Header Ads



பேஸ்புக்கையும், டுவிட்டரையும் ஆயுதங்களாக பயன்படுத்தும் ISIS

(தமிழ்  மொழி பெயர்ப்பு - GTN/ஈசா)

ஈராக்கிய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள  ஜிகாத் அமைப்பு சமூக ஊடகங்களையும்,  குறுந்திரைப்படங்களையும், அப்ஸ் (apps), போன்றவற்றை பயன்படுத்தி தனது எதிரிகளை அச்சுறுத்துகிறது. புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்கிறது. தனது கொள்கைகளை பிரச்சாரம் செய்கிறது. மேற்குலக அரசுகள் உட்பட அதன் எதிரிகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.

அந்த குறுகிய நேர ஒலிநாடா (CLANGING OF THE SWORDS IV)    பார்ப்பதற்கு ஆங்கில திரைப்படம் போல தென்படுகிறது. குண்டு வெடிப்பதை காட்டுகிறார்கள் மிக உயரத்தில் இருந்து தரையை படமாக்குகிறார்கள். சினைப்பர் தாக்குதலும் காண்பிக்கப் படுகிறது.

ஆனால் அது ஆங்கிலத் திரைப்படம் அல்ல. அது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்ட குறும் திரைப்படம், ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யும், சிரியாவின் வட பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்பே ஐ,எஸ்.ஐ.எஸ்

ஐ,எஸ்.ஐ.எஸ் தனது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த, அதிதீவிர பழமைவாத பாரம்பரியங்களை பின்பற்றும் வாழ்க்கையை வாழ நிர்ப்பந்தித்துள்ளது. ஆனால் இந்த  இலக்கை எய்துவதற்காக அதி நவீன பிரச்சார சாதனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய படு பயங்கரமான தாக்குதல்கள் மிக நவீனமான சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

ஐ.எஸ்.ஐஎஸ். ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மௌசூலை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட போது அதன் பிரச்சாரமே மோதல்களை இலகுவானதாக மாற்றியதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த காலங்களில் முன்னேறி வரும் இராணுவம் தனது முன்னேற்றத்தை இலகுவாக்குவதற்காக பல வகையான ஆயுதங்களை பயன்படுத்தியது. ஆனால் ஐ.எஸ்.ஐஎஸ். டுவிட்டுகளையும் ஒலிநாடாக்களையும் பயன்படுத்தி இதனை சாதிக்கிறது.

டுவிட்டரில் அவர்களை பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் நவீன அப் ஒன்றை பயன்படுத்துகின்றனர் (dawn of glad tidings) இது ஐ,எஸ்.ஐ.எஸ் தனது தலைமைப்பீடத்திலிருந்து தகவலை  ஒரே நேரத்தில் அனைவருக்கும் அனுப்பிவைப்பதை இலகுவாக்கியள்ளது. ஆயிரக்கணக்கான செய்திகள் சமூக ஊடகங்களுக்கு செல்வதை சுலபமாக்கியுள்ளது. இதன் காரணமாக தனி ஒரு டுவிட்டர் கணக்கை வைத்துக் கொண்டு செயற்படுவதை விட இது பலரை ஒரே நேரத்தில் ஈர்க்கும் சக்தியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குறிப்பிட்ட (apps) ஐ.எஸ்.ஐஎஸ்.  முன்னேறி வருவது குறித்த செய்திகளையும், மிகக் கொடூரமான படங்களையும் அச்சுறுத்தும் வீடியோக்களையும் வெளியிடுகிறது. இதன் மூலம் அந்த அமைப்பு மிக கொடூரமானது, தடுத்து நிறுத்த முடியாது என்ற உணர்வு உருவாக்கப்படுகின்றது.

இந்த ஊடக தந்திரோபாயம் வெற்றியளித்துள்ளதாக ஈராக்கியர்கள் தெரிவிக்கின்றனர். ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பு மௌசுல் மீது தாக்குதல் நடத்திய வேளை அந்த நகரை பாதுகாத்து கொண்டிருந்த ஈராக்கிய படையினருக்கு தாங்கள் உயிருடன் கைது செய்யப்பட்டால் தங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரிந்திருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடினர்.

இந்த வீடியோ ஐ.எஸ்.ஐஎஸ். இன் அமைப்பின் எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி என்கிறார் ஐரோப்பிய நாடொன்றில் உள்ள அந்த அமைப்பின் ஆதரவாளர் ABU BAKR AL JANABI    அந்த அமைப்பின் ஊடக நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை  நன்கு அறிந்தவர் அவர். தாங்கள் ஒரு நகர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் இவ்வாறான வீடியோக்களையும் படங்களையும் வெளியிடுகின்றனர். அதன் மூலம் நீங்கள் எங்கள் வழியில் வந்தால் என்ன நடக்கும் என சொல்கின்றனர். அது பலனளித்துள்ளது. பல ஈராக்கிய இராணுவத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு தப்பி ஓடுவதற்கு இதுவே காரணம்” என்கிறார் அவர்.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பை எத்தனை பேர் டுவிட்டர் அல்லது முக நூலில் தொடர்கிறார்கள் என்பது தெரியாது, ஆனால் அவர்கள் தாங்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் மிகப் பெரும் முன்னேற்றம் கண்டு வருவதாக தோற்றம் ஒன்றை உருவாக்குகின்றனர். அது உள்ளுர் மக்கள் மத்தியில் பலனளித்துள்ளது என்கிறார் இன்னொரு ஆய்வாளர் (zaid al ali)   அவர்கள் வெளியிடும் பிரச்சாரங்கள் ஈராக்கில் பலரை நம்ப வைத்துள்ளன. இதன் காரணமாகவே அந்த அமைப்பு முன்னேறி வரும் போது பலர் தப்பி ஓடுகின்றனர் என்பது அவரது கருத்து.

பக்தாத் தொடர்பாகவும் ஐ.எஸ்.ஐஎஸ். இதே அணுகு முறையை பின்பற்றியது. ஈராக்கிய தலைநகர் மீது எந்நேரமும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் உருவான வேளை, பல ஆதரவாளர்கள் பக்தாத்துக்குள் ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் வாதி இருப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டு பக்தாத் நாங்கள் வருகிறோம் என்ற வாசகத்தையும் எழுதி இருந்தனர்.

இந்த டுவிட்டுகளின் எண்ணிக்கை காரணமாக, ஒரு சமயத்தில் ருவிட்டரில் பக்தாத் என தேடிய வேளை ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் அந்தப் படமே முதலில் வந்தது. அது தலைநகர வாசிகளை விரட்டும் ஒரு தந்திரோபாயம்.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பு சமூக ஊடகங்களை அதி நவீனமாக பயன்படுத்துவதன் காரணமாக அதன் உண்மையான பலத்தை விட, பல மடங்கு வலுவானது என்ற மாயையை உருவாக்கி உள்ளது.     இது ஈராக் முழுவதும் அந்த அமைப்பின் கட்டுபாட்டில் இருக்கிறது என்ற தோற்றப்பாட்டையும் உருவாக்கி உள்ளது.

பக்தாத்தை அவர்கள் கைப்பற்றலாம் என்ற அச்சம் சமூக ஊடகங்கள் மூலமாகவே உருவானது யதார்த்தம் அதுவல்ல என்கிறார் guardian செய்தித்தாளின் மத்திய கிழக்கு செய்தியாளர் martin chulov. தற்போது பக்தாத்தில் பணிபுரியும் அவர் ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பிற்கு அதற்கான ஆள் பலம் இல்லை எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

ஐ.எஸ்.ஐஎஸ். வெளியிடும் விடயங்கள் அனைத்தும் காட்டுமிராண்டித் தனமாகவும் இல்லை. அதன் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு அச்சுறுத்தலாக இருப்பது உண்மை. முன்னர் குறிப்பிடப்பட்ட வீடியோவில் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய புதைகுழிகளை தாங்களே வெட்டும் படம் காண்பிக்கப்பட்டது. ருவிட்டரில் சதாம் ஹீசைனின் சொந்த ஊரான திக்கிரிதில் கைது செய்யப்பட்ட ஈராக்கிய படையினர் படுகொலை செய்யப்படும் படம் வெளியானது. அதே வேளை அந்த அமைப்பு சமூக நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் பறிமாறி உள்ளது. அதன் ஆதரவாளர்கள் உணவு போன்றவற்றை கொண்டுவந்து வழங்கும் படங்களும் வெளியாகி உள்ளன.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் செயற்பாடுகள் மிக தெளிவாக திட்டமிடப்பட்டவை, தொழில்சார் தன்மை உடையவை என்கிறார் ABU BAKR AL JANABI  ~~அந்த அமைப்பின் தலைமை பீடத்திற்கென ருவிட்டர் கணக்குகள் உள்ளன. அதே போன்று அதன் உறுப்பினர் செயற்படும் ஒவ்வொரு மாகாணத்திற்னும் ருவிட்டர் கணக்குகள் உள்ளன. இதன் காரணமாக அதன் செயற்பாடுகள் சகல பகுதிகளில் இருந்தும் உடனுக்குடன் பதிவாகின்றன”.

இதே போன்று அது தனது நவீன அப் சாதனத்தை பாலஸ்தீன பிரிவின் உதவியுடன் உருவாக்கியது என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதனிடம் நல்ல டிசைனர்கள் உள்ளனர். இன்டிசைன், போட்டோசொப் போன்றவற்றை திறமையாக கையாளக் கூடியவர்கள். அதே போன்று அது தயாரித்த குறும் படமும் தொழில் சார் வல்லுனர்களால் உருவாக்கப் பட்டது. குறிப்பிட்ட படம் படமாக்கப்படுவதையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அவர்கள் அதற்காக நவீன தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தி உள்ளனர். அந்த அமைப்பிடம் உள்ள வல்லுனர்களுக்கு அப்பால் நேரடி உறுப்பினர் அல்லாத பலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் இந்த சமூக ஊடகப் பணிகளில் பங்கு பற்றுகின்றனர். டுவிட்களை பறிமாறுகின்றனர். அராபிய மொழியில் உள்ளதை தங்கள் ஆதரவாளர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றனர். பக்தாத் நாங்கள் வருகிறோம் என்கிற வாசகம் கூட எவரும் கேட்காமல் ஆதரவாளர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.

இது தவிர ஐ.எஸ்.ஐஎஸ். களும் போர்க்களத்தில் தங்களது அனுபவங்களை டுவிட் செய்கின்றனர். தங்களுடைய தனிப்பட்ட படங்களை பறிமாறுகின்றனர். சில வேளைகளில் இவை பயங்கரமாக காணப்படுகின்றது. துண்டிக்கப்பட்ட தலைகள், சில வேளைகளில் இவை சாதாரண படங்களாக உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தனது ரத்தக் கறை தோய்ந்த கரத்தின் படத்தை முகப் புத்தகத்தில் பதிவுசெய்துவிட்டு, இது முதல் தடவை என எழுதி இருந்தார். எதிரியைக் கொலை செய்தது  இதுவே முதல் தடவை என்பதே அதன் அர்த்தம். அதற்கு உடனடியாக இன்னொரு நண்பர் வாழ்த்து தெரிவித்து விட்டு பல கொலைகளில் இது முதலாவது என எழுதி இருந்தார். ஏனையவர்கள் மிக அழகான ஜிகாத் ஆதரவு வாசகங்களை வெளியிடுவதற்கும் இவற்றை பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஒரு தடவைதான் மரணிக்கப் போகின்றீர்கள் அதுவே தியாகமாக ஏன் இருக்கக் கூடாது என ஒருவர் எழுத அதற்கு 72 பேர் விருப்பம் தெரிவித்தனர்.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் இவ்வாறான சமூக ஊடகப் பயன்பாடு அதன் மூன்றாவது இலக்கினை மையமாகக் கொண்டது. அதன் ருவிட்டர்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அதன் எதிரிகளை அச்சுறுத்தவும், தாங்கள் அங்கும் இருக்கிறோம் என மிரட்டவும் பயன்படும் அதே வேளை மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள ஜிகாத் போராளிகள் மத்தியில் தங்களை பிரபலமாக்கவும் அந்த அமைப்பிற்கு இது உதவுகிறது.

அல்கய்தாவில் இருந்து உருவானதே ஐ.எஸ்.ஐஎஸ். ஆனால் அல்கய்தா இந்த அமைப்பை எப்போதோ நிராகரித்து விட்டது. இதன் காரணமாக சிரியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள அல்கய்தா ஆதரவு பெற்ற அமைப்புகளுக்கும,; ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பிற்கும் போட்டி நிலவுகிறது.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் சமூக ஊடக செயற்பாடு என்பது நிச்சயமாக மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டது என தெரிவிக்கும் மத்திய கிழக்கு ஆய்வாளர் ஒருவர், அதே வேளை அந்த அமைப்பிற்கு பரந்துபட்ட ஊடக பலமும் கிடைக்கிறது, சர்வதேச ஜிகாத் போராளிகளுக்கு யார் தலைமை தாங்குவது என தற்போது உருவாகி உள்ள போட்டியில் அதிகளவு உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு அது உதவுகிறது. அவர்கள் அதில் வெற்றியும் பெற்று விட்டனர். பல வெளிநாட்டு போராளிகள் அவர்கள் இணைவதற்காக சிரியா செல்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றார்.

சுமூக ஊடகங்களை வேறு பல ஜிகாத் அமைப்புகளும் பயன்படுத்துகின்றன, சிரியாவின் jabhat al-nusra அமைப்பும் இவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளது, ஐ.எஸ்.ஐஎஸ்  அமைப்பின் பாணியை அந்த குழுவினர் பயன்படுத்துகின்றனர். யேமனின் அல்கைதா ஆதரவு  இயக்கம் இதே போன்ற வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது.

ஏகிப்தின் முக்கிய தீவிரவாத அமைப்பான அல்கைதா ஆதரவு ansar beit al maqdis தாக்குதல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை தெளிவுபடுத்தும் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிடுகிறது.

எனினும்  புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் மூன்றாம் தலைமுறை முஸ்லிம்களை கவர்ந்துள்ளதே ஐ.எஸ்.ஐஎஸ்  அமைப்பு. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதன் மூலம் பெற்றுள்ள பெரும் வெற்றிகளில் ஒன்று எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் எந்த காரணங்களுக்காக ஜிகாத் போராளிகளை கவர்ந்துள்ளனவோ அதே காரணத்திற்காக வன்முறையில் நாட்டம் இல்லாத முஸ்லிம் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போன்றவற்றையும் கவர்ந்திழுக்கின்றன. புவியல் ரீதியாக மிகத் தொலைவில் இருக்கின்ற மக்களை சென்றடைவதற்கும் அவர்களுடைய துயரங்களை பயன்படுத்தியே அவர்களை கவர்வதற்கும் இவை மிக இலகுவான செலவற்ற சாதனங்கள் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் இந்த வெற்றிகரமான பிரச்சார யுத்தியை தடுப்பதற்கு ஈராக் அரசாங்கம்  சமூக ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது. இணையத்தை பயன்படுத்துவதற்கே சில பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதையும் தாண்டி அந்த அமைப்பின் சமூக ஊடக வலையமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனைய முஸ்லிம்களை தங்களுடன் இணையுமாறு வேண்டுகோல் விடுக்கின்றனர்.

அதன் வீடியோ ஒன்றை யூத்ரியூப் சில வாரங்களுக்கு முன்னர் முடக்கியது. ஆனால் அதே ஒலிநாடாவை ருயிட்டரில் பார்க்க முடிகிறது.

ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவர்கள் தற்போது தாங்கள் கைப்பற்றிய இடங்களை இழந்தாலும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் பெற்றுள்ள முக்கியத்துவமும் அந்த அமைப்பிற்கு மிகவும் முக்கியமானதாக விளங்கும் என்பது பலரது வாதம்.

1 comment:

  1. நாமும் உம்முடன் இணைய தயார்

    ReplyDelete

Powered by Blogger.