Header Ads



அவசரப்பட்டு பணத்தை கையளிக்காதீர்கள்..!

இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படும் முகவர்களுக்குரிய கோட்டாக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் யாத்திரிகர்கள் அவசரப்பட்டு முகவர்களிடம் பணத்தை கையளிக்க வேண்டாமென அரசாங்க ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பெளஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, முகவர் தமக்குரிய கோட்டாக்களை விற்பனை செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் வலியுத்தியுள்ளார். 

அவசரப்பட்டு பணத்தை, முகவர்களிடம் கையளித்த பின்னர் அதனை மீளப் பெற முடியாத இக்கட்டான நிலைமைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமையால் மக்கள் இது தொடர்பில் சிந்தித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹஜ் யாத்திரிகர்களை உம்றா கடமைகளுக்காக அழைத்துச் செல்வதற்காக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள 88 முகவர் நிலையங்களுக்கும் 2240 கோட்டாக்களும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் அரசாங்க ஹஜ் குழு கடந்த 07ம் திகதி தமது பட்டியலை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது. 

இந்நிலையில், சில முகவர் நிலையங்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. 

அதனைத் தொடர்ந்து புத்தசாசன அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலையீட்டினைத் தொடர்ந்து புதிதாக தயாரிக்கப்பட்ட கோட்டப் பட்டியல் மீண்டும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 01ம் திகதியன்றே நீதிமன்றம் இது தொடர்பிலான இறுதி தீர்ப்பினையளிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்த இழுபறிக்கும் மத்தியில் யாத்திரிகர்கள் இறுதி தீர்மானம் கிடைப்பதற்கு முன்பாக தமக்குரிய முகவர்களை தெரிவு செய்வதனையோ பணத்தை செலுத்துவதனையோ தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனது அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். Tn

3 comments:

  1. you can make direct deposit to Fowzy hajiya'r account, if you need quota

    ReplyDelete
  2. என்ன...? பவுஸி மறுபடியும் ஹஜ் கமிடியய்
    பற்றி கவலை படுகிறார்.இவர் ஹஜ் உடைய காலத்தில் மட்டும் தான் முஸ்லிம்களுக்கு தலைவர். முஸ்லிம் மக்கள் உடைய வீடுகளை தீக்கிரை ஆகி மூன்று சஹீத் உயிரிழந்ததோடு முஸ்லிம் களுடைய சொத்துகளை சூரை
    ஆடும் பொலுது எங்கே இவர் உடய தலைமை துவம். ???முஸ்லிம் அல்லாத இலங்கை அரசின் ஜனாதிபதி சேதமடைந்த ஏழை முஸ்லிம் மக்களுட
    வீடு வீடாக சென்று ஆறுதல் கூறினார். முழு இழப்பு களுக்கும் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் பவுஸி அலுத்துகம பகுதிக்கு ஒட்டு மொத்தமாக செல்ல வில்லை முஸ்லிம் மக்களின் வாழ்க்கை பற்றி ஆர்வம் இல்லாத வனுக்கு. முஸ்லிம் மக்கள் உடைய ஹஜ் யாத்திரை விடயத்தில் தலைமை வகிப்பதற்கு   தகுதி அற்றவர். எனது முஸ்லிம் அன்பார்ந்த சகோதறர்கலே இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஹஜ் வீஸா வியாபாரம் செய்து முஸ்லிம் களுடைய பணத்தை கொல்லை அடிப்பவரய் மீண்டும் இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது. Petroleum corporation அமைச்சகத்தில் ஊழல்கள் செய்து விட்டு ஹஜ் கமிட்டியும் பணத்தை ஊழல் செய்வதற்கு வசதியாக வந்து இருக்கிறார். இதற்கு யாறும் இடம் அளிக்க கூடாது.
    (சபாப் ஒன்றியம்)

    ReplyDelete
  3. Pillayai killivittu thottilay aattinaal azatku enna seyyalam sozariye ... thambi gnanasara moolamaha killi vittar annan vandhu muslimgalai parthu rendu vaarthai pesi thottilai aattivittaar .... izukoodava theriyaamal irukkeenga .. allah nam mun seyza paavangalai mannippaanaaha...namburazukku oru alavillayaa sozariye ...rommmba sinnappullathanamaahavallavaa irkku .....

    ReplyDelete

Powered by Blogger.