Header Ads



இஸ்மாயில் ஹனியாவின் வீட்டின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் -


காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்குமிடையே நடைபெறும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தலையடுத்து ரமலான் பண்டிகைக்காக இரு தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்த போர் நிறுத்தம் முடிந்து இன்று மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளது.

காசா பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடப்பதால் அங்கு மக்கள் அதிகம் வசிக்கும் 3 பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியது. அங்குள்ள பொதுமக்கள் வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் 60 இடங்களில் குண்டு வீசியதில் மின்உற்பத்தி நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. எரிபொருள் கண்டெய்னர் மற்றும் நீராவி என்ஜின் ஆகியவை வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று மின்விநியோக பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவரும் பிரதமருமான இஸ்மாயில் ஹனியாவின் வீட்டின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குணடுகளை வீசி தாக்கியது.

22 நாட்களாக நடைபெற்று வரும் இந்த சண்டையில் 1088 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 53 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.