Header Ads



இலங்கையிலும், மியன்மாரிலும் புத்தருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது - பான் கீ மூன்

gtn

இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார்.

பௌத்த கடும்போக்குவாத நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்த கடும்போக்குவாதம் அண்மைக்காலமாக தலைதூக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை மதச் சமூகத்தவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் மதத் தலைவர்களினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதத்தில் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவது, மதங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதக் குரோதங்களுக்கு எதிராக நாட்டின் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது  எனவும், மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பௌத்த மதத் தலைவர்கள் சிறுபான்மை சமூகத்தின் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட தூண்டுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன மத அடிப்படையில் தண்டிக்கப்படும் நிலைமை மற்றும் யுத்தத்தில் சிக்கில் பாதிக்கப்படும் நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்து பிரதான சமய நெறிகளும் அன்பையும் சமாதானத்தையுமெ வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாதிகள் மட்டுமன்றி அவர்களுக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் ரொஹினியா இனத்தவர்கள் மீது பாரியளவில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையிலும் மியன்மாரிலும் பௌத்த மதத்தவர்கள் மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள், பௌத்த மத ஸ்தாபகரான கௌதம புத்தரின் கொள்கைளுக்கு விரோதாமானது எனவும், அது புத்தருக்கு இழைக்கும் துரோகமாக நோக்கப்பட வேண்டுமெனவும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.