Header Ads



ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி பறிக்கப்படுகிறது..?

அண்மைக்காலமாக ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர்கள், பௌத்த குருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்படும் ஒருவராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விளங்குகிறார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றமை காரணமாக இந்த விமர்சனங்கள் ரவூப் ஹக்கீமை நோக்கி முன்வைக்கப்படுகின்றன.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளுக்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் அண்மைக் காலத்தில் எதிர்கொண்ட அனர்த்தங்கள் அடங்கிய ஆவணங்களுடன் கூடிய ஆதாரங்களை கையளிதது வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக அண்மையில் உலக இஸ்ராமிய பிரதிநிதிகளுக்கும் இந்த ஆணவனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் கையளிக்கப்பட:டுள்ளது. இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகள் அடங்கிய ஆவணங்கள் ஏற்னகவே அரபு நாடுகளிடம் காணப்படும் நிலையிலும், அதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிருப்தியடைந்துள்ள நிலையிலும், தற்போது ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகளிடம் அந்த ஆவணங்களை மீண்டும் கைளித்துள்ளமை அரசாங்கத்திற்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஊவா மாகாண தேர்தலுக்கு முன்னதாக ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவியை பறிப்பது எனவும், ஹக்கீம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டார் எனக் பிரச்சாரப்படுத்தி ஓரளவு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கத் தரப்பு கணக்கு போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவியை பறித்துவிட்டு, பசீர் சேகுதாவூத்தின் அமைச்சுப் பதவியில் கை வைக்காமல் விடுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் ஒரு பிரச்சினையை உருவாக்கி மீண்டுமொரு தடவை முஸ்லிம் காங்கிரஸினை பிளவுபடுத்த அரசாங்கத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த விட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு எடுத்துக்கூறின.

இருந்தபோதும் ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவியை பறித்து, அவரை வீட்டுக்கு அனுப்பினால் அது முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமாக போய்விடுமென சில ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதும் இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த எத்தகைய இறுதி முடிவுகளையும் எடுக்காத நிலையில், ரவூப் ஹக்கீம் நாட்டுக்கு துரோகமிழைத்து விட்டார் என குற்றமசுமத்தி அவரிடமிருந்து அமைச்சுப் பதவியை பறிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

6 comments:

  1. அல்லாஹ் உங்கள் கரங்களை பலப்படுத்துவானாக

    ReplyDelete
  2. NaamIwarkalikku payanthu waala wendiya awasiyam illai naam allahwukku mattum payantha samukam .naam iwarkalukku payanthal iwarkaludaiya attakaasam koodum kurayaathu yaa allah muslim leaderkalai otrumaippaduththuwaayaaka.aameen.

    ReplyDelete
  3. என்னை பொறுத்தவரை பொது பல சென தற்போது அடங்க காரணம் ரவ்ப் ஹகீம் பிரச்சினையை உலகத்துக்கு கொன்று சென்றதாலே அவர் பதவி பறிக்கப்படுமானால் அது எங்களுக்காக முஸ்லிம் மகாளுக்காக குரல் கொடுத்ததாலே இன்ஷா அல்லாஹ் அவருக்கு நல்லவை நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  4. இது ஒரு ஊத்தை அரசாங்கம் அதில் நமக்கு ஒரு உப்புச்சப்பில்லாத பதவி அந்தப்பதவி இருந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே.... முஸ்லிம்களுக்காக நல்லது செய்ய இப்படியொரு பதவியை விடுவதில் கவலையில்லை. எதோ அரசாங்கத்துடன் ஒண்டி இருந்தால் மக்களுக்கு எதாவது நல்லது செய்யலாம் என்று எதிர்பார்த்திருப்பார். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. இந்த அரசாங்கத்துடன் இருந்தும் நமக்கு இவ்வளவு கஸ்டமான கதி என்றால் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நிலைமை. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, அல்லாஹ் இருப்பதவியை விட மேலானாதை கண்டிப்பாக அவருக்கு வழங்கி வைப்பான் அவர் உள்மனதின் எண்ணப்படி. ஆனால் இந்த ஆட்சி மாறவேண்டும் அதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது. இதை எஞ்சியுள்ள பெளத்தர்களும் உரணவேண்டும் அதை செய்வதற்கு வழி....

    ReplyDelete
  5. Pazavi enpazu allah koduppazu azaikoduthu allah sozippan.muslimgalai evvalavu nalaikuthan ematra mudiyum allah oruvan parthukondirukiran. Kavanam innamum game vilayada Ninakavenam.game vilayadinavanga eppadipponanga enru ungalukku nallave theriyum. Be careful. Allahvudaya thandanayil irundhu iniyaavazu payandhuhollungal.neezi amaichar pazaviyil irundhu kondu aneeziyaha aeeziyaha Nadandheenga.allahzan ungalai mannikkanum.

    ReplyDelete
  6. ரவுப் ஹகீம் அவர்ஹளுக்கு இறைவன் எப்பொழுதும் துணை இருப்பானாக ஆமீன் ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.