Header Ads



''ஹஜ் கோட்டாவை பகிர்ந்து வழங்க, அதுவொன்றும் உணவு பங்கிடுவது போன்ற விடயமல்ல''

ஹஜ் கோட்டா வழங்கு வதில் யாருக்கும் எதுவித அநீதியும் இடம்பெறவில்லை. நேர்முகப் பரீட்சை நடத்தி தகைமை அடிப்படையில் 88 முகவர்களுக்கும் 2240 கோட்டாக்களும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சரும் ஹஜ் விவகாரங்க ளுக்கான இணைப்பு அமைச்ச ருமான ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார்.

கடந்த தடவைகளில் மோசடிகள் மற்றும் தவறுகளுடன் தொடர்புடையவர் களுக்கு குறைந்த கோட்டா வழங்கப்பட்ட தாக தெரிவித்த அமைச்சர் அடுத்த வருடங்களில் மோசடிகளுடன் தொடர்புள்ள முகவர்களுக்கு ஹஜ் கோட்டா வழங்காதிருக்க நீதிமன்றத்தினூடாக அனுமதி பெறவும் திட்டமிட்டுள்ளதாக குறிப் பிட்டார்.

ஹஜ் கோட்டா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சிரேஷ்ட அமை ச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், நான். பிரதி அமைச்சர் காதர். சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அடங்கலாக 5 பேரடங்கிய ஹஜ் குழு பிரதமரால் நியமிக்கப்பட்டது.

ஹஜ் ஏற்பாடு தொடர்பில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதி அமைச்சர் காதர் பங்கேற்கவில்லை.

முகவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு ஹஜ் குழு கூடி தகுதியானவர்களை தெரிவு செய்தது. எனது அல்லது பிரதி அமைச்சர் காதரின் தேவைப்படி கோட்டா பகிரப்படவில்லை. அவ்வாறு பகிரப்பட்டிருந்தால் ஒன்றல்ல 10 வழக்குகள் எமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும். கடந்த தடவைகள் முறைகேடாக நடந்த முகவர்களுக்கு அனுதாபம் கருதி குறைந்தளவு கோட்டா வழங்கப்பட்டது. அவர்களே வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

யாருக்கும் கோட்டா வழங்காமல் நிறுத்தப்படவில்லை. கோட்டா வழங்கு கையில் எனக்கும் பிரதி அமைச்சர் காதருக்கும் 50 க்கு 50 என்ற அடிப்படையில் ஒதுக்க மத விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகார கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் கோட்டாவை பகிர்ந்து வழங்க அதுவொன்றும் உணவு பங்கிடுவது போன்ற விடயமல்ல. கோட்டா பகிர்வதால் எமக்கு எதுவித இலாபமும் கிடைக்காது. கோட்டா பிரச்சினையை பேசி இணக்கப்பாடு காணுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹஜ் கோட்டா பிரச்சினையால் முஸ்லிம் சமூகத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. 

அரசாங்கம் 200 பேரை குறைந்த செலவில் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் முகவர்களும் ஹஜ் கட்டணத்தை குறைப்பர். நாம் கட்டுப்பாட்டு விலையொன்றை அறிவித்தாலும் முகவர்கள் நினைத்தபடி கட்டணம் அறவிடுகின்றனர்.

முகவர்கள் முறைகேடாக நடந்தாலும் ஹாஜிகள் அது குறித்து முறையிடு வதில்லை. இம்முறை இலங்கைக்கு கிடைத்துள்ள 2240 கோட்டாவும் 88 முகவர்களுக்கு பிரித்து வழங்கப் பட்டுள்ளதோடு அந்த கடிதம் சவுதி ஹஜ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். 

ஐ. ரீ. என். பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாசிம் உமரும் இதில் கலந்து கொண்டார். 

2 comments:

  1. ஆஹாக் கேவலமான் ஒரு அரசியல் வாதில் நீ முதலிடம்

    ReplyDelete
  2. Pana aasa pidiththa intha koottaththala appawi muslinkal nimmathiya waala mudiyalla.

    ReplyDelete

Powered by Blogger.