Header Ads



ஆளும் தரப்பு மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் மீது அபாண்டம்

(நஜீப் பின் கபூர்)

தற்போது இன்று (25.07.2014) வெள்ளி நள்ளிரவு நடுநிசி நேரத்தில் நடந்து கொண்டிருக்கும் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றில் விவாதத்தில் பேசிக் கொண்டிருக்கின்ற ஆளும் தரப்பு பிரதி அமைச்சர் சாந்த பண்டார மீண்டும் மீண்டும் அளுத்கம விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பௌத்த பிக்குவைத் தாக்கியதால் பிரச்சினை துவங்கியது என்ற கதைக்கு தொடர்ந்தும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். 

நமது முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தப் பொய்யான கதையை மௌனமாக நின்று உயிர் கொடுத்ததால்தான் இந்தக் கதை தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றது. நமது சமூகத்தின் பேரால் கட்சி நடாத்துகின்றவர்கள் மௌனம் காத்துப் பேச வேண்டிய இடத்தில் பேசாதிருந்ததால்தான் இந்த நிலை முஸ்லிம்களுக்கு இன்று. 

பாராளுமன்றத்தில் நேரம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுகின்றவர்கள்  குறைந்த பட்சம் உத்தியோகபூர்வமாக ஊடகச்சந்திப் பொன்றையாவது நடாத்தி முஸ்லிம் தலைவர்கள் இந்த கதைக்கு - அபாண்டங்களுக்கு இதுவரை பதில் கொடுக்காது இனவாதிகளுக்குத் துணை போவது ஏன் என்று கேட்க வேண்டி இருக்கின்றது. 

அத்துடன் இன்று நடந்த இதே விவாதத்தில் ஒரிரு (இன்று 25.07.2014) தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் ஒரு சிங்கள சிறுமியை முஸ்லிம் ஒருவர் கொடுத்திருக்கின்றார் என்று குறிப்பிட்டு பேசினார். நிகழ்சியை நடத்துபவர் அது பழைய கதை என்று கூற சாந்த பண்டார இல்லை இது புதுக்கதை என்று அங்கு அடித்துக் கூறுகின்றார். எனவே இது பற்றி நாம் அறிந்த வரை எந்த ஊடகங்களிலும் பார்க்க முடியவில்லை.

எனவே இவரின் ஒரிரு தினங்களுக்கு முன்னர் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்ற கதை எவ்வளவு தூரம் உண்மையானது என்று நாம் பிரதேசத்து முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றோம். எனவே இதன் உண்மைத்தன்மை என்ன ? 

இந்த நிகழ்சசியில் கலந்து கொண்ட ஜேவிபி பிமல் ரத்னாயக்க குற்றச் செயல்களைப் புரிகின்றபோது அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமே தவிர முஸ்லிம் சிங்களும் தமிழ் என்று பிரித்து இன வன்செயலுக்குத் தீனி போட வேண்டாம் என்று அங்கு கேட்டுக் கொண்டார்.

1 comment:

  1. ஆ(ளும்தர)ப்பு. பயங்கரவாதிகள்தானே முதுகெலும்பில்லை ஆனால் தவறும் செய்தாகவேண்டும், அதை சரியாகசெய்யவும் தெரியா பண்டாரங்கள். பதவியிலும் ஆட்சியிலும் உட்கார அருகதையே இல்லாத தெரு நாய்களெல்லாம் பதவியிலும் ஆட்சியிலும் உட்கார்ந்தால் என்ன நடக்கவேண்டுமோ அதுதான் இப்போது நாட்டில் நடக்கின்றது. இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.