Header Ads



நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலின் போது..!

நாட்டின் விவசாயிகளது வாக்குகள் மிகவும் முக்கியமானது என கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்தள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையில் 74 வீதமானவர்கள் விவசாயிகளாகும். இதில் 54 வீதமானவர்கள் நெல் விவசாயிகளாகும்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலின் போது, விவசாயிகளின் வாக்குகள் முக்கியமானது. எனினும் தற்போது விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் பெரும் அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. நெல் விவசாயம் செய்ய போதியளவு நீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. விவசாயிகளின் கைகளில் பணமில்லை. இதனால் அவர்களினால் விசம் குடித்து தற்கொலை செய்து கொள்ளக்கூட முடியவில்லை.

தற்போது நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் வரட்சி காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே காரணம் என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.