Header Ads



ஸ்மார்ட்போன் இருந்தால் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கலாம்..!

ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.

1 comment:

  1. idan moolam cencer wara waaipu adiham irikiadradu enawe miha kawanamaha irukkawum

    ReplyDelete

Powered by Blogger.