதாவது,

எனது மனைவி சவூதி அரேபியாவுக்கு சென்று மூன்று மாதங்கள் எதுவித பிரச்சினைகளின்றி வேலை செய்தார். அதன்பின் வீட்டின் உரிமையாளர் துன்புறுத்துவதாக அவர் என்னிடம் பலமுறை தொலைபேசியில் கூறினார்.

இதுதொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நான் முறைப்பாடு செய்தேன். ஆனாலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு சென்றபோது, எனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினார்கள்.

எனது மனைவி தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது சடலம் ஐந்து மாதங்களுக்கு பின்பே அனுப்பப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுக்கமாறு சம்பந்தப்பட்ட தரப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். 

மேற்படி பெண்ணுக்கு முறையே 11, 6 வயதில் இரு மகன்மார்கள் உள்ளனர்.


2 comments:

  1. இது வரைக்கும் சவுதியில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாதவர்களாகத்தான் சவுதி அரசாங்கம் உள்ளது. சவுதியில் உள்ள இலங்கைத்தூதரகம் மிகக்கேவலமானது.

    ReplyDelete
  2. மிக கேவலமான தூதரகமாக இலங்கை தூதரகமே உள்ளமை அங்குள்ள அனைத்து இலங்கையருக்கும் தெறியும்.

    வெளிப்படையாக அங்கு நடக்கின்ற ஊழலையும் பிரச்சினையையும் இதே ஜப்னா முஸ்லிமில் எழுதியும் இற்றைவரைக்கும் அந்த கேவலமான நிலையை இலங்கை அரசு மாற்றியமைக்கவில்லை என்பது பாரிய கவலை.

    வேலைக்காக வரும் எவராக இருந்தாலும், இலங்கை தூதரகத்தை நம்பிமட்டும் வந்துவிடாதீர்கள் என்று நாம் புத்திமதி சொல்லுகிறோம்.

    இலங்கை அரசின் தரத்தையே,அதன் தூதரகங்களும் கொண்டிருக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.

    படிக்காதவர்கள் மீண்டும் படித்துக்கொள்ள அந்த இனைப்பை கீழே தருகிறோம்.

    http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_9168.html?spref=fb

    ReplyDelete

Powered by Blogger.