Header Ads



எதிர்காலத்தில் மிருகத் தன்மை பொருந்தியோரே இந்நாட்டில் உருவாகுவர் - ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்

(Jm.Hafeez)

நாட்டில் தற்போது நடக்கும் நிலைமைகள் தொடருமானால் எதிர்காலத்தில் மிருகத் தன்மை பொருந்தியோரே இந்நாட்டில் உருவாகுவர் என்று அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கத் தேரர்  உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்தார்.(26.8.2014)

ஐ.தே.க. ன் பாராளுமன்ற அங்கத்தவர் கரு ஜயசூரிய அவர்கள் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் அவர்களை சந்தித்த போது  மகா நாயகத் தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேற்கத்தைய நாகரீகம் பண்பாடு, கலாச்சாரம், போன்றன இன்று வேறூன்றி வருகிறது.அதே நேரம் பௌத் தகலாச்சாரம், பௌத்த பண்பாடு என்பன அருகி வருகிறது. இந்நாட்டு அரசியல் வாதிகளும், அதிகாரிகளும், முதலாளி வர்க்கமுமே மேற்படி கலாச்சார சீரழிவுகளுக்குக் காரணமாக உள்ளனர்.

இதனைத் தவிர்ந்து அறநெறிக் கருத்துக்களையும் சன் மார்க்க நெறிகளையும் பின் பற்றும் ஒரு மக்கள் சமூதாயத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நாட்டின் எத்துறையை எடுத்தாலும் அது சீரழிவுகளையும் , கலாச்சார வீழ்ச்சியையுமே ஊக்கு விக்கின்றன. இந்நிலை தொடருமானால் நாட்டில் மிருக இயழ்பு கொண்ட மக்களே உருவாகுவர். 

எனவே பௌத்த கலாச்சாரம் உற்பட ஏனைய சமயக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டியுள்ளது என்றார்.

அதன் பின்னர் நடந்த கலந்துரையாடலுக்கு  ஊடக வியலாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இங்கு ஊடகங்களுக்கு ஐ.தேக. பாராளுமன்ற அங்கத்தவர் கரு ஜயசூரிய தெரிவித்ததாவது-

கெசினோ என்ற கொடிய சூது எந்த உருவில் வந்தாலும் அதனை தடுக்க வேண்டும். அரசு தனது பெரும் பான்மை பலத்தைப் பிரயோகித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. கசினோ சட்டத்திற்கு எதிராக நான் பாராளுமன்றில் கொண்டு வந்த தனி நபர் பிரேரணை கூட பெரும்பான்மை பலத்தை வைத்து அரசு நிராகரித்து விட்டது.

எனவே முழு நாடும் ஏகோபித்த குரலில் கசினோவை எதிர்க்க முன் வரவேண்டும். எக்காரணம் கொண்டும் வரி விலக்கு அளிக்கக் கூடாது என்று  கேட்டுக் கொண்டார்.


1 comment:

  1. Askiriya peedam thahuntha nadavedikkai BBS itku ethiraha edukkavillai. Samaya pothaharhal adavadithanamaha nadanthukondal miruhathanamanaverhalthan uruvahuvarhal. So Askiriya peedam udan BBS in nadavedikkai yai stop panna vendum.

    ReplyDelete

Powered by Blogger.