Header Ads



ஈதுல் பித்ர் பெருநாளில் சமூக ஐக்கியத்தையும் பரஸ்பரம் அன்பு பாராட்டுவதையும் கடைப்பிடிப்போம்.!

(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)

பிறை கண்டு நோன்பு நோற்றல் பிறைகண்டு பெருநாள் கொண்டாடுதல் என்ற கண்மணி ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களது கூற்றுக்கமைய சாவதேச பிறை ,உள்நாட்டுப்பிறை என்பதில் நாம் கருத்தில் வேறுபாடு கொண்டு இன்று சமூகத்தின் ஒரு பகுதியினர் பெருநாள் கொண்டாட மற்றும் ஒரு பகுதியினர் நோன்பு நோற்றிருக்கின்றனர்.

பெருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகள் சிறார்கள் என சகலரும் நோன்பு நோற்பவர்களை அவர்களது வணக்க வழிபாடுகளை அவர்களது உணர்வுகளை எந்தவிதத்திலும் காயப்படுத்தாது உயரிய இஸ்லாமிய ஒழுக்கவியல் சமூகவியல் பண்பாட்டியல் விழுமியங்களை கடைப்பிடிப்பதே இஸ்லாம் காட்டும் இனிய வழி முறையாகும்.

அதே போன்று பெருநாள் தினங்களில் நமது ஐக்கியத்தையும் பரஸ்பர புரிதல்களையும் அன்பு பாராட்டுதல்களையும் சகோதரத்துவத்தையும் அடுத்த சமூகங்களுக்கு நாம் பறை சாற்றுதல் வேண்டும், மாறாக எமது பிளவுகளையும் ,பிரிவினைகளையும் ,பரஸ்பரம் பகைமை வளர்த்தலையும் நாம் எமது பள்ளிவாயல்களூடாகவோ ஒலிபெருக்கிகளூடாகவோ நாம் பகிரங்கப்படுத்திக் கொள்வது இஸ்லாத்திற்கும் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களிற்கும் இழைக்கின்ற கெடுதியாகவே இருக்கும்.

உலகெங்கும் இன்று புனித ஈதுல் பித்ர் பெருநாளை அனுசரிக்கும் எனது இனிய உறவுகளுக்கும் அதேபோல் இன்று நோன்பிருக்கும் உறவுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் புனித ராமலானும் ஈதுல் பித்ர் பெருநாளும் சுமந்து வரும் அனைத்து அருள் பாக்கியங்களையும் நிறைவாக வழங்குவானாக!

காஸாவிலும்,சிரியாவிலும், இராக்கிலும் ,காஷ்மீரிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுக்கின்ற எல்லா உறவுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து அவர்களுக்கு கூடிய விரைவில் விடிவையும் வெற்றியையும் வழங்குவானாக!

1 comment:

  1. Mr.M.Inamullah. Remember that 01 Shawwal is Ayyamul Eid. That day fasting is prohibited. All the world muslims are celebrating one day except Srilanka and some part of India.
    I do not know why this sharia for Srilanka and India. Allahu Ahlam.

    ReplyDelete

Powered by Blogger.