Header Ads



சிரியாவில் ISIS தாக்குதலில் 85 இராணுவ வீரர்கள் மரணம் - 200 பேரின் கதி என்னவென்று தெரியாது

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் 85 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து, அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ராமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:

சிரியாவில் உள்ள ராக்கா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மீது வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை கைப்பற்றினர்.

எனினும், வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் முன்னேறிச் செல்லவில்லை.

இந்நிலையில்,  தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்புப் படையினர் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் 85 வீரர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கள் சுட்டுக் கொன்றனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள் சிலரின் தலையைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். கள், அவற்றை ராக்கா நகரில் பொது இடத்தில் பார்வைக்கு வைத்து அச்சுறுத்தினார்கள்.

மேலும், பாதுகாப்புப் படையினர் 200 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.

இதனிடையே, சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். கள், போர்க்குற்ற விசாரணையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டுக்கான ஐ.நா. விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.