Header Ads



பாராளுமன்றத்தில் பலஸ்தீனர்களுக்காக பிரேணை கொண்டுவந்த அஸ்வர்

பலஸ்­தீ­னர்­களின் உரி­மை­க­ளுக்­காக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக்ஷவும் அவ­ரது தலை­மை­யி­லான அர­சாங்­கமும் இன்றும் துணிச்­ச­லுடன் குரல் கொடுத்து வரு­வ­தோடு பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான முழு ஆத­ர­வையும் வழங்கி வரு­வ­தாக ஆளுந்­த­ரப்பு எம்.பி.ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் தெரி­வித்தார்.

எமது நாட்­டுக்கு எதி­ராக யுத்தக் குற்­றச்­சாட்­டு­களை முன் வைக்கும் ஐ.நா.இஸ்­ரே­லி­யர்கள் பலஸ்­தீ­னத்தில் மேற்­கொள்ளும் மனிதச் சங்­கா­ரத்தைப் பார்த்துக் கொண்டு மௌனித்­துள்­ளது என்றும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை பலஸ்­தீன பிரச்­சினை தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்றும் போதே அஸ்வர் எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் தொடர்ந்து உரை­யாற்­றிய அஸ்வர் எம்.பி. இஸ்ரேல் பலஸ்­தீ­னத்தின் மீது கொடூ­ர­மான காட்­டு­மி­ராண்டித் தாக்­கு­தல்­களை நடத்தி அட்­டூ­ழி­யங்­களை கட்­ட­விழ்த்­து­விட்­டுள்­ளது. அம்மக்­களின் நிலங்கள் பலாத்­கா­ர­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றது.

நான் இங்கு பேசிக் கொண்­டி­ருக்கும் இச் சந்­தர்ப்­பத்­திலும் பலஸ்­தீ­னத்தில் சிறு­பிள்­ளைகள் மீது காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக இஸ்ரேல் குண்டு மழை பொழி­கின்­றது.தினம் தினம் அப்­பாவிப் பொது மக்கள் கொலை செய்­யப்­ப­டு­கின்­றனர்.

பலஸ்­தீனம் என்­பது நபிகள் நாயகம் (ஸல்) அஸ்மா மிஹ் ராஜ் எனும் விண்­ணு­லக யாத்­திரை சென்ற புனித பூமி.முஸ்­லிம்­களின் புனித அல் – அக் ஷாவும் இங்­கேயே உள்­ளது. இதன் மீதும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

ஆனால் உலகில் 57 முஸ்லிம் நாடுகள் உள்­ளன. அது மட்­டு­மல்­லாது உலக இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பு உள்­ளது. இவை­ய­னைத்தும் பலஸ்­தீ­னர்­க­ளுக்­காக என்ன செய்­கி­றது. அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­க­ளாக செயல்­ப­டுவோர் இன்று மௌனித்து விட்­டார்கள். அவர்கள் வாய் திறப்­ப­தில்லை.

இலங்­கையில் மனித உரி­மைகள் , யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் சர்­வ­தேச விசா­ர­ணைகள் என­கோரும் ஐ.நா. இஸ்­ரேலின் பலஸ்­தீ­னர்கள் மீது நடத்தும் காட்டு மிராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களை கண்டும் காணாமல் உள்­ளது.

இந்த மனித சங்­கா­ரத்­திற்கு எதி­ராக உலக நாடுகள் ஓர­ணியில் திரள வேண்டும் . இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யங்கள் நிறுத்­தப்­பட வேண்டும்.எமது ஜனா­தி­பதி பலஸ்­தீ­னத்தின் நண்பர். அந்­நாட்டு ஜனா­தி­பதி மொஹமட் அப்­பாஸை தொடர்பு கொண்டு தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்­பாக விசா­ரித்­துள்ளார். பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான ஆத­ரவு தொடரும் என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இவ் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது அவர் உணர்ச்சி வசப்பட்டிருப்பதையும் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தமையையும் காண முடிந்தது. அத்தோடு நோன்பையும் சபைக்குள்ளேயே தண்ணீரை அருந்தி முடித்து வைத்தார்.

2 comments:

  1. அளுத்கம முஸ்லிம்கலை அடிக்கும் போதும் கொள்ளும் போதும் பள்ளிவாசல்களை உடைக்கும் போதும் நீ என்ன செய்தாய் இப்ப முதலைக்கண்ணீர் வடிக்கிறாய்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்காக இந்த முட்டாலின் செய்திகளை போட வேண்டாம். தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.