Header Ads



இயக்க வெறியற்ற இஸ்லாமிய வாதிகளுக்கு அழைப்பு

அன்புடையீர், 

வருகின்ற  ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பதுளை மொனராகலை மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் இயக்க வெறியற்ற இஸ்லாமிய வாதிகளுக்கு எமது கட்சி அழைப்பு விடுக்கிறது. நாடளுமன்றத்தில் இருக்கின்ற எமது சமூகத்தை சார்ந்தவர்கள் எமக்காக குரல் கொடுக்காமல் வெறும் மௌனிகளாக உறங்கிக் கொண்டு இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில்  மீண்டும் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து எமது குரல்களை மாகாண சபைகளிலும் நசுக்குவதா அல்லது மாற்று வழியொன்றை கையாண்டு புதிய அரசியல் பாதை ஒன்றை ஊவா மாகாண சபையில் ஆரம்பிப்பதா என்று தீர்மானிக்கும் சந்தர்ப்த்தில் நாம் உள்ளோம். இனவேறுபாடுகளை உருவாக்கும் அரசாங்கத்தோடு ஒட்டிக் கொணடு இருக்கும் ஒட்டுண்ணிகளுக்குத் துணைபோகாமல் ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இயக்கவெறியற்ற இஸ்லாமிய சமூகவாதிகளுக்கு எமது கட்சி மீண்டும் அழைப்பு விடுக்கிறது. 

ஆர்வமுள்ளோர் தொடர்புகளுக்கு:

0777791770, 0778338097

எம். ஐ. காதர்.
பொதுச் செயலாளர்
ஐக்கிய சமாதான முன்னணி

No comments

Powered by Blogger.