Header Ads



''இலங்கைக்குள் முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்தால் அதற்கு இடமில்லை''

இலங்கையில் அல்- கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களை கொண்டிருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இலங்கையை தமது பயிற்சி தளமாக பயன்படுத்தி வருவதாக பல சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்கள் இலங்கைக்குள் இயங்க இலங்கை அரசாங்கம் எந்த சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. பயங்கரவாதம் என்பதில் மாற்றங்களும் இல்லை அது எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமே.

முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்தால், அதற்கு இடமில்லை. விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்களோ அவ்வாறே இதுவும் மேற்கொள்ளப்படும்.

இலங்கையிடம் உண்மைகளை கண்டறியும் திறன் உள்ளதுடன் இலங்கை மண்ணில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் செயற்படுவது தொடர்பில் இராணுவமோ, பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகளே எந்த தகவல்களையும் பெறவில்லை எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.