Header Ads



காஸா - இஸ்ரேலிய யுத்தத்தில் நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் :

Abusheik Muhammed

1.இஸ்ரேல் வாக்குறுதியைக் காப்பாற்றிய வரலாறுகள் அரிது என்பதால் அதற்கான பொறுப்பை எகிப்து தான் ஏற்க வேண்டுமென பலஸ்தீன் தரப்பு சொல்லிவிட்டது.

2.இந்த உடன்பாட்டை சாத்தியப்படுத்துவதில் கட்டார் பெரும் பங்காற்றியது என அப்பாஸ் குறிப்பிட்டார். அதற்காக வேண்டி ஜோன் கெரிக்கும் கட்டாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

3.அதே நேரம் அடுத்த வாரம் கட்டாரை இஸ்ரேலிய சட்டசபையில் தன் எதிரியாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் பிரேரனை கொண்டு வரப்படவுள்ளது.

4.இந்த நிலையில் இனி ஹமாஸ் காஸாவினுள் ஏவுகணை தொழிற்சாலையை நிர்மாணிப்பதை எங்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய தரப்பினர் புலம்புகின்றனர்.

5.வரலாற்றில் அரபு நாட்டுப் படைகளால் சாதிக்க முடியாததை காஸா போராளிகள் இறை அருளால் சாதித்தனர். காஸா எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த போது அதைக் கைப்பற்ற அரை மணி நேரம் இஸ்ரேலுக்கு போதுமாக இருந்தது என்பது கசப்பான வரலாறு.

6.இன்று காஸா கண்ணியமாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.... 

7.அடுத்து,ஆட்சியில் இருந்த ஒரே வருடத்துக்குள் போராளிகள் இந்த இராட்சதப் பலத்தைப் பெற தன்னாலான உதவிகளை தந்த இந்த மனிதருக்கு நன்றி சொல்ல வேண்டும்...

Press- fairooz

போரின் இறுதி நாளான இன்றைய தினத்தை 182 ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களுடன் முடித்திருக்கிறார்கள் பலஸ்தீன போராளிகள் 

இஸ்ரேலினால் தம் ஏவுகணைப் பலத்தினை எந்த வகையிலும் அளிக்க முடியவில்லை என்பதை போராளிகள் நிரூபித்துள்ளனர்

மொத்தமாக முழு யுத்தத்திலும் காசாவிலிருந்து 4600 ராக்கெட்டுகளும் மோட்டார்களும் இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய சேனல் 2 தெரிவித்துள்ளது..

2 comments:

  1. Palastin muslim brothers do not praise and all praise for Allah and follow Allah and Mohamed rasool (sal).

    ReplyDelete
  2. தற்போது காசாவில் நடப்பது,நடந்தது என்ன..??

    காஸா வாழ் முஸ்லிம்களிற்காக வரலாற்றில் என்றுமில்லாதது போன்று சுன்னி அரசு தலைமையிலான கட்டார் அரசு,சீயா தலைமையிலான ஈரான் அரசு,குர்திஸ் தலைமையிலான துருக்கி அரசு போன்ற பல்வேறான நாடுகள் மதப்பிரிவினை வாதம் அனைத்தையும் தூக்கி எறிந்து மதப்பிரிவினை வாதத்திற்கு அப்பால் நேரடி,மறைமுக உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன,செய்தன.வெற்றியும் என்றுமில்லாதது போன்று அபரிதமாகவே அடைந்தும் உள்ளோமல்லவா..??

    ReplyDelete

Powered by Blogger.