Header Ads



புதிய பாகிஸ்தானை அமைத்ததும் மறுமணம் செய்துகொள்வேன் - இம்ரான்கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரராக விளங்கி பின்னர் அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கான் தற்போது அங்கு அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் தனது கட்சியான டெஹ்ரிக்-இ-இன்சாப்க்கு தலைமை தாங்கி நடத்தி வருவதுடன் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றார். இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து தினசரி இரவு அவர் பொதுமக்களிடையே உரையாற்றி வருகின்றார்.

அதுபோன்று நேற்றிரவும் பிரதமரை எதிர்த்து நாடாளுமன்றத்தின் முன்னால் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களிடையே அவர் உரை நிகழ்த்தினார். அப்போது புதிய பாகிஸ்தானை உருவாக்குவது உங்களுக்காக மட்டுமல்ல, எனக்காகவும்தான் என்று கூறிய அவர் புதிய பாகிஸ்தானை உருவாக்கியபின்னரே தான் மறுமணம் செய்துகொள்ளவிருப்பதாக பலத்த கரகோஷத்திற்கிடையே குறிப்பிட்டார்.

62 வயதாகும் இம்ரான்கான் கடந்த 1995ஆம் ஆண்டு ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்ற பிரிட்டிஷ் பெண்ணை மணந்துகொண்டார். ஆனால் கடந்த 2004ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது. சுலைமான் மற்றும் காசிம் என்ற இவரது இரண்டு மகன்கள் தங்களது தாயாருடன் பிரிட்டனில் வசித்துவருகின்றனர். 

இவரது குடும்பத்தினர் இவரை மறுமணம் செய்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.