Header Ads



முஸ்லிம்களின் பதற்றத்திற்கு மத்தியில் நடைபெற்றுமுடிந்த பொதுபல சேனாவின் கூட்டம்

(இக்பால் அலி) 

தர்காடவுன் அளுத்கமை மற்றும் பேருவளையில் நடைபெற்ற சம்பவத்திற்கும் எமது இயக்கத்திற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. அங்கு ஊர்வலம் சென்ற போது ஊர்வலத்தின் மீது முஸ்லிம்கள் தான் கல்லை எறிந்தார்கள். அது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் தெரிவித்தார்.

பொது பல சேனா அமைப்பினால் மாவத்தகம நகரில்  சாமோதய விஹாரையில் அனுஷடான பூஜையும் தர்மதேசனாவும் இன்று நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் அங்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இந்நாட்டில் மதம் மாற்றம் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலிருந்து பௌத்த சமயத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது சமயத்தை மலினப்படுத்தி இங்கு பறகஹதெனியவிலுள்ள தவ்ஹீத் ஜமாத்தினர் சீ டி வெளியிட்டுள்ளனர். பௌத்த சமயத்தின் கலாசரத்தையும் அத் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காக  எமது அமைப்பு தொடர்ந்து  இது போன்ற செயற் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முhலையில் 6.30 மணி அளவில் வருகை தந்த ஞான தேரர் சுமார் 45 மணி நேரம் உரையாற்றியதுடன் இந்நிகழ்வு முடிவடைந்தது.

இந்நிகழ்வுக்கு சுமார் 900 பேர் அளவில் பொது மக்கள் கலந்து கொண்டனர். அது வாகனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள். பெருந் தொiகாயான பொலிஸார் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டடிருந்தனர். முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பதற்ற நிலை தோன்றிய போதிலும்  எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

No comments

Powered by Blogger.