Header Ads



பொதுபல சேனாவுக்கும், அகில இலங்கை இந்து சம்மேளனத்திற்கும் தேன் நிலவு..!

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சு தோல்விக்கண்டுள்ளதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் பொதுபலசேனாவும் அகில் இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இதனை நிறைவேற்றவுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை இந்து சம்மேளனமும் பொதுபலசேனாவும் இணைந்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தின. இதன்போது கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்,

காலிமுகத்திடலில் பட்டங்களை பறக்கவிடுவதனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

மக்களின் மனங்களை கவர்வதற்கு வலுவான பொறிமுறை தேவை. இதன்மூலம் வழங்கப்படும் செய்தியினால் எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். இந்தநிலையில் அகில இலங்கை இந்து சம்மேளனத்துடன் தீவிரமான வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேரர் கூறினார்.

இதன் முதல் கட்டமாக அகில இலங்கை இந்து சம்மேளனமும் பொதுபலசேனாவும் இணைந்து பௌத்த மற்றும் இந்து பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளன.

இதன்மூலம் இரண்டு தரப்பும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து அமைக்கும் பிரிவுக்கு பௌத்த மற்றும் இந்து தர்ம ஆரக்கசன சபாவ ( பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை) என்று பெயரிடப்பட்டுள்ளது

இந்த அமைப்பு தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிழையான எண்ணங்களை மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. என்ன எழவோ எல்லாம் பொய்தான். ஆனால் சும்ம சொல்ல கூடாது தேரருக்கு சாறி ரொம்பவும் நல்லா இருக்கு இல்ல? காவி உடுப்ப விட சாரி ரொம்ப பொருத்தமாவும் எடுப்பாவும் இருக்கு,

    ReplyDelete
  2. Good move well done ...keep it up

    ReplyDelete

Powered by Blogger.