Header Ads



'மெய்யான பௌத்த பிக்குகள் ஏனைய சமூகங்கள் மீது, வன்முறைகளைக் தூண்ட மாட்டார்கள்'

சில சக்திகள் பௌத்த பிக்குகளை பயன்படுத்தி சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பிக்குகளை தூண்டி விட்டு வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையே கொலையாளிகளாகவும் குண்டர்களாகவும் வெளிக்காட்ட சில சக்திகள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்குகளை சீரழித்து அதன் ஊடாக ஜனாதிபதிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதே இந்த சக்திகளின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்குகள் தேர்தல் சார் அரசியலில் ஈடுபடுவது பிழையானது எனவும், அதனை விடவும் அதிக சேவைகளை வெளியிலிருந்து செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களுக்கு மட்டும் தலைவர் கிடையாது, நாட்டின் ஒட்டுமொத்த இன சமூகங்களுக்கும் தலைவர் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பௌத்த பிக்குகள் உயரிய மரியாதை அளிக்கப்படுகின்றது எனவும், தற்போது பௌத்த பிக்குகளை சில சூழ்ச்சிக்காரர்கள் பிழையாக வழிநடத்துவதனால் அந்த மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெய்யான பௌத்த பிக்குகள் ஏனைய இன சமூகங்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட சாதாரண மக்களை தூண்ட மாட்டார்கள் எனவும், பௌத்த மத கோட்பாடுகளில் குரோதத்திற்கு இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பௌத்த பிக்குகளை பிழையாக வழிநடத்தும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சில பலம்பொருந்திய நாடுகள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமுல்படுத்துவதில் சில குறைபாடுகள் காணப்படுவதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் பௌத்த பிக்குகள் என்றாலும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் அதனை எவரும் எதிர்பார்கள் என நான் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தண்டிப்பது மட்டும் சட்டத்தின் கடமையல்ல எனவும் புனர்வாழ்வு அளிப்பதும் சட்டத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது என்பதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலுத்கம சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகள் சில சக்திகளின் சூழ்ச்சிப் பொறியில் அறியாமையினால் சிக்கிக் கொண்டதாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Appo sivuraya kalatti kovanathoda veliya anupunga mathaza unga boutharhale parthukuwanga

    ReplyDelete

Powered by Blogger.