Header Ads



போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது - ஹமாஸ்


இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் நேற்று 12 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. மீண்டும் இன்று அதிகாலை ஒளிபரப்பான இஸ்ரேல் அரசின் தொலைக்காட்சி செய்தியின்படி மனித நேய அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த போர்நிறுத்தத்தை ஹமாஸ் போராளிகள் மீறினால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.  

ஆனால் காசா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டாங்கிகளை இஸ்ரேல் திரும்ப பெறும் வரையிலும், தங்கள் மக்கள் வீடுகளுக்கு திரும்பும் சூழ்நிலை ஏற்படும் வரையிலும், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை காசாவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் நிலை ஏற்படும் வரையிலும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இருபது நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில் 1050 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 6000 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே போர் நிறுத்தம் அமலில் இருந்த போது ஹமாஸ் நடத்திய ஷெல் தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர் ஒருவர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.