Header Ads



பூஜா பூமி என்ற பெயரில் காணிகளை சுவீகரிப்பதை ஏற்கமுடியாது - புல்மோட்டை முஸ்லிம்கள்


இன்று 26-08-2014 காலை புல்மோட்டை பொன்மலைக்குடா அரிசிமலை  பிரதேச காணிகளை பூஜா பூமி திட்டத்தின் ஐந்தாவது தடைவையாக அளவை செய்யும் நோக்கில் ஐந்து பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவிருந்த இந்நடவடிக்கைக்கு எதிராக பொது மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கடைகள் மற்றும் ஏனைய வியாபார தளங்கள் மூடப்பட்டு சுலோகங்கள் ஏந்திய நிலையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தனர.;

அவ்வேளை  அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மக்களுடன் இணைந்து அவ் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவுடன் இது விடயம் தொடர்பில் கௌரவ நீதி அமைச்சர் அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ் தௌபீக் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சம்பவத்தை எடுத்துக் கூறிய பின்னர் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் நீதி அமைச்சர் மற்றும் பா.உ எம்.எஸ்.தௌபீக் ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க உடன் சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்குள்ள பொது மக்களுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த பிரதேச அரசியல் பிரமுகர்களையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,பிரதேச சபை தவிசாளார், உப தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர், நில அளவையாளர், கிராம சேவையாளர், மற்றும் ஜம்மியத்துல் உலமா, அணைத்து பள்ளிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கலந்துரையாடலின் போது கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக முற்றிலும் பிழையான அணுகு முறையுடன் செயற்படுவதனாலேயே நாங்கள் இன்று இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க நேர்ந்ததாக கூறிய அதே வேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தற்போது யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவரும் இந்நிலையில் பூஜா பூமி என்ற பெயரில்  பல ஏக்கர் காணிகளை அளவிடுவது என்பது எங்களால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

இதனடிப்படையில் இங்கு கூறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக நாம் மீளக்குடியமர்பவர்களை இனங்காணும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் நில அளவைகளை இடைநிறுத்தம் செய்வதாகவும் பிரதேச செயலாளரால்; கூறிய பின்னர் மக்கள் அங்கிருந்து வெளியேறி பின் மீண்டும் பிரதேச நிலமை வழமைக்கு திரும்பியது.

No comments

Powered by Blogger.