Header Ads



முஸ்லிம் தாய்மார் ஹிஜாப் அணிந்து பாடசாலைகளுக்குள் பிரவேசிக்க தடையில்லை - உச்ச நீதிமன்றம்

முஸ்லிம்களின் கலாச்சார ஆடைகளுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பெற்றோர் செல்ல முடியும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் பெற்றோர் ஒருவர் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்து. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமயிலான நீதியரசர் குழு இந்த மனுவை விசாரணை செய்திருந்தது.

முஸ்லிம் தாய்மார் ஹிஜாப் அணிந்து பாடசாலைகளுக்குள் பிரவேசிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதேவேளை, முஸ்லிம் மாணவி ஒருவர் கலாச்சார ஆடை அணிந்து பாடசாலைக்குள் பிரவேசிப்பதனையும் இந்தப் ஜனாதிபதி மகளிர் கல்லூரியின் அதிபர் தடை செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலும் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Alhamdhulillah allah avarhalaikkonde engalukku vetriyai tharuvaan

    ReplyDelete

Powered by Blogger.