Header Ads



கொழும்பில் மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி திறக்கப்பட்டது (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புறக்கோட்டை பஸ்ரியான் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி இன்று (25) மாலை உத்யோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்களஸ் தேவானந்தா, ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா, ஏ.எச்.எம்.அஸ்வர், மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், கொழுhம்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், வர்த்தக சமுகங்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

மேற்படிக் கடைத் தொகுதிகளை உத்யோக பூர்வமாக சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டடோர் நாடவை வெட்டியும், திரையை நீக்கியும் திறந்து வைத்தனர்.

மேற்படிக் கடைகள் புறக்கோட்டையில் அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகள் இ;டம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. (கீழுள்ள செய்தியை பாருங்கள், முக்கியமானவிடங்கள் கவனிக்கப்படாமல் என்னென்ன நடக்கின்றதென்பதை.)

    கோத்தா நாமல் மோதல்! வைத்தியசாலை மூடப்பட்டது….
    August 25, 20149:17 pm


    குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார்.

    போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள் வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார்.

    காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலினால் குப்பைகள் அகறறப்படவில்லை என்று பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். அதேவேளை அரசியல் அழுத்தங்கள் காரணமாக குப்பைகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காலி மேயர் மெத்தசிறி டி சில்வா கூறியுள்ளார். காலி போதனா வைத்தியசாலை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ளதாகவும் இதனால் காலி மாநகர சபை அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    காலி மாநகர சபை மேயர் மெத்தசிறி டி சில்வா, ஜனாதிபதின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் நெருங்கிய சகபாடி என்றும் இதனால் பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்வின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக சுகாதா அமைச்சில் இன்று இடம்பெறவிருந்த கூட்டம் நடைபெறவல்லை என்றும் காலி மாநகர சபை மேயர் மெத்தசிறி டி சில்வா நாமல் ராஜபக்சவின் அழுத்தம் காரணமாக பாதுகாப்புச் செயலாளரை சந்திக்கவில்லை என்றும் இதனால் முறுகல் நிலை அதிகரித்துள்ளதாகவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

    காலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அரசாங்க வைத்தியசாலை என்பதுடன் மருத்துவ பீட மாணவர்கள் கற்கும் போதனா வைத்தியசாலையாகவும் கரகாப்பிட்டிய வைத்தியசாலை திகழ்கின்றது. வைத்தியசாலை மூடப்பட்டதனால் நோயாளர்கள் பெரும் அவதிப்படுவதாகவும் அம்பாந்தோட்டை மாத்தறை வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

    ReplyDelete

Powered by Blogger.