Header Ads



குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளலாம் - ஜம்இய்யத்துல் உலமா

அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது. 

ஆபத்தான நிலைமைகளில் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதி வந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களினதும் நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருமாறும், சுன்னத்தான நோன்புகளை நோற்குமாறும் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டியிருந்தது.

ஜம்இய்யாவின் வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர். கால நீடிப்பைக் கவனத்திற் கொண்டு மேற்படி குனூத்தை நிறுத்துவதற்கு 25.08.2014 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே குனூத் அந்நாஸிலா ஓதுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவித்துக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்hனாக, நாட்டில் அமைதியையும் சுமூக நிலைமையையும் ஏற்படுத்துவானாக.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




4 comments:

  1. ஜனாதிபதிக்கு சுகமில்லாமல் வெளி நாடு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரார்த்தனையில் அவருக்கு ஒரு பயப்பாடான நிலையுண்டு அதனால்தான் அவர் சுகயீனமானார் என்ற ஒரு பீதியில் கண்டிப்பாக ஓதவேண்டாம் என்று சொல்லியிருப்பார், மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு சூழ்சிகளுக்கும் இறைவனிடமே துஆச்செய்கின்றோம், அதனால் நிறைய இடங்களில் பகிரங்கமாக துஆ செய்யவேண்டாம் என்று தடை விதித்தார்கள் அது அனைவரும் அறிந்ததே, அத்துடன் தேர்தல் காலம் வர இருப்பதால் இந்த விடயத்தில் அவர்கள் மிக உன்னிப்பாக இருக்கின்றார்கள்.

    இது நிர்ப்பந்திக்கப்பட்டதனால் விடப்பட்ட அறிவித்தல் என்பது எனது கருத்து. எவ்வளவோ விடயங்கள் நடந்துள்ளது அவைகள் ஒன்றுக்கும் கருத்துக்கள் வெளியிடாத உலமா சபை இதற்கு ஏன் சிரமமெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஏங்க பெரிய எசமான் உத்தரவு போட்டாராக்கும், எல்லோரையும் பெரிய எசமான் அல்லாஹ் என்கிறத மறந்து நடக்குறிங்க

    ReplyDelete
  3. ரனீஸ் சொன்னதே உண்மையென படுகிறது. சகல மக்களும் சேர்ந்து குனூதுல் நாசிலாவை இன்னுமும் ஓதி இந்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை சாகடிக்க பிரார்தனை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. Dear brothers in Islam:
    Everyone of us has the responsibilty to learn and practice our Theen. However,we are arguing & fighting with each other for even meagre matters and this is completely Haraam. We got to be united. Whether you recite Ghunooth or not , it is between you & Allah.

    ReplyDelete

Powered by Blogger.